Skip to main content

Posts

Showing posts from September, 2012

மரணம் இல்லா மரிலின் மன்ரோ

ஜூன் 1, 1926 ஆண்டு பிறந்த நார்மா ஜீன் மார்டென்சன் தான் பின்னாளில் உலகம் போற்றும் மரிலின் மன்ரோ ஆனார். தனது 20 ஆவது வயதில் மாடலாக ஆரம்பித்த தொழிலை ஆரம்பித்த மரிலின், திரைத் துறையில் நுழைந்து புயல் வேகத்தில் முன்னேறினார். நடிக்க வந்து 10 ஆண்டுகளில் அவர் ஜோடி சேராத புகழ் பெற்ற நடிகரோ, அவரை வைத்து இயக்காத இயக்குனரோ இல்லை என்றே சொல்லலாம் மரிலின் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நேரத்தில்தான் உலகப் புகழ்பெற்ற பேஸ் பால் வீரர் ஜோ டி மாஜியோ (Joe de Maggio) அவருக்கு அறிமுகமானார். "நயாகரா' படத்தில் நடிப்பதற்காக மர்லின் வெளிப்புறப் படப்பிடிப்பிற்காகச் சென்றபோது, விளையாட்டுத் துறையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த 37 வயதான ஜோவும் உடன் சென்றிருந்தார். இரண்டாண்டுகள் இருவரும் நெருங்கி பழகிய பின்னரே ஜோவைத் திருமணம் செய்து கொள்ள மரிலின் சம்மதித்தார். 15 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் 200 புகைப்படக்காரர்கள் சூழ இவர்கள் திருமணம் நடந்தது. தேனிலவுக்கு போகும் வழியில் பத்திரிகையாளர்கள் கூட்டத்திற்கு ஜோ ஏற்பாடு செய்திருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது நிருபர்கள் அனைவரும்

நீரின்றி அமையாது....

குடிநீர் மிக இன்றியமையாத, அதிக லாபம் தருகின்ற வணிகப் பொருளாக மாறிவிட்டது. குடிநீர்த் தேவை அதிகரித்துவிட்டது என்பது மட்டுமல்ல, நல்ல குடிநீர் கிடைப்பது அரிதாகி வருகிறது என்பதுதான் அதைவிடக் கவலையளிப்பதாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், அரசு மேற்கொள்ளும் முடிவுகள்,  பொதுமக்களைவிடவும் தண்ணீரை விலைபேசும் வியாபாரிகளுக்கு அதிக நன்மை தருவதாக அமைந்துவிடக்கூடாது.  தற்போது சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ள "1,000 லிட்டர் குடிநீர் விலை ரூ.40; வணிகப் பயன்பாட்டுக்கு ரூ.60' என்கிற திட்டம் மக்களுக்குப் பயன்படுவதாக அமையாமல் இடைத்தரகர்களாகச் செயல்படும் வியாபாரிகளுக்குச் சாதகமாகிவிடுமோ என்கிற அச்சம் மேலிடுகிறது. இந்தத் திட்டம் புதியதல்ல. ஏற்கெனவே அமலில் உள்ள, "குடிநீர் தேவையெனில் தொலைபேசியில் கூப்பிடுங்கள்' என்ற திட்டத்தில் 6,000 லிட்டர் தண்ணீர் ரூ.400-க்கு வாடகை லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. வணிகப் பயன்பாட்டுக்கு இதே குடிநீரின் விலை ரூ.510. இந்தத் திட்டமும் அமலில் இருக்கும் என்று சொல்லப்பட்டாலும், வெளியில் தெரியாமல் ஆக்கப்படும் என்பதைச் சொல்லி

கண்கவர் பரளிக்காடு (Baralikkadu) - ஒரு நாள் இன்ப சுற்றுலா

கோவை: கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கிறது காரமடை. அங்கிருந்து கிளை பிரியும் தோலாம்பாளையம் சாலையில் சென்றால் சுமார் 30 கிலோமீட்டர் பசுஞ்சாலைப் பயணத்திற்குப் பின் பில்லூர் அணைக்கட்டைச் சென்றடையலாம். முன் பதிவு குறுகலான மலைப்பாதையில் பயணித்தால் அணைக்கட்டை ஒட்டி இருக்கும் பரளிக்காடு எனும் மலையோர கிராமத்தை சென்றடையலாம். இங்கு வாழும் பழங்குடியினர் நலனுக்காக வனத்துறையே வடிவமைத்தது தான் பரளிக்காடு பசுமைச் சுற்றுலா. இங்கு செல்ல வனத்துறை அலுவலரிடம் தொலைபேசியில் முன் பதிவு செய்ய வேண்டும்.  District Forest Officer Forest Campus, North Coimbatore, Mettupalayam Road Coimbatore -641043 Ph - 0422- 2456911 Karamadai Forest Ranger: 9443384982 விடுமுறை தினங்கள் என்றால் கூட்டம் அதிகம் இருப்பதால் எண்ணிக்கையைப் பற்றி கவலை இல்லாமல் முன்பதிவு செய்து கொள்ளலாம். வார நாட்களெனில் குறைந்தது 40 நபர்கள் கொண்ட குழுவாக இருந்தால் மட்டுமே முன் பதிவு செய்வார்கள். பெரியவருக்கு ரூ.300 குழந்தைகளுக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பரிசல் பயணம் ஆற்ற

கண்கவர் சுற்றுலா தலம் கவி (Gavi)

கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு கண்கவர் இடங்களில் அதிகம் அறியப்படாத இடம், கவி. பத்தனம்திட்டா மாவட்டத்தில், தேக்கடியிலிருந்து சுமார் 40 கி.மி. தொலைவில் உள்ளது இந்த அழகான இடம்.  நிறையப்பேருக்கு இன்னும் இதைப் பற்றி அதிகம் தெரியாததால் இந்த இடம் இன்னும் அதிகம் மாசுபடாமல் இருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் கவிக்கு செல்ல வல்லக்கடவு வனத்துறை அலுவலகத்தில் நுழைவு சீட்டு பெற்றே செல்லவேண்டும்.  தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் சரணாலயம் பற்றி நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். கவி இதனுள்ளே இருப்பதால் அதன் தனித்துவமான அழகு குன்றாமல் சிறப்பாக இருக்கிறது. கவிக்கு ஒரு முறை சென்றால் ஸ்விட்சர்லாந்து அல்லது குறைந்த பட்சம் காஷ்மீர் சென்ற அனுபவத்தைப் பெறலாம். கவி பசுமை மாறா காடுகள் (evergreen forests ) மத்தியில் உள்ளதால் எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்துள்ளது. இந்த வனப் பகுதியில் யானை, புலி, சிங்கவால் குரங்கு, சிறுத்தை, மான் ஆகிய பல வனவிலங்குகள் உள்ளன. கவிக்கு செல்லும் பாதை வளைந்து நெளிந்து தேனீர் எஸ்டேட்கள் வழியே செல்லும்போது, வழியில் சின்ன, சின்ன அருவிகள், வாய்க்கால்கள்

மனிதனின் ஆசை: மகாகவி பாரதி

(பாரதி 1930 களில் எழுதிய இந்த கருத்துக்கள் இன்றும் ஏற்புடையவை. இதைப் படிக்கும் போது  அவருடைய தீர்க்கதரிசனம் வெளிப்படுகிறது). * ஒருவன் எத்தனை சிறப்புகள் பெற்றிருந்தாலும், விசேஷ குணங்கள் அடைந்திருந்தாலும், ஏதாவது ஒரு விஷயத்தில் அவன் வேறு சிலருக்கு குறைந்தவனாகவே இருக்கும்படி இயற்கையமைப்பு ஏற்படுத்தி இருக்கிறது. * படித்தவன் படிக்க முடியாதவனை குருடனாகக் கருதி இழிவு செய்கிறான். பணம் கொண்ட செல்வந்தனோ பணமில்லாத ஏழையை பிணமாகக் கருதி கேவலப்படுத்துகிறான். * மனிதர்கள் எலியொன்று பொறிக்குள்ளே அகப்பட்டுத் தவிப்பதுபோல, ஆசையினால் ஒரு சில நெருக்கடிகளுக்குள் தங்களைத் தாங்களே அகப்பட வைத்துக் கொண்டு தவிக்கிறார்கள். * ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பரமாத்மாவின் சக்தி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நிலத்திற்குள் பல சக்திகள் வெளிவராமல் முடங்கியிருப்பதைப்போல, இந்த சக்தி வெளிப்படாமல் மறைந்து கிடக்கிறது. அறியாமை இருக்கும் வரையில் இந்த சக்தி வெளிப்படாமல்தான் இருக்கும். * ஒருவன் எவ்வளவு கல்வி கற்றிருந்தாலும், அறிவில் சிறந்தவனாக இருந்தாலும், ஏதேனும் ஒரு விஷயத்தில் அவன் வேறு சிலருக்கு ஏதாவது ஒரு வ

இளைஞர்களை குறிவைக்கும் இணையதள மோசடிகள்

 இந்தியாவிலுள்ள வேலையற்ற இளைஞர்களை குறிவைத்து பணம் பறிக்கும் ஏமாற்று கும்பல்கள் நிறைய செயல்பட்டு வருகின்றன. இந்த அப்பாவி இளைஞர்களின் பலவீனங்களை பயன்படுத்தி, இவர்களை சுரண்டுவதற்காகவே காத்துக் கொண்டிருக்கிறது, ஒரு வெளிநாட்டுக் கூட்டம். இவர்களில் பெரும்பாலானோர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கருப்பின இளைஞர்கள். படிப்பதற்காகவும், வியாபார விஷயமாகவும், இந்தியாவுக்கு வருகை தரும் இவர்களின் ஒரே முதலீடு, இணையதள வசதியுள்ள ஒரு கம்ப்யூட்டர், மொபைல் போன் மற்றும் பாங்க் கணக்கு எண் இவை மூன்றும் தான். உட்கார்ந்த இடத்திலிருந்து லட்சக்கணக்கில் சம்பாதித்து விடலாம்; சம்பாதித்த பணத்தை, அடுத்த நொடியே, தங்களது சொந்த நாட்டிற்கு மாற்றியும் விடலாம். இந்த இணையதள மோசடி பேர்வழிகளை பற்றி, ஊடகங்களில் அடிக்கடி செய்திகள் வந்தாலும் கூட, நம் இளைஞர்கள், தாங்கள் ஏமாறுவது குறித்து விழிப்புணர்வு அடைந்ததாக தெரியவில்லை. ஆன்-லைன் பண பரிவர்த்தனைகள், எந்த அளவுக்கு இந்தியாவை உயரத்துக்கு இட்டுச் செல்கிறதோ, அதே வேகத்தில், குப்புறத்தள்ளி, குழியையும் பறிக்கிறது. "ஆசையே துன்பங்களுக் கெல்லாம் காரணம்...'

அணுசக்தி வேண்டாம்; சுஜாதா எழுதியது!!

(1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது.) அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள். எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தி என்னும்  ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது. விபத்துகள்:- முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில். அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்