Skip to main content

Posts

Showing posts from August, 2012

சேவல் சண்டை : தமிழ்நாட்டின் தனி அடையாளம்

முடிகள் அனைத்தும் சிலுப்பிக் கொண்டு நிற்க, வலது காலில் பதம் தீட்டப்பட்ட கத்தியை போர் வீரனைப் போல் ஏந்திக் கொண்டு, கூர்மையான அலகால் கொத்துவதற்கு தயாராக நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் சேவல்களின் சண்டையை நேரில் பார்த்திருக்கிறீர்களா? இதெல்லாம், கிராமத்திலும், சினிமாவிலும் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி என்று நீங்கள் காரணம் சொன்னால், தயவு செசய்து உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள், கிராமங்களை விட அதிக அளவில் சேவல் சண்டை நடப்பது வடசென்னை பகுதியில் தான். ஜல்லிக்கட்டிற்கும், சேவல் சண்டைக்கும்; சங்க இலக்கியத்தில் குறிப்பு, பிராணிகள் வதை காரணம் காட்டி தடை; என சில ஒற்றுமைகள் உண்டு. தடை நிலை இருந்தாலும், இந்த இரண்டும் நிழல் போல, தமிழர்களின் வாழ்வை பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சண்டைகள் சண்டைகளாக இருந்த போது கூட இல்லாத விமர்சனங்கள், அது சூதாட்டமாக மாறிய போது பல்வேறு காரணங்களுகாக நிராகரிக்கப்பட்டது. (?) மறைமுக சண்டை : ராயபுரம், சூளை, பெரம்பூர், வியாசர்பாடி, எண்ணூர், திருவொற்றியூர், வால்டாக்ஸ் ஆகிய பகுதிகளில், தொன்று தொட்டு சேவல் சண்டைகள் நடந்து வருகிறது. இங

லான்ஸ் ஆம்ஸ்டிராங் மீது ஊக்க மருந்து புகார்

அமெரிக்காவை சேர்ந்தவர் லான்ஸ் ஆம்ஸ்டிராங்,(வயது 40). மிக நீண்ட தூர சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்றார். பிரான்சில் ஆண்டுதோறும் நடக்கும் "டூர் டி பிரான்ஸ் போட்டியில் திறமை நிரூபித்தார். 21 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் சுமார் 3, 500 கி.மீ., தூரத்தை கடக்க வேண்டியிருக்கும். இதில், அசத்திய ஆம்ஸ்டிராங் 1996 முதல் 2005 வரை தொடர்ந்து 7 முறை பட்டம் வென்று சாதனை படைத்தார்.  சைக்கிள் பந்தய சாம்பியன் லான்ஸ் ஆம்ஸ்டிராங், தன் மீதான ஊக்க மருந்து பிரச்னையை எதிர்த்து போராடப் போவதில்லை என நேற்று அறிவித்தார். இதையடுத்து இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. "டூர் டி பிரான்ஸ் தொடரில் வென்ற 7 பட்டங்கள் உட்பட இவரது சாதனைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. 1996ல் "டெஸ்டிக்குலர் கேன்சரால் பாதிக்கப்பட்டார். இது மூளை, நுரையீரலில் பரவியது. பின் "டெஸ்டிக்குலர் பகுதியில் " அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து "கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு, "கேன்சரில் இருந்து மீண்டார். இவரை முன்னுதாரணமாக கொண்டு தான் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ், கேன்சர் பாதிப்பில் இருந்

கிம் கர்தஷியான் வழங்கும் கும் போஸ்

கிம் கர்தஷியான் வழங்கும் கும் போஸ் கவர்ச்சிக்கும், எடுப்பான அழகுக்கும் பெயர் போன கிம் கர்தஷியான் இன்னும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். எக்ஸ் வடிவிலான புதிய கவர்ச்சிகரமாக நீச்சல் உடையில் தோன்றி தனது ரசிகர்களிடையே சூட்டைக் கிளப்பியுள்ளார் கிம். அமெரிக்க ரியாலிட்டி ஷோ ஸ்டாரான கிம்மைப் பற்றி செய்தி வராத நாளே இல்லை. ஏதாவது ஒரு பிட்டைப் போட்டு பிரளயத்தை ஏற்படுத்துவது கிம்மின் வழக்கம். அந்த வகையில், புத்தம் புதிய எக்ஸ் வடிவிலான கவர்ச்சிகரமான நீச்சல் உடையை அணிந்து கவர்ச்சிப் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளார் கிம். இந்த நீச்சல் உடையில் கிம்மின் அழகுகள் முழுமையாக வெளிப்பட்டு புதிய பொலிவைக் காட்டுகிறது.  31 வயதான கிம், தற்போது ராப் (Rap ) கலைஞர் கேயின் வெஸ்ட்டைக் காதலித்து வருகிறார். அவர்களது காதலை விட இப்போது கிம்மின் கலக்கல் நீச்சல் உடைதான் படு ஹாட்டாக பேசப்பட்டு வருகிறது. கிம் என்ன செய்தாலும் 'கும்'முன்னுதான் இருக்குப்பா ...! தகவல்/புகைப்படம் நன்றி: .jaffnacnn.com

ரூ.1.86 இலட்சம் கோடி புதிய ஊழல்

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த மெகா ஊழலை மிஞ்சும் வகையில், தற்போது மேலும் பல ஊழல்கள் நடந்திருப்பது, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கை மூலம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில், 1.86 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை அளித்ததில், 29 ஆயிரத்து 33 கோடி ரூபாய் அளவுக்கும், டில்லி விமான நிலைய பணிகளில், தனியார் நிறுவனத்துக்கு சலுகை அளித்ததில், 3,415 கோடி ரூபாய் அளவுக்கும், ஊழல் நடந்து உள்ளது தெரியவந்துள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டதில், 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டது, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கை மூலம், வெளிச்சத்துக்கு வந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழலை மிஞ்சும் அளவுக்கு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவ