Skip to main content

Posts

Showing posts from April, 2009

ஸ்விஸ் நாட்டிலுள்ள இந்திய கறுப்புப் பணம்!

ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போது அரசியல் கட்சிகள் புதிது புதிதாக வியூகங்கள் அமைத்து எதிர் கட்சியினரை தாக்குவார்கள். இந்த முறை பாஜக [BJP] எடுத்துக் கொண்டுள்ள ஆயுதம் ஸ்விஸ் நாட்டு வங்கிகளில் உள்ள கோடிக்கணக்கான கறுப்புப் பணம்! இந்தியாவைச் சேர்ந்தவர்களால் மட்டும் தற்போது 25 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 70 கோடி வரை சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி, பா.ஜ.,வை குறை கூறியே பிரசாரம் செய்வதென முடிவு செய்து விட்டது. பா.ஜ.,வை பொறுத்தவரை, ராமர் கோவில் போன்ற பிரசாரங்கள் எல்லாம் இனி அவ்வளவு எடுபடாது என தெரிந்து விட்டது. இதனால் தான் அக்கட்சித் தலைவர் அத்வானி, சுவிஸ் வங்கி விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளார். "பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் இருந்து சுவிஸ் வங்கியில் டிபாசிட் செய்யப்பட்ட பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என அத்வானி எழுப்பிய கறுப்பு பண விவகாரம், தற்போது அரசியல் கட்சிகளின் பிரசாரங்களில் எதிரொலிக்கத் துவங்கி விட்டன. இதனால், கறுப்பு பண சுரங்கமாகக் கருதப்படும் ச

பைரஸி பூதம்!

சமீபத்தில் பார்த்த அயன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். மலேசியாவிலிருந்து சூர்யா ஒரு திருட்டு மாஸ்டர் DVD யுடன் வருவார். அவரை கூட்டிப் போகவரும் பிரபு சொல்லுவார், " "நாளைக்குத் தான் இந்த படம் ரிலீஸ், அதுக்குள்ள எவ்வளவு பிரிண்ட் போடமுடியுமோ அவ்வளவு போட்டு வித்துடனும்." அது பாடலாக இருந்தாலும் சரி, அல்லது திரைப்படமாக இருந்தாலும் சரி சுடச் சுட உடனே பைரஸியாக வெளிவந்துவிடுகின்றன. பைரஸி dvd வாங்கக்கூடாது என்று என் நண்பி சுதாவைப் போல வெகு சிலரே பிடிவாதமாக இருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை இது டெக்னாலஜியின் சாபக்கேடு. என்னதான் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு திரைத் துறையினர் கவனமாக இருந்தாலும் எல்லா மொழிப் படங்களுமே உடனடியாக சந்தைக்கு வந்து விடுகின்றன. ரூ.10 முதல் 30 கிடைக்கும் இந்த [பெரும்பாலும்] பாடாவதியான ப்ரிண்டைப் பார்த்துவிட்டு படம் சூப்பர் என்றோ சொதப்பல் என்றோ உடனடியாக அந்த படத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது. இதுவே அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோடீஸ்வரனாகவோ அல்லது பீச்சில் கொண்டக்கடலை சுண்டல் விற்பவராகவோ ஆகிவிட வழிவகுக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் தமிழ் படங்கள

ஒரே ஒரு சிகரெட்

சிகரெட்டினால் என்னென்ன தீமைகள் விளையலாம் என்று பட்டியலிட்டாலும் படித்தவர்களே அதையெல்லாம் லட்சியம் செய்யாதபோது, மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது? என்னதான் பொது இடங்களில் புகைப்பது குற்றம் என்று அரசு அறிவித்தாலும், சிகரெட் விற்பனை ஒன்றும் குறைந்தமாதிரி எனக்குத் தெரியவில்லை. சிகரெட் சம்பந்தமான சில சுவையான [?] தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைகிறேன். முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரே ஒரு சிகரெட்டில் 4400 வெவ்வேறு ரசாயனப் பொருட்கள் [chemicals] இருக்கின்றன; இவற்றில் கிட்டத்தட்ட 599 addictive வகையைச் சார்ந்தவை [அதாவது, மறுபடியும், மறுபடியும் உங்களைப் புகைக்க வைக்கக் கூடிய போதைப் பொருட்கள்], இந்த 599 இல் 43 பொருட்கள் புற்றுநோய் [cancer] உண்டாக காரணமாக இருப்பவை. இவற்றில் சில மிக, மிக மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடியவை; அவை, Carbon Monoxide, Nitrogen Oxide, மற்றும் Hydrogen Cyanide ஆகியவை. இவை எல்லாவற்றையும் மீறிய பிரதான வில்லன், நிகோட்டின் [Nicotine] . நிகோட்டின் போதை உண்டாகக் காரணம் அது உடனடியாக நம் உடம்பில் உள்ள epinephrine என்ற ஹார்மோனைச் அதிக அளவில் சுரக்கச் செய்து

அரசியல்வாதிகளின் மூடநம்பிக்கைகளும், அதில் புரளும் கோடிகளும்!

தேர்தல் வியாபாரத்தில் குதித்துள்ள நம் வேட்பாளர்கள் ஜோசியத்துக்கும், ஹோமங்கள் பண்ணுவதற்கும் வாரியிறைத்து வருகின்றனர். தேர்தல் வந்து விட்டாலே, லட்சக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்களுக்கு கூடுதல் பணம், பொருளுடன் மூன்று மாதம் வேலை கிடைத்து விடுகிறது. "ஓட்டு போடுங்கம்மா' என்று கூவுவதற்கு ஏகப்பட்ட ஏழைப் பெண்களுக்கு தினமும் குறைந்தபட்சம் 500 ரூபாய் வரை கிடைக்கிறது; கூடவே, பிரியாணி பொட்டலங்களும். கடவுளுக்கு் மனு போடுகின்றனர்; கடவுளை திருப்திப்படுத்த ஹோமங்களை செய்கின்றனர். தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய சகஸ்ர ஹோமம், அதிருத்ர ஹோமம், தங்கள் கட்டுப்பாட்டில் அடுத்தவர்களை வைத்துக்கொள்ள "வாஷி கரண' ஹோமம், அடுத்தவர் கண்டிப்பாக தோல்வி அடைய "விபரீத பிரத்யங்கர' ஹோமம் என்று விசேஷ ஹோமங்கள் செய்யப்படுகின்றன. இதற்காக, வேத பண்டிதர்கள் சிலர், "போர்டு' மாட்டாத குறையாக சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், டில்லி, மும்பை, கோல்கட்டா போன்ற நகரங்களில் உள்ளனர். பெரும்பாலும், சென்னை, பெங்களூரு நகரங்களில் இருந்துதான் இப்படிப்பட்ட வேத மந்திர குழுக்களை தேசிய அரசியல் கட்சிகள், ஹோமங்களை செய்ய

குரங்கு கையில் பூமாலை

நன்றி: நண்பர் நாகுவுக்கு

கொள்ளையர்கள், கொலைகாரர்கள், கோடீஸ்வரர்கள்...

லோக்சபாவுக்கு, வரும் 16ம் தேதி முதல் கட்டமாக நடக்கும் தேர்தலில் 1,425 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில், 193 பேர் கோடீஸ்வரர்கள்; 222 பேர் கிரிமினல்கள். அத்துடன் முழுமையான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களும் கணிசமான அளவில் இடம் பெற்றுள்ளனர். லோக்சபா தேர்தல் ஐந்து கட்டமாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் வரும் 16ம் தேதி நடக்கிறது. 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 124 தொகுதிகளில் நடக்கும் இந்தத் தேர்தலில் மொத்தம் 1,425 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 222 பேர் கிரிமினல்கள். அதில், 51 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மொத்த வேட்பாளர்களில் 16 சதவீதம் பேர் கிரிமினல்களே. போட்டியிடும் 222 கிரிமினல்களில், 24 பேர் காங்கிரஸ் கட்சியையும், 23 பேர் பா.ஜ., 17 பேர் பகுஜன் சமாஜ், 10 பேர் சமாஜ்வாடி, எட்டுப் பேர் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், ஏழு பேர் ஐக்கிய ஜனதா தளம், ஐந்து பேர் தெலுங்கு தேசம், ஏழு பேர் ராஷ்டிரிய ஜனதா தளம், இரண்டு பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இரண்டு பேர் தேசியவாத காங்கிரஸ், ஆறு பேர் சிரஞ்சீவி தலைமையிலான பிரஜா ராஜ்யம் கட்சியையும் சேர்ந்தவர்கள். ம

கடல் நடுவே அமர்க்களம்!

என் மகளின் பள்ளி விடுமுறை ஆரம்பித்து விட்டதால் வெளியே செல்ல வேண்டுமென்ற அன்புத் தொல்லையும் ஆரம்பித்துவிட்டது. என்ன வேலை தலைக்குமேல் இருந்தாலும் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதை என்றுமே நான் குறைத்துக் கொண்டது இல்லை. ஆனால், சொந்த பிஸினசில் பணம் கொட்டவில்லை என்றாலும் தலை தின்கும் பிரச்சினைகள் ஏராளம் என்பதால் சமீபத்தில் அவ்வளவாக வெளியில் செல்ல முடியவில்லை. பெரிய relief ஆக நேற்றைய தினம் அமைந்தது. சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கொட்டிவாக்கம் அருகே உள்ளது ஒரு சிறிய மீனவர் குடியிருப்பு. அங்குள்ள மீனவ நண்பர்கள் [பெரும்பாலும் இளைஞர்கள்] மிகத் துடிப்புடன், உற்சாகமாக life-jacket எல்லாம் தயார் செய்து கொண்டு, படித்த நான்கு இளைஞர்களின் துணையுடன் அங்கு வரும் மக்களை [8 பேர் ஒரு கட்டு மரத்தில்] நடுக்கடலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். கடற்கரையில் இருந்து கிட்டத் தட்ட இரண்டு கிலோமீட்டருக்கு மேல் நடுக்கடலுக்கு சென்றவுடன் நம்மிடம் ஒரு கயிறு ஒன்றைக் கொடுத்து, அதைப் பிடித்துக் கொண்டு கடலில் குதிக்கச் சொல்கிறார்கள். நீச்சலே தெரியாத என்னைப் போன்ற வீரர்கள் கூட தைரியமாக இந்த விளையாட்டில் ஈடுபட முடியும்.