என் மகளின் பள்ளி விடுமுறை ஆரம்பித்து விட்டதால் வெளியே செல்ல வேண்டுமென்ற அன்புத் தொல்லையும் ஆரம்பித்துவிட்டது.
என்ன வேலை தலைக்குமேல் இருந்தாலும் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதை என்றுமே நான் குறைத்துக் கொண்டது இல்லை.
ஆனால், சொந்த பிஸினசில் பணம் கொட்டவில்லை என்றாலும் தலை தின்கும் பிரச்சினைகள் ஏராளம் என்பதால் சமீபத்தில் அவ்வளவாக வெளியில் செல்ல முடியவில்லை. பெரிய relief ஆக நேற்றைய தினம் அமைந்தது. சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கொட்டிவாக்கம் அருகே உள்ளது ஒரு சிறிய மீனவர் குடியிருப்பு.
அங்குள்ள மீனவ நண்பர்கள் [பெரும்பாலும் இளைஞர்கள்] மிகத் துடிப்புடன், உற்சாகமாக life-jacket எல்லாம் தயார் செய்து கொண்டு, படித்த நான்கு இளைஞர்களின் துணையுடன் அங்கு வரும் மக்களை [8 பேர் ஒரு கட்டு மரத்தில்] நடுக்கடலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். கடற்கரையில் இருந்து கிட்டத் தட்ட இரண்டு கிலோமீட்டருக்கு மேல் நடுக்கடலுக்கு சென்றவுடன் நம்மிடம் ஒரு கயிறு ஒன்றைக் கொடுத்து, அதைப் பிடித்துக் கொண்டு கடலில் குதிக்கச் சொல்கிறார்கள்.
நீச்சலே தெரியாத என்னைப் போன்ற வீரர்கள் கூட தைரியமாக இந்த விளையாட்டில் ஈடுபட முடியும்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கடலில் ஊறி விட்டு வந்தோம். சில வருடங்களுக்கு முன் பாங்காக், சிங்கப்பூர் போனதைவிட இந்த ஒரு மணி நேரத்தை மிகவும் enjoy செய்ததாக என் குழந்தைகள் சொன்னபோது நான் செலக்ட் செய்த விஷயம் சரி என்றே பட்டது.
ஒரு ஆளுக்கு ரூ.300/- வசூல் செய்து, ஒரு மிக வித்தியாசமான பொழுதுபோக்கை தரும் அந்த நண்பர்களை வாழ்த்துகிறேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
Comments