Skip to main content

Posts

Showing posts from December, 2011

பீர் விற்பனை ஜோரோஜோர்

உலகில் அதிக அளவில் விற்பனையாகும் "ஸ்னோ"பீர் -ஒரு சீனா தயாரிப்பு உலகம் முழுவதும் உள்ள மக்களால், தண்ணீர், டீ ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, அதிகமாக விரும்பி குடிக்கப்படும் பானம் எது தெரியுமா? சந்தேகமே வேண்டாம்... பீர் தான். அதுவும், மேற்கத்திய நாடுகளில், பீர் குடிப்பது சர்வ சாதாரணம். ஜெர்மனி, பிரிட்டன், பெல்ஜியம், அமெரிக்கா போன்ற நாடுகளில், ஒவ்வொரு ஆண்டும் பீருக்காக, திருவிழாக்களே நடத்தப்படும் நடைமுறை உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் தான், பீர் அதிகமாக விற்பனையாகி வந்தது. ஆனால், சமீபகாலமாக இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில், பீர் விற்பனை திடீரென அதிகரித்துள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகளில், பீர் விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக, சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வில் ஆச்சரியமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், பீர் விற்பனை, 72 சதவீதம் வரை, சரிவை சந்தித்துள்ளது. பீர் குடிப்பதால், உடல் எடை அதிகரித்து விடுகிறது என, அமெரிக்க மக்களிடையே கருத்து எழுந்துள்ளது தான்