Skip to main content

Posts

Showing posts from October, 2010

ரஜினி ஒரு முட்டாள்-நடிகர் விவேக் பேட்டி

  ஆங்கிலம் ஒரு வினோதமான மொழி. ஒரே மாதிரியான வார்த்தைகளே உபயோகிக்கும் விதத்தில் பொருள் மாறும். நமது தமிழ் நடிக, நடிகையர் பெரும்பாலான சமயங்களில் பேசும் போது ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அவர்களில் பெரும்பாலானோர் 10 வது கூட படித்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் பிடிவாதமாக ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அதில் எவ்வளவு தவறு இருந்தாலும் பரவாயில்லை. ஏனென்றால் தான் பேசுவது தவறு என்று தெரியாமலேயே அவர்கள் பேசுவதுதான் காரணம். சில நாட்களுக்கு முன் நடிகர் விவேக்கை ஒரு FM ரேடியோ சேனல் பேட்டி கண்டது. அதில் விவேக் வழக்கம் போல பெரிய பந்தாவுடன் பேசினார். பேட்டி கண்டவர்  விவேக்கிடம் அவருடைய சிவாஜி பட அனுபவத்தைக் கேட்டவுடன் மிக உற்சாகமாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தான் ரசித்து நடித்த காட்சிகளைக் கூறினார். அதோடு நில்லாமல் ரஜினி ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்யும் விதமாக இன்னொன்று கூறியதுதான் அந்த பேட்டியின் விசேஷம்; "சிவாஜி படத்துல ஒரு சீன்ல நானும் சூப்பர் ஸ்டாரும் நடந்து வருவோம், கேமரா என் பக்கத்துல இருக்கும், அப்போ, நான் என்னோட கூலிங் கிளாசை தலைக்கு மேல மாட்டியிருப்பேன், அதை அப்படியே சரிஞ்சு வந்து என் கண

குறும்பு செய்யும் குழந்தைக்கு எறும்புக்கடி : தனியார் பள்ளிகள் குரூரம்

கோவை : கோவையில் உள்ள சில தனியார் மெட்ரிக் பள்ளிகள், தங்கள் மாணவர்களை வழிக்கு கொண்டு வர, காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகளை கடைபிடிக்கின்றன. இதன் உச்சகட்டமாக, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகம், குறும்பு செய்யும் குழந்தைகளை மரத்தில் கட்டி போட்டும், எறும்பால் கடிக்கச் செய்தும், தண்டித்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாணவர்களை அடிப்பது, உடல் ரீதியாக துன்புறுத்துவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது ஆகியவை, நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் உள்ள சில தனியார் பள்ளி ஆசிரியர்கள், இதுகுறித்து கவலைப்படுவதே இல்லை. இவர்கள், மாணவர்களுக்கு அளிக்கும் தண்டனைகள் விபரீதமானவை. மணிக்கணக்காக வெயிலில் நிற்க வைப்பது, ஸ்டீல் ஸ்கேலால் கை, கால் முட்டி, தலையில் அடிப்பது என தண்டனைகளின் பட்டியல் நீள்கிறது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பிரபல தனியார் துவக்கப் பள்ளி அளிக்கும் தண்டனை கொடூரத்தின் உச்சகட்டமாக உள்ளது. மாணவர்களை வழிக்கு கொண்டு வர, இப்பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்தும் யுக்திகள் பதற வைக்கின்றன. சரியாக படிக்காத, குறும்பு செய்யும் சிறு குழந்தைகள

கிலிமாஞ்சாரோ

  சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எந்திரன் படத்தில் கிலிமாஞ்சாரோ என்று ஒரு பாடல் வருகிறது. இதை இதுவரை யாருமே சென்று எடுக்காத மச்சு-பிச்சு (Machu-Picchu) என்ற இடத்தில எடுத்திருக்கிறார்கள். இது பெரு நாட்டில் உள்ள ஒரு மிகப் புராதனமான  இடம். அந்தப் பாடலின் ஆரம்ப வரிகள் இவை: கிலிமஞ்சரோ  – மலை கனிமஞ்சரோ  – கன்னக் குழிமஞ்சரோ யாரோ  யாரோ  பெரு நாட்டில் மச்சு-பிச்சுவில் எடுத்துவிட்டு ஒரு எதுகை-மோனைக்காக கிலிமஞ்சரோ என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலை எழுதிய கவிஞர் Dr. விஜய். இவர் இன்று மாலை சன் டிவியில் அந்தப் பாடல் ஒளிபரப்பானபோது," நிறையப் பேர் கிலிமஞ்சரோ என்றால் என்ன என்று கேட்கிறார்கள், கிலிமஞ்சரோ, உயரமான எவரஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ள ஒரு இடம்," என்று மிக அபத்தமாக உளறினார். கிலிமஞ்சரோ சிகரம் இருப்பது தென் ஆப்ரிக்காவில். அதற்கும் எவரெஸ்ட் சிகரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதைப் போல எந்தவிதமான பொது அறிவும் இல்லாமல் இருக்கும் இவருக்கு எந்த புத்திசாலி டாக்டர் பட்டம் கொடுத்தது என்று தெரியவில்லை. என்ன கொடுமை இது?

சட்டத்தின் பார்வையில் ராமர் - டாக்டர் இரா.நாகசாமி

 எல்லாரும் எதிர்பார்த்திருந்த அயோத்தி வழக்கில், மூன்று நீதிபதிகள் தீர்ப்பு கூறிவிட்டனர். அத்தீர்ப்பில் இரண்டு முக்கிய முடிவுகள் வெளிவந்துள்ளன.  அவற்றில் முக்கிய முடிவு, பாபர் மசூதியின் கீழே ஒரு கோவிலின் இடிபாடுகள் உள்ளன என்பதை மூன்று நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். பாபர், அங்கிருந்த கோவிலை இடித்து விட்டு மசூதியைக் கட்டினாரா என்ற கேள்வியே அர்த்தமற்றதாகிவிட்டது. ஆதலின், அதைப் பற்றி யாரும் இப்போது கவலைப்படவில்லை.அந்த இடம் வழிபாட்டில் இருந்த இடம் என்பதால், இஸ்லாமியருக்கு மூன்றில் ஒரு பங்கும், நிர்மோகி அகாராவுக்கு ஒரு பங்கும், ராம் லாலாவுக்கு ஒரு பங்குமாக பிரித்துக் கொடுக்க நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இதுகுறித்து பல கருத்துக்கள் எழுந்துள்ளன. "இத்தீர்ப்பு சட்டப்படி அளிக்கப்பட்டதல்ல; ராமர் உயிருள்ள மனிதர் போல கருதும் நம்பிக்கைக்கு இடமளித்து, ராம் லாலாவுக்கு ஒரு பங்கு எனக் கொடுத்துள்ளது சட்டத்துக்கு ஏற்புடையது அல்ல. நம்பிக்கைக்கு முதலிடம் கொடுத்து அளித்தது. தெய்வம் என்ற நம்பிக்கையை மனிதர் போல் கொண்டு தீர்ப்பளித்துள்ளது நம் பண்பாட்டுக்கு ஏற்றதல்ல. ஆதலால், சட்டப்படி

தினசரி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்

 திருப்பதி ஏழுமலையானை வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிப்பது என்பது இன்றைக்கு ஒவ்வொருவரின் வாழ்நாள் லட்சியமாகிவிட்டது. ஆனால், ஒரே ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஏழுமலையானை அதிகாலையில் முதல் ஆளாகத் தரிசிப்பதும், இரவில் நடை அடைப்பதற்கு முன் இறுதியாக தரிசிப்பதும் இன்றும் நடந்து வருகிறது. யார் அவர்கள்? அவர்களின் பின்னணி என்ன? அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை? திருமகளுக்கும் பெருமாளுக்கும் ஒரு முறை பிணக்கு ஏற்பட்ட போது, திருமகள் கோபித்துக் கொண்டு பூமிக்கு வந்துவிட, பின்னாலேயே பெருமாளும் வந்து அவளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு, அது முடியாததால் தவம் செய்கிறார். நாளடைவில் அவர் மேல் பெரும் புற்று மூடிவிட, அங்கு மாடுகளை மேய்க்கும் கோபாலன் என்பவன் தன்னுடைய பசுவைக் கொண்டு தினசரி அந்தப் புற்றுக்கு பால் அபிஷேகம் செய்ய, அதில் மனம் மகிழ்ந்த பெருமாள் அவனுடைய சந்ததிகளுக்கு தன்னை தினசரி தரிசனம் செய்யும் வரம் அளிக்கிறார் என்பது புராணம். அந்தத் தலைமுறையில் வந்த வேங்கட ராமையா என்பவர்தான் அந்த பாக்கியசாலி. தினமும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் வெங்கடராமையாவும், அவரது மகன்களும் எழ