Skip to main content

Posts

Showing posts from 2011

பீர் விற்பனை ஜோரோஜோர்

உலகில் அதிக அளவில் விற்பனையாகும் "ஸ்னோ"பீர் -ஒரு சீனா தயாரிப்பு உலகம் முழுவதும் உள்ள மக்களால், தண்ணீர், டீ ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, அதிகமாக விரும்பி குடிக்கப்படும் பானம் எது தெரியுமா? சந்தேகமே வேண்டாம்... பீர் தான். அதுவும், மேற்கத்திய நாடுகளில், பீர் குடிப்பது சர்வ சாதாரணம். ஜெர்மனி, பிரிட்டன், பெல்ஜியம், அமெரிக்கா போன்ற நாடுகளில், ஒவ்வொரு ஆண்டும் பீருக்காக, திருவிழாக்களே நடத்தப்படும் நடைமுறை உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் தான், பீர் அதிகமாக விற்பனையாகி வந்தது. ஆனால், சமீபகாலமாக இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில், பீர் விற்பனை திடீரென அதிகரித்துள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகளில், பீர் விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக, சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வில் ஆச்சரியமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், பீர் விற்பனை, 72 சதவீதம் வரை, சரிவை சந்தித்துள்ளது. பீர் குடிப்பதால், உடல் எடை அதிகரித்து விடுகிறது என, அமெரிக்க மக்களிடையே கருத்து எழுந்துள்ளது தான்

"அப்புசாமி - சீதா பாட்டி இசைக் கூடல்' ஓர் வித்தியாசமான இசைவிழா

  சென்னையில் வாழும் ரசிகர்களின் ரசனையும், ருசியும் அலாதியானது. நல்ல சாப்பாடு, சங்கீதம், எழுத்து, நாடகம், நாட்டியம், ஓவியம் எல்லாவற்றையுமே அவரவர்களின் தேடலுக்கு ஏற்ப அணு அணுவாக ரசிக்கும் ரசனை உடையவர்களில் முதலிடம், சென்னைவாசிகளுக்கே உண்டு. ரசனை - ரசிக்கும் தன்மை மக்களிடையே நல்ல உறவை வளர்க்கும். பரஸ்பர அன்புடன் நல்ல சமுதாயத்தையும் உருவாக்க முடியும். "அப்புசாமி - சீதா பாட்டி' இசைக் கூடல் அமைப்பும், ரசனையை வளர்க்கும் நல்லதொரு விஷயத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அமைப்பாகும் . இந்த இசைக் கூடலில், சிறந்த சமூக சேவகியான டாக்டர் ஷ்யாமா, பத்திரிகையாளர் காந்தலட்சுமி சந்திரமவுலி, தேஜோமயி கல்வி மையங்களின் தலைவர் உமாயோகேஸ்வரன் இவர்களுடன், பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். அக்கறை என்னும் அமைப்பையும் இவர்கள் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. "அப்புசாமி - சீதா பாட்டி' நகைச்சுவை பாத்திரத்தை உலவவிட்டு நிலை நிறுத்தியவர் எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் ஆவார். அவர் இதை நடத்தும் குழுவில் முக்கியமானவர். மகாத்மா காந்தி பிறந்

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீப ஒளி திருநாளாம் தீபாவளி இன்று முதல் அறியாமை இருள் அகலட்டும், ஊழல் அரக்கன் மடியட்டும், வாழ்வில் எல்லா நலன்களும் மேலோங்கட்டும்.

Three Coffees A Day Keep The Strokes Away, Say Scientists

 If you can’t make it through the day without your daily caffeine hit, here’s some good news for you – drinking two to four cups of coffee a day could significantly reduce your risk of a stroke.  The study, led by scientists at the Karolinska Institute in Stockholm, Sweden, delved into the already divided debate among health experts on whether coffee can have health benefits. The comprehensive research, which involved half a million people studied from the mid 1960s to 2011, discovered that people who drank two cups of coffee a day, reduced their risk of a stroke by 14%. Furthermore, big coffee drinkers, who downed up to four cups a day, were 17% less likely to suffer from a stroke or blood clots. It’s believed that the antioxidants found in coffee act as a powerful preventative towards the build-up of lipoprotein in the brain, or in non-science speak, ‘bad cholesterol’, which can cause blood clots. Interestingly, the good antioxidants are only found in coffee (ev

பாயிண்ட் பிரேக் (Point Break) -"அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் அடிக்கும் வங்கிக் கொள்ளைகள்" - ஆங்கிலப் பட விமர்சனம்

 ஜானி (கினு ரீவ்ஸ்) ஒரு இளம் FBI அதிகாரி. அவன் வேலை பார்க்கும் லாஸ் ஏஞ்சலிஸ் (லாஸ் ஏஞ்சல்ஸ் என்பது தவறு) நகரில் அடிக்கடி பிரபல வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளின் உருவமுள்ள முகமூடிகளை அணிந்த ஒரு நால்வர் குழு இந்தக் கொள்ளைகளை மிக வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் நடத்திவிட்டு தப்பிச் செல்கிறது. ஜானியின் மேலதிகாரியான ஏஞ்சலோ பாப்பாஸ் (கேரி புசி) இந்தக் கூட்டத்தைப் பிடிக்க வழி தெரியாமல் தவிக்கிறார். பல நாட்களாக நடக்கும் இந்தக் கொள்ளைகளின் பல வீடியோக்களை ஆராய்ந்து அவர்கள் தேர்ந்த wind surfer களாக (தண்ணீருக்கு மேல் பலகையின் மூலம் சறுக்கி விளையாடுவது) இருக்க வாய்ப்பிருக்கிறது என்று ஜானியிடம் சொல்கிறார். எப்போதுமே இது போன்ற தீர விளையாட்டுகளில் (adventue sports) ஆர்வமுள்ள ஜானி இது போன்ற குழுக்களை ஆராய்ந்து ஒரு குறிப்பிட்ட குழுவில் சேர ஆர்வம் காட்டுகிறான். வங்கிகளைக் கொள்ளை அடிக்கும் நால்வர் குழுவின் எல்லாவிதமான குணாதிசயங்களும் உள்ள அதே போன்ற நான்கு பேர் கொண்ட ஒரு குழுவில் தன்னை ஒரு தேர்ந்த surfer ஆக்க அவர்கள் உதவ வேண்டுமென கேட்டுக் கொள்கிறான். அந்தக் குழுவின் தலைவனான

அரக்கோணம் ரயில் விபத்து: அரசு விழித்துக் கொள்ளுமா?

 இன்னுமொரு ரயில் விபத்து. இதுவரை 13 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். காரணம் எப்போதும் போல இன்னும் அறியப்படவில்லை. அரக்கோணம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. கடந்த முதல்வரோ, இன்றைய முதல்வரோ போட்டி போட்டுக் கொண்டு இலவச தொலைக் காட்சி பெட்டி, இலவச கிரைண்டர், மிக்சி என்று நம் வரிப் பணத்தை பாழடிப்பதை விட்டுவிட்டு இதுபோன்ற வசதிகளை பெருக்குவதற்கு ஏன் முயற்சிப்பதில்லை? இந்த ஞானோதயம் இவர்களுக்கு வர இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோமோ தெரியவில்லை.

உலக சினிமா இதுவரை கண்டிராத அதிரடி சண்டைக் காட்சி!

ஆஹா, வந்துட்டார்யா, வந்துட்டாரு! இனி , விஜய் , சூர்யா, அஜித்  எல்லாம்  காலி .  எனக்கு  ஒரு  பெரிய  ஆசை ; மக்கள்  நாயகன்  ராமராஜனும் டி.ராஜேந்தரும் ஒன்னு சேந்து ஒரு படத்துல நடிக்கணும் . அப்புறம் , தமிழ்நாட்டுக்கு சுனாமி எல்லாம்  வேண்டாம் , தன்னால  அழிவு  வந்துடும் . ஹைய்யோ, ஹைய்யோ ...செம காமெடி!

Contagion - ஆங்கிலப் பட விமர்சனம்

 கண்டேஜியன் (Contagion ) என்றால் தொற்றுநோய் (Contagious disease ) பரப்பக் கூடிய தொற்றுகிருமி. ஆங்கிலத்தில் டிஸாஸ்டர் (disaster ) வகைப் படங்கள் நிறைய உண்டு. பேரழிவைக் காட்டக் கூடிய படங்களைத் தயாரிப்பது ஹாலிவுட் ஆட்களுக்கு லட்டு சாப்பிடுவது மாதிரி. கதை கொஞ்சம் சுமாராக இருந்தால் கூட CG/ அனிமேஷன் மூலம் மிரட்டி விடுவார்கள். சமீபத்தில் வந்து வெற்றி பெற்ற 2012 ஒரு சிறந்த உதாரணம்.  உலகையே கிடுகிடுக்க வைக்கும் பயங்கரமான நோய்களை வைத்து இதற்கு முன் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. கண்டேஜியன் படத்தின் சிறப்பம்சம் அதன் மிகச் சிறந்த நடிகர்கள் பட்டாளம்; Matt Damon, Lawrence Fishburne, Jude Law, Kate Winslet, Gwyneth Paltrow என்று அட்டகாசமான நட்சத்திர வரிசை, அதன் இயக்குனர் Steven Soderbergh (Oceans 11, 12 & 13, Erin Brokovich, Traffic, Che), அட்டகாசமான ஒளிப்பதிவு, மிரட்டும் இசை, மின்னல் வேகத்தில் நகரும் திரைக்கதை என்று நிறைய சொல்லலாம். படத்தில் Matt Damon மனைவியாக வரும் Gwyneth Paltrow ஹாங்காங் சென்று வருகிறார். சாதாரண தும்மல், இருமல் என ஆரம்பித்து வீட்டுக்கு வந்தவுடன் வலிப்பு வந்து விழுகிறார்.

ஆங்கிலப் பட விமர்சனம் - Winter's Bone - வாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் பார்க்கணும்

நீ பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இடையே நீ தெரிந்து கொள்ளக் கூடாத உண்மைகள் இருக்கின்றன  அமெரிக்காவின் ஓசார்க் (Ozark Region) மிசௌரி மற்றும் ஆர்கன்சாஸ் இடையே உள்ள ஒரு இடம். அதிகம் இயற்கை வளமோ, ஒரு நகரத்திற்குரிய முன்னேற்றம் எதுவும் இல்லாத ஒரு (கிட்டத்தட்ட) வறண்ட பூமி. கதாநாயகி ரீ டாலி (Jennifer Lawrence) தந்தை போதை மருந்து அடிமை. அடிக்கடி போதை மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் அவனால் குடும்பம் தனித்து விடப்பபடுகிறது. ரீயின் தாய் மனநிலை சரியில்லாத நிலையில், தாயையும், இரண்டு உடன் பிறப்புகளையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு 17 வயதான ரீயின் தலையில் விழுகிறது. உதவிக்கென யாருமே இல்லாத நிலையில் குடும்பத்தைக் காப்பாற்றும் முயற்சியில் மிகவும் கஷ்டப்படுகிறாள் ரீ. திடீரென ஒரு நாள் வீடு தேடிவரும் காவல் அதிகாரி ரீயின் தந்தை ஜாமீனில் வெளிவரும் பொருட்டு, அதற்கு பிணயமாக அவர்கள் வசிக்கும் வீட்டை எழுதிக் கொடுத்துவிட்டதாகவும், அடுத்த வாரத்தில் வழக்கு நடக்கும் நீதி மன்றத்துக்கு வரவில்லை என்றால் அவர்களின் வீடு பறிமுதல் செய்யப் படும் என மிரட்டுகிறார்.  ரீ அவளுடைய தந்தையைத் தேடிக் கண்டுபிட

சூப்பர் ஸ்டார் ரஜினி-மீண்டு(ம்) வருக-உங்களுடைய கோடானு கோடி ரசிகர் சார்பில் வேண்டுகோள்

 சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினியை கவிஞர் வைரமுத்து சமீபத்தில் நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். ரஜினியுடனான தனது சந்திப்பு குறித்து வைரமுத்து குமுதம் பத்திரிகைக்கு எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில் சில பகுதிகள்: 120 நாட்களுக்குப் பிறகு ரஜினியைச் சந்திக்கப் போகிறேன். பரவசம் போலொரு துயரம்; துயரம் போலொரு பரவசம் நெஞ்சில் பரவி நிற்கிறது.   வாழ்வின் விளிம்புவரை சென்று மீண்ட புகழ்மிக்கதொரு பெருங்கலைஞனை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவிருக்கிறேன். எத்தனை வதந்திகள்! எத்தனை தொலைபேசி அழைப்புகள்! ‘வீரன் ஒரு முறை சாகிறான்; கோழை பலமுறை சாகிறான்’ என்ற பழமொழி உண்டு. அதில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய மூன்றாம் வரி ஒன்றுண்டு: ‘புகழ்மிக்கவன் அடிக்கடி கொல்லப்படுகிறான்.’ பொய்களில் பிறந்த கற்பனைகளையெல்லாம் பொடிப் பொடியாக்கிவிட்டு நிஜத்தைப் போல நிமிர்ந்து வெளிவந்துவிட்டார் ரஜினி. மருத்துவத்தின் அறிவும் மனிதர்களின் அன்பும் அவரை இன்று மீட்டெடுத்துக் கொண்டு வந்து காட்டிவிட்டன கண்களில். நோயின் பிடியிலிருந்து விடுபட்டு விட்டாலும் அது ப

காஜல் அகர்வால் -முதலில் டாப்லெஸ் போஸ், பிறகு ஐயோ, அம்மா

பொதுவாகவே நம்மூர் (கோலிவுட்) நடிகைகள் ரொம்ம்ம்ப... நல்லவர்கள் (வடிவேலு சொல்லுவதைப் போல சொல்லி பார்க்கவும்). ஆறாவது படித்துவிட்டு விஸ்காம் படிக்கலாம் என நினைத்தேன் அதற்குள் நல்ல வாய்ப்பு வந்து நடிகையாகிட்டேன் என்பார்கள், காதலித்துக் கொண்டே இது வெறும் நட்புதான் என்பார்கள், கல்யாணம் ஆனா பிறகும் தான் தனிக்கட்டை(!) தான் என்று சாதிப்பார்கள். இவர்கள் எல்லோரையும் காஜல் அகர்வால் ஊதித் தள்ளிவிட்டார். பின்னே, அருமையாக டாப்லெஸ் போஸ் கொடுத்துவிட்டு, அந்த படம் இன்டர்நெட்டின் இவ்வளவு தூரம் பிரபலம் ஆகும் என்று தெரியாமல் இருந்துவிட்டு, இப்போது அய்யோ, அது நான் இல்லை வெறும் morphing என்று இவர் எவ்வளவு கத்தினாலும் அது graphics வேலை எதுவும் இல்லை அசல்தான் என்று நன்றாக, அப்பட்டமாகத் தெரிகிறது. ஹ்ம்ம்ம்...நீங்களே பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள். (ஆடையுடன் இருக்கும் மற்ற படங்கள் ச்சும்மா போனஸ்!! என்சாய்.

வேற்று கிரக வாசிகளின் வருகையும், நம் உலகத்தின் அழிவும்?

அழிந்து விடுவோமா? வேற்று கிரக வாசிகளின் வருகை பற்றி ஏராளமாக சலிக்க, சலிக்க புத்தகங்களும், ஹாலிவுட் திரைப் படங்களும் வந்தவண்ணம் உள்ளன. இதில் அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு சுவாரசியமான ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்டுள்ளனர். இதில்  வேற்று கிரக வாசிகள் (ETI எனப்படும் Extra Terrestrial Intelligence) இந்த பரந்த அண்டத்தில் எங்காவது இருக்கிறார்களா?, அல்லது  நாம் மட்டும்தான் இருக்கிறோமா?,  அவ்வாறு அவர்கள் இருக்கும் பட்சத்தில் ஏன் இதுவரை நம்மைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை?,  நாம் கிட்டத்தட்ட 50 வருடங்களாக முயன்றும் ஏன் நம்மால் எந்தவிதமான தொடர்பும் (Contact) ஏற்படுத்த முடியவில்லை?  அவர்கள் நம்மைவிட அதி புத்திசாலிகளாக இருப்பதால் நம்முடன் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லையா அல்லது நம்மைப் போலவே அவர்களும் இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தில் நம்மைத் தேடுகிறார்களா? நம்முடைய தேவை நாளுக்குநாள் வளர்ந்துவரும் நேரத்தில், நம்முடைய அகோரப் பசிக்கு உலகம் அழியும் முன் காப்பதற்கு அவர்கள் முயற்சிப்பார்களா? ஒரு வேளை அவ்வாறு அவர்கள் இவ்வுலகிற்கு வ

ஊழலை எதிர்ப்போம்

    அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போரைப் பற்றி செய்தித்தாள்களும், தொலைக் காட்சி சானல்களும் வரிந்து கட்டிக் கொண்டு எழுதிவரும் இந்த நேரத்தில் சில தேவையில்லாத சம்பவங்களும் நடக்கின்றன.   ஊழலின் மொத்த உருவமான சில அரசியல்வாதிகளும், மக்களுக்கு இதுவரை எந்தவித நன்மையையும் செய்திராத சில அரசியல் கட்சிகளும் இதில் குளிர் காய்ந்து ஆதாயம் காண முனைந்துள்ளன.  பொது மக்களின் வரலாறு காணாத ஆதரவு அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு கிடைத்துள்ளதைக் கண்டு, என்ன நடந்தாலும் மக்களுக்கு நல்லது நடக்கக் கூடாது என்ற முனைப்பில் இருக்கும் நம் மத்திய அரசு, விதவிதமாக இந்த அறப் போராட்டத்துக்கு இடையூறு செய்து வருகிறது.  இன்று அன்னாவுக்கு ஆதரவாக சேர்ந்து வரும் கூட்டம், நம்முடைய அரசியல் கட்சிகள் கூட்டுவதுபோல குவாட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் சேரும் கூட்டம் அல்ல. நாடெங்கிலும் சாதி, மதம், தொழில், கல்வி என்று எந்தவிதமான வேறுபாடும் பார்க்காமல், ஊழலையும், அரசியல்வாதிகளையும் கண்டு சலித்துப்போன சாமானியர்களின் கூட்டம். இதில் லேட்டஸ்ட், இந்தப் போராட்டம் மேல் சாதியினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இதில் தலித் மக்கள் பங்கேற்க மா

பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் ரூ.400 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள்!

திருவனந்தபுரம்:  பத்மநாப சுவாமி கோவிலில், பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள ஆறு அறைகளில், மூன்று அறைகளை திறந்து கணக்கெடுத்ததில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர, மரகத, வெள்ளி நகைகளும், மதிப்பு மிக்க கலைப் பொருட்களும் இருப்பது தெரியவந்தது.  கேரளா, திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவிலில், பூமிக்கடியில் ஆறு அறைகள் உள்ளன. இவற்றில், இரு அறைகளில் ஒன்றில் நித்ய பூஜைக்கான பொருட்களும், மற்றொன்றில் கோவில் உற்சவத்திற்கு பயன்படும் பொருட்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நித்ய பூஜைக்கான பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறை, தினமும் திறக்கப்படும். உற்சவ பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறை, ஆண்டுக்கு ஐந்து முறை மட்டுமே திறக்கப்படும்.

அண்ணா சாலையில் போக்குவரத்தை நிறுத்திய போக்குவரத்து போலீசாரின் அராஜகம்

செய்தி: சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும்,"இ-சலான்' மற்றும்"போர்ட்டபிள் சோலார் சிக்னல்' திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். சென்னை நகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரையும், திருட்டு வாகனங்களை எளிதில் கண்டுபிடிக்கும் விதமாகவும்,"இ-சலான்' எனும் மின்னணு ரசீது வழங்கும் திட்டத்தை, போக்குவரத்து போலீஸ் அறிமுகப்படுத்தியது.  போக்குவரத்து சிக்னல் பழுதான இடங்கள், அதிக வாகன போக்குவரத்து இருந்தும் சிக்னல் பொருத்த முடியாத இடங்கள், வி.ஐ.பி.,க்கள் போக்குவரத்தின் போது பயன்படுத்தத்தக்க வகையில், எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட," போர்ட்டபிள் சோலார் சிக்னல்' அமைப்பும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இவை இரண்டையும், சென்னை அண்ணா சாலை போலீஸ் நிலைய வளாகத்தில் நடந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.  நேற்று இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்: எல்லாம் ஓகேதான், ஆனால் இதற்காக நேற்று அண்ணா சாலை, எக்மோர் என்று எல்லா பிரதான சாலைகளிலும் நேற்று சொல்ல முடியாத அளவு வாகன நெரிசல் ஏற்பட்டது. அண்

இறப்பதற்கு முன் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய 5 ரகசியங்கள்: படித்ததில் பிடித்தது

ஜான் பி.இஸோ (John B .Isso) எழுதிய The  Five Secrets You Must Discover Before You Die என்ற மிக அருமையான புத்தகத்தை (178 பக்கங்கள் மட்டுமே) இன்று ஒரே மூச்சில் படித்து முடித்தேன். வாழ்வின் குறிக்கோள் என்ன, நாம் வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும், அமைதியான, மகிழ்வான வாழ்வு வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மிகச் சுருக்கமாக, மிகத் தெளிவாக (lucid) கூறும் நூல் இது. கோடீஸ்வரனாக வேண்டும், சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும், டெண்டுல்கர் போல் ஆக வேண்டும் என்றெல்லாம்  உசுப்பேற்றாமல்  யதார்த்தமான விஷயங்களை சொல்லி இருக்கிறார் இந்த புத்தக ஆசிரியர். ஒரு முழுமையான, அர்த்தமுள்ள வாழ்வு வாழ என்ன செய்ய வேண்டும், அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்களை தேடிப் பிடித்து கிட்டத்தட்ட 200 பேருக்கும் மேல் இன்டர்வியு செய்து அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் என்னென்ன செய்தார்கள்/செய்கிறார்கள் என்று அலசி, அதை 5 ரகசியங்களாக மாற்றி இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளார் ஜான். பணம் இருக்கிறதோ இல்லையோ, வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியுடன் வாழும் நிறையப் பேரை நாம் பார்த்திருப்போம்; பணம், வசதி, சொகுசு வாழ்வு என்று எல்லாம் இருந்தும் மன அமை

கணவர்கள் விற்பனைக்கு: படித்ததில் பிடித்தது.

எதுவும் கிடைக்கும் நியு யார்க் நகரில் ஒரு புதிய கடை திறக்கிறார்கள், "கணவர்கள் விற்பனைக்கு," என்ற பெயரில். அந்தக் கடையில் மொத்தம் 6 மாடிகள். உள்ளே நுழையும் பெண்கள் ஒவ்வொரு மாடியாக கீழேயிருந்து மேலே சென்று அவர்களுக்கு பிடித்தமான கணவனைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரே ஒரு கண்டிஷன்: மேலே இருந்து கீழே வர முடியாது.  முதல் நாளே கடையில் கூட்டம் அம்முகிறது. ஒரு அழகான பெண் வரிசையில் நின்று களைத்து போய் கடைக்குள் நுழைகிறாள்: முதல் மாடி: "இங்கு,  கடவுள் நம்பிக்கை உள்ள, நல்ல பதவியில் இருக்கும் கணவர்கள் கிடைப்பார்கள்" என்று ஒரு போர்டு இருக்கிறது. அந்தப் பெண் அடுத்த மாடிக்கு அதிக எதிர்பார்ப்புடன் செல்கிறாள். இரண்டாம் மாடி: " இங்கு, கடவுள் நம்பிக்கை உள்ள, நல்ல பதவியில் இருக்கும, குழந்தைகளை விரும்பும்  கணவர்கள் கிடைப்பார்கள்" என்று ஒரு போர்டு இருக்கிறது. அந்தப் பெண் அடுத்த மாடிக்கு அதிக எதிர்பார்ப்புடன் செல்கிறாள். மூன்றாம் மாடி: " இங்கு, கடவுள் நம்பிக்கை உள்ள, நல்ல பதவியில் இருக்கும, குழந்தைகளை விரும்பும், மிக அழகான கணவர்கள் கிடைப்பார்கள்" என்று ஒரு போர்டு இருக்கிற

என்றும் சுஜாதா - எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள புத்தகத்தைப் பற்றி என் விமர்சனம்.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதி உயிர்மை பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தை நேற்று படித்தேன். புத்தகத்தின் ஆரம்பத்திலேயே ஆசிரியர் உஷாராக, " இந்தப் புத்தகம் Sujatha reader அல்ல. இது சுஜாதாவின் பன்முகத்தன்மை என நான் எதைக்கருதுகிறேன் என்பதற்கான தொகை நூல். சுஜாதா என்ற எழுத்து ஆளுமையின் பரந்து பட்ட விருப்பங்கள், ஈடுபாடுகள், அக்கரைகளையே நான் முதன்மைப் படுத்தியிருக்கிறேன். ஆகவே இது சுஜாதா படைப்புகளில் ஒரு குறுக்கு வெட்டுப்பார்வை போல உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே இதன் தனிச்சிறப்பு" என்று சொல்லிவிட்டார்.  எஸ்.ரா எழுதிய புத்தகம் என்பதால் எனக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்து, அது இந்தப் புத்தகத்தை படித்தவுடன் காற்றாகிப் போனது என்பதால் மட்டும் நான் அதிருப்தி அடையவில்லை. புத்தகத்தில் எதுவுமே புதிதாக இல்லை என்பதுதான் வேதனையான விஷயம். சுஜாதாவின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களின் கோர்வையாக இல்லாவிட்டலும், அட்லீஸ்ட், அவருடைய படைப்புகளின் ஒரு விமர்சனமாக இருந்திருக்கலாம். அல்லது, சுஜாதாவின் இன்னின்ன படைப்புகளைப் பற்றி என்னுடைய கருத்து இது என்றாவது சொல்லி இருக்கலாம். அதுவும் இல

ஹானா-அதிரடி கலந்த அழகான ஆக் ஷன் படம்

 ஹாலிவுட் ஆக் ஷன் படங்கள் பொதுவாக கரம் மசாலா கலந்த சுத்தமான அடிதடி படங்களாகவே இருக்கும். எப்போதாவது ஒருமுறைதான் ஹானா போன்ற அழகான ஆக் ஷன் படங்கள் வெளிவரும். பனிபடர்ந்த காட்டின் நடுவே மானை வேட்டை ஆட ஹானா (Saorise Ronan) பொறுமையாக வில் மற்றும் அம்புடன் காத்திருக்கும் காட்சியில் ஆரம்பிக்கிறது படம். கிட்டத்தட்ட ஒரு மாடு சைசில் வரும் அந்த மானை அம்பு எய்தி கொள்கிறாள் ஹானா (. அம்புடன் சிறிது தூரம் ஓடிவிட்டு கீழே விழும் அந்த மானை நெருங்கி, "ஸாரி, உன் இதயத்தை மிஸ் செய்துவிட்டேன்," என்று சொல்லிவிட்டு துப்பாகியால் அதைப் போட்டுத் தள்ளுகிறாள் ஹானா. யாருமே இல்லாத அந்த பனிபிரதேசத்தில் (வடக்கு பின்லாந்த்) தன்னுடைய தந்தையால் (Eric Bana) ஒரு முக்கிய குறிக்கோளுடன் வளர்க்கப்படுகிறாள். தந்தை அமெரிக்க உளவு நிறுவனமான CIA யில் பணிபுரியும்போது சில துரோகிகளால் பெரிய ஆபத்தில் மாட்டிகொண்டு பின் தப்பிவிடுகிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஹானாவின் தாய் கொல்லப்டுகிறாள். ஹானாவின் தந்தை ஹானாவுடன் ஆளரவமில்லாத பனிபிரதேசத்தில் வாழ்கிறார். ஹானா தன்னை எல்லாவிதத்திலும் தயார் செய்துகொண்டவுடன், தன்னை ஏடாகூடமாக சிக்க

சுஜாதா: மறைந்த முன்னோடி-ஒரு நல்ல கட்டுரை. எழுதியவர் ஜெயமோகன்.

 சமீபத்தில் இணையத்தை துழாவிக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட ஒரு நல்ல கட்டுரை. எழுதியவர் ஜெயமோகன். சுஜாதவின் எழுத்து ஆழம் இல்லாதது என்கிறார். நிறைய இடங்களில் சுஜாதாவை ஏராளமாக புகழ்ந்து எழுதினாலும் அவருடைய எழுத்தில் ஆழம் இல்லை எனவே அதற்கு இலக்கியத் தரம்  இல்லை என்கிறார். ஆழமில்லை, ஆழமில்லை என்பவர்கள் அவருடைய நகரம், ரேணுகா, பாலம்  போன்ற   பல்வேறு சிறுகதைகளைப் போல எழுத முடியுமா என்று முயற்சிக்க வேண்டும். என்ன பெரிய இலக்கியம், புடலங்காய். என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான வாசகர்கள் வாசித்து, மகிழ்ச்சியாக பிறருடன் பகிர்ந்து கொள்ளும் படைப்பே சிறந்த இலக்கியம். மற்றதெல்லாம் வெறும் ஜம்பம். சில நாட்களுக்கு முன் ராபர்ட் டௌனி ஜூனியர் நடித்த ட்யு டேட் (Due Date) பார்த்தேன், அதில் ஷேக்ஸ்பியரின் வரிகளை சொல்லிவிட்டு, ராபர்ட் டௌனி அவரை ஹிம்சித்துக் கொண்டிருக்கும் ஜாக் கலிபியானகிஸ் (Zach Galifianakis) என்ற நடிகரிடம் ஷேக்ஸ்பியரைத் தெரியுமா என்று கேட்பார். அதற்கு அந்த காமெடி பீஸ், "ஓ, தெரியுமே, அவர் ஒரு பைரேட் (கடல் கொள்ளைக்காரன்) தானே," என்பான். இலக்கியத்தின் ரீச் அவ்வளவுதான்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மோசமான நாடுகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

அமெரிக்காவை சார்ந்த செய்தி நிறுவனமான தாம்சன் ராய்ட்டர்ஸ் (Thomson Reuters) சமீபத்தில் வெளிட்டுள்ள அறிக்கை ஒன்று உலகெங்கிலும் அதிர்ச்சி அலையைக் கிளப்பியுள்ளது. அந்த அறிக்கையின்படி, உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான், இரண்டாவதாக காங்கோ, மூன்றாவதாக பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இருக்கின்றன.  இதில் என்ன அதிர்ச்சி? இந்த வரிசையில் நான்காவது இடத்தில் இருப்பது இந்தியா!!! ஆமாம், இந்தியாவேதான். இது என்ன கூத்து என்று கேட்கலாம். அந்த அறிக்கையில் காரணங்கள் இருக்கின்றன. எந்தெந்த விதத்தில் பாதுகாப்பின்மை இருக்கிறது என்று பார்த்தால், இந்த அறிக்கை அதை பல்வேறுவிதமான அளவீடு (parameters) மூலம் கணக்கிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் : இங்கு வாழும் 11 பெண்களில் ஒருவர் மகப்பேறு காலத்தில் தகுந்த கவனிப்பு இல்லாமல் இறக்கிறார். கிட்டத்தட்ட 87 % பெண்கள் படிப்பில்லாமல் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 80 % பெண்கள் விருப்பமில்லாமல் திருமணத்திற்கு வற்புறுத்தப்படுகிறார்கள். காங்கோ : இங்கு வாழும் பெண்களில் கிட்டத்தட்ட 4 . 5 லட்சம் பெண்கள் ஒவ்வொரு வருடமும் கற்பழிக்கப்படுகிறார்கள்

எலே, நாங்க மதுரக்காரங்கடீ

பில் கேட்ஸ் தன்னுடைய நிறுவனத்தை நிர்வாகிக்க ஒரு புதிய தலைவரைத் தேர்வு செய்ய நினைக்கிறார். வேலை தேடி நேர்முகத் தேர்வுக்கு 5000 பேருக்கு மேல் வரவே, அவர்களை மிகப் பெரிய ஒரு அறையில் சந்திக்கிறார். அவர்களில் ஒருவர் நம் நண்பர் ராமசாமி. பில்  கேட்ஸ் : உங்கள் வருகைக்கு நன்றி. ஜாவா  தெரியாதவர்கள் போகலாம்.  2000 பேர் அறையைவிட்டு வெளியேறுகின்றனர். ராமசாமி  தனக்குள் சொல்லிக் கொள்கிறார்: 'நமக்கு ஜாவா யார் என்று தெரியாது. இருந்தாலும் இருந்துதான் பார்ப்போமே!' பில்  கேட்ஸ் : யாருக்கெல்லாம் 100 பேருக்கு மேல் தலைமை வகித்த அனுபவமில்லையோ அவர்கள் செல்லலாம்.   2000 பேர் வெளியேறுகின்றனர்.  ராமசாமி  தனக்குள் சொல்லிக் கொள்கிறார் 'நாம் யாருக்குமே /எங்குமே தலைமைப் பதவி தாங்கியது இல்லை. இருந்தாலும் என்னதான் ஆகிறது என்று பார்ப்போமே. நமக்குத்தான் ரிஸ்க்   எடுக்கறது  ரஸ்க் சாப்பிடற மாதிரி ஆச்சே  !' பில்  கேட்ஸ் : யாருக்கெல்லாம் மானேஜ்மென்ட் படிப்பில் டிப்ளோமா இல்லையோ, அவர்கள் போகலாம். 500 பேர் வெளியேறுகின்றனர். ராமசாமி  தனக்குள் சொல்லிக் கொள்கிறார், 'நாம்தான் 5 ம் வகுப்

உப்புமா செய்ததற்கு பரிசு ரூ.45 லட்சம் !!

 சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்த சமையல்  போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிளாய்ட் கார்டோஸ் (Floyd Cardoz) என்பவர் உப்புமா செய்ததின் மூலம் பரிசுத் தொகையாக 1 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.45 லட்சம் ) வென்று இருக்கிறார்.  இந்தப் போட்டியில் பங்கேற்றவர்களை உங்கள் நினைவில் நிற்கும் அல்லது நீங்கள் அதிகம் ஈர்க்கப்பட்ட ஒரு உணவு வகையை செய்யுங்கள், அதே சமயம் அது சத்துள்ளதாக இருக்க வேண்டும் என்று நடுவர்கள் சொல்லி இருந்தனர். நம்மூர் உப்புமாவில் பலவகையான காய்கறிகளுடன் ஊட்டச்சத்து மிகுந்த காளானையும் போட்டு  ஒரு புதுவிதமான உப்புமா செய்து முதல் பரிசை வென்றுள்ளார் பிளாய்ட். இவர் நியுயார்க் நகரில் "தபலா" எனப்படும் ஒரு ரெஸ்டாரண்டில் முதன்மை சமையற்காரராக (Chief Chef) பணியாற்றிவருகிறார். வாழ்வுதான். நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்

முன்னேறும் தமிழ்நாடு! சொகுசுக் கப்பல்கள் பற்றி ஒரு பார்வை

2004 ம் ஆண்டில் சிங்கபூரிலிருந்து சூப்பர் ஸ்டார் வர்கோ (SuperStar Virgo) மூலம் மலேஷியா (லங்காவி), தாய்லாந்து (புகெட்-Phuket) ஆகிய ஊர்களைப் பார்த்துவிட்டு திரும்பும்போது நண்பர்கள் எல்லோரும் புலம்பினோம், "இது போன்ற பயண வசதிகள் நம் தமிழ்நாட்டில் எப்போது வருமோ?" என்று.  நடுவில் ஒன்றிரண்டு க்ரூஸ் (சொகுசுக் கப்பல்) நிறுவனங்கள் இந்தியாவில் க்ரூஸ் சேவை ஆரம்பித்துவிட்டு, பின் நம் மத்திய அரசு கொடுத்த குடைச்சல் தாங்காமல் ஓடிவிட்டன. இப்போது சென்னையில் உள்ள அமெட் (AMET) தன்னிலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெட் க்ரூஸ் என்ற நிறுவனம் முதன்முதலாக சென்னையிலிருந்து க்ரூஸ் சேவை ஆரம்பித்திருக்கிறது. மற்றொரு க்ரூஸ் நிறுவனமான ப்லமிங்கோ லைனர்ஸ் (Flemingo Liners) தூத்துக்குடியிலிருந்து இலங்கையில் உள்ள கொழும்புவுக்கு ஸ்கோஷியா ப்ரின்ஸ் (Scotia Prince) என்ற சொகுசுக் கப்பலை இன்று முதல் இயக்குகிறது.  ஸ்கோஷியா ப்ரின்ஸ்: 1044 பயணிகள் பயணிக்கக் கூடிய இந்த சொகுசுக் கப்பல் வாரம் மும்முறை தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே பயணிக்கும். இந்த க்ரூஸில் எல்லாவிதமான வசதிகளும் இருக்கின்றன: நீச்சல் குளம், உணவு