கோவை : கோவையில் உள்ள சில தனியார் மெட்ரிக் பள்ளிகள், தங்கள் மாணவர்களை வழிக்கு கொண்டு வர, காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகளை கடைபிடிக்கின்றன. இதன் உச்சகட்டமாக, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகம், குறும்பு செய்யும் குழந்தைகளை மரத்தில் கட்டி போட்டும், எறும்பால் கடிக்கச் செய்தும், தண்டித்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாணவர்களை அடிப்பது, உடல் ரீதியாக துன்புறுத்துவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது ஆகியவை, நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் உள்ள சில தனியார் பள்ளி ஆசிரியர்கள், இதுகுறித்து கவலைப்படுவதே இல்லை. இவர்கள், மாணவர்களுக்கு அளிக்கும் தண்டனைகள் விபரீதமானவை. மணிக்கணக்காக வெயிலில் நிற்க வைப்பது, ஸ்டீல் ஸ்கேலால் கை, கால் முட்டி, தலையில் அடிப்பது என தண்டனைகளின் பட்டியல் நீள்கிறது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பிரபல தனியார் துவக்கப் பள்ளி அளிக்கும் தண்டனை கொடூரத்தின் உச்சகட்டமாக உள்ளது. மாணவர்களை வழிக்கு கொண்டு வர, இப்பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்தும் யுக்திகள் பதற வைக்கின்றன. சரியாக படிக்காத, குறும்பு செய்யும் சிறு குழந்தைகளுக்கு இப்பள்ளி ஆசிரியர்கள் அளிக்கும் தண்டனை தான் "எறும்புக்கடி!' சொல்படி கேட்காத சிறு குழந்தைகளை, இங்குள்ள ஒரு சிறு மரத்தில், கயிற்றால் கட்டிப் போட்டு விடுகின்றனர். மரத்தின் அடிப்பகுதியில் உள்ள சிவப்பு எறும்புகளின் கடி தாங்காமல் குழந்தைகள், கால்களை மாற்றி, மாற்றி வதைபட்டு கதறுவதை பார்க்கும் பிற குழந்தைகள், மனதளவில் மிரண்டு விடுகின்றனர்.
இதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவர் கூறுகையில், "சினிமாவில் கூட இதுபோன்ற கொடுமையை பார்க்க முடியாது. சிறிது நேரத்தில் கட்டுகள் அவிழ்த்து விடப்படும் மாணவனுக்கு, கடும் எச்சரிக்கை விடுக்கின்றனர். பெற்றோரிடம் சொன்னால், "டிசி' கொடுத்து அனுப்பி விடுவதாக மிரட்டுகின்றனர். மிரட்டலால் மிரண்டு போகும் குழந்தைகள், இதுகுறித்து பெற்றோரிடம் மூச்சு விடுவதில்லை. வேறு வழியில்லாமல் இங்கு வேலை செய்கிறோம்' என்றார். பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற விதிமுறை இருந்தும், பெரும்பாலான பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இல்லை. இதனால், இதுபோன்ற தண்டனைகள் குறித்து பெற்றோர் கூட்டாக கேள்வி எழுப்ப முடிவதில்லை. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பல ஆசிரியர்கள், முறையான ஆசிரியர் பயிற்சி முடிக்காத பட்டதாரிகள். இதனால், ஆசிரியர் பயிற்சியின் போது கற்றுத் தரப்படும், "சைல்டு சைக்காலஜி' குறித்தெல்லாம் இவர்களுக்கு தெரிவதில்லை. ஆசிரியர் பயிற்சி பெறாதவர்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகமோ, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களோ கண்டு கொள்வதில்லை என்பதே பெற்றோரின் குற்றச்சாட்டு.
இதைப் போன்ற கொடுமகைளை செய்தித்தாள்கள் வெளிச்சம் போட்டு காட்டிய பிறகும் அரசு வாய்முடி மௌனமாக இருந்தால் அது இன்னும் பெரும் கொடுமை.
நன்றி: தினமலர் இணையத்தளம்

Comments