Skip to main content

Posts

Showing posts from September, 2010

பால், பசும்பால், பருகப் பால்

 பசும் பாலில் ஏராளமான கால்ஷியம் சத்து இருக்கிறது, பால் பருகினால் உடலில் உள்ள கொழுப்பு குறையும் என்றெலாம் தினசரி தகவல்கள் வந்தாலும் இப்போதெல்லாம் யாருக்கு பால் பருக நேரம்/பொறுமை இருக்கிறது? அப்படியே நேரம் இருந்தாலும், நாம் பருக நல்ல தரமான பால் எங்கே (இந்தியாவில்) கிடைக்கிறது?  இதையெல்லாம் பார்த்த ஒரு ஸ்விஸ் நிறுவனம் ஆண்கள் பால் பருகுவதை ஊக்கப்படுத்த  ஒரு வினோதமான ஐடியா செய்து, அதில் பெரும் வெற்றியும் பெற்றுள்ளது. மார்க்கெட்டில் பாலை ஒரு குறிப்பிட்ட பாக்கிங்-இல் அறிமுகம் செய்தபின் வியாபாரம் ஒரே ஏறுமுகம்தான். உங்களுக்காக சில படங்கள் (வடிவேலு சொல்வது போல "ஒக்காந்து யோசிப்பாங்களோ"?)  : (அனுப்பிவைத்த நண்பர் சுந்தருக்கு நன்றி )

தஞ்சை பெரிய கோவில் - 1000 ஆண்டுகள் கடந்த ஒரு உன்னதம்

 தஞ்சை பெரிய கோவிலின் 1000 ஆண்டுகள் நிறைவு பெறுவது முன்னிட்டு இந்தப் பதிவு. "எழுத்துச் சித்தர்" பாலகுமாரன் கைவண்ணத்தில்: அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு??? இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி ( Heat Treatment ) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை ( oil quenching ) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப