Skip to main content

Posts

Showing posts from February, 2008

சுஜாதாவின் மறைவு: கமல்ஹாசனின் அஞ்சலி

கமல்/ரஜினி நடித்த, பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும் படம்தான் சுஜாதா முதலில் வசனம் எழுதிய படம். அதில் ஆரம்பித்த இந்த நட்பு இன்றுவரை தொடருவதும், பாசாங்கில்லாமல் ஒருவருக்கொருவர் பாராட்டி கொள்வதும் நல்ல விஷயம் என்பது மட்டுமல்லாமல் கமலின் இன்னொரு மைல்கல்லான இந்தியன் படத்தில் சுஜாதாவின் வசனங்கள் மிக அருமையாக இருந்தன. கமலைத் தவிர மணிரத்னம், ஷங்கர், பாரதிராஜா, பாலசந்தர், ராஜீவ் மேனன், ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களுக்கு சுஜாதாவின் பங்களிப்பு இருந்தாலும், திரையுலகில் இருந்து வெளிவந்திருக்கும் முதல் இரங்கல் கமலுடயதுதான்: கமலின் இரங்கல் செய்தி சிறியதாக இருக்கிறதே என நினைப்பவர்கள், அதன் மேல் Click செய்யவும்

எழுத்தாளர் சுஜாதா எனும் ஜீனியஸ்: ஒரு ரசிகனின் அஞ்சலி

நேற்று இரவு சுமார் 10 மணிக்கு சுஜாதா காலமான செய்தி, எனக்கு சற்று தாமதமாக இன்று காலைதான் தெரிந்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக அவருடைய எழுத்துக்களை விடாமல் துரத்தும் ஒரு ரசிகன் என்கிற முறையில் என்னால் மனப்பூர்வமான அஞ்சலியை மட்டுமே செலுத்த முடியும். ஒரு எழுத்தாளனின் நடை, எழுத்தாக்கம், உணர்வு இவற்றையெல்லாம் மீறி எனக்கு (என்னைபோன்ற எத்தனையோ பேருக்கு) சுஜாதா பல விஷயங்களில் ஒரு மானசீக குரு என்றுதான் சொல்லவேண்டும். அவர் நன்றாக இருக்கிறது என்று கைகாட்டிய நிறைய கவிதைகளை, கதைகளை வாசித்திருக்கிறேன்: அவரால் சிலாகிக்கப்பட்ட திரைப்படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன்;அவர் சொன்ன கட்டுரைகளை இணையதளத்தில் தேடிப்பிடித்து download செய்து படித்திருக்கிறேன்; அவர் வசனம் எழுதிய ஒரே காரணத்தால் விசில், கண்ணெதிரே தோன்றினாள் போன்ற குப்பையான படங்களையும் பார்த்திருக்கிறேன். இன்றைய நிலையில் தமிழ்நாட்டிலே பிறந்த நிறைய குழந்தைகளுக்கு (என் வாரிசுகள் உட்பட) தமிழ் படிக்கவே தெரியாத காலத்தில், சுஜாதாவின் எழுத்து மூலம் நிறையவே கற்றுக்கொண்டேன் என்றால் அது மிகையாகாது. அவர் தந்தை இறக்கும்போது அவருக்கு வயது 93 என்று படித்திருக்க

உலகம் அழியும்போது நம் அரிசி அழியாது!

கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை எவ்வளவு பேர் படித்திருப்பீர்கள் எனத் தெரியாது. நான் படித்திருக்கிறேன். அதில் ஒரு மிகப் பிரமாண்டமான வெள்ளத்தைப் பற்றி குறிப்பு இருக்கிறது. அந்த வெள்ளத்தின் போது ஜீசஸின் கட்டளையை ஏற்று நோவா என்பவர் ஒரு பெரிய படகு ஒன்றை தயாரிக்கிறார். உலகின் அனைத்து உயிரினங்களையும் காப்பற்றவேண்டி, எல்லா மிருகங்கள், பறவைகள் மற்ற உயிரினங்களின் ஒவ்வொரு ஜோடியை தன்னுடைய படகில் ஏற்று செல்கிறார். Noah"s Ark எனப்படும் இந்த படகுதான் பின்னாளில் உலகத்தில் மற்ற ஜீவராசிகள் வர முக்கியமான காரணம் என்று சொல்வார்கள். இப்போது நம் உலகம் அழிவுப் பாதையில் போய்க் கொண்டிருப்பதால், விஞ்ஞானிகள் ஒரு மிகப் பெரிய vault ஒன்றை Artic பிரதேசத்தில் கட்டி, அதனுள் உலகின் ஒவ்வொரு தாவர வகைகளின் மாதிரியையும் காப்பாற்ற எண்ணற்ற விதைகளை (கிட்டத்தட்ட4.5 மில்லியன்) பாதுகாக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். உலகின் அனைத்து தாவர வகைகளும் இங்கு பாதுகாப்பாக வைத்துவிட்டால், எதிர்காலத்தில் உலகம் அழிந்துவிட்டால், மறுபடியும் இந்த தாவர விதைகளைக் கொண்டு உலகைக் காப்பாற்றிவிடலாம் என்று நினைக்கிறார்கள். உலகின் ஒரு மூலையில்

Water is the New Wine

Water is definitely the new wine. If anyone has to show a certain moral and aesthetic superiority in a subtle way, there’s nothing quite like water. There’s still and sparkling, tap and branded, cheap and expensive, common and rare... In short something to suit not only every taste — yes, plain water has differences in flavour too, connoisseurs say — but also every snob criteria. I found that out when taking a tour of the presidential suite of one of Delhi’s premier hotels this week, which routinely plays host to heads of state. So in addition to Frette linen and bulletproof glass, the hotel also provides water of their excellencies’ choice. Often, of course, there are newage heads of state and spouses who drink only water and fresh juices, putting to naught any hotel’s chance of showing off their wine repertoire. They, in fact, make it a point to inquire about water preferences, so that the correct bottles can be obtained and tucked away in the appropriate places for use. And we are n

கோடியில் விலை போகும் கிரிக்கெட் வீரர்கள்! நாம் இருப்பது இந்தியாதானா ?

என்னதான் நானும் ஒரு கிரிக்கெட் ரசிகன் என்றாலும், மிகுந்த எரிச்சலுடன், என் கருத்தை உங்களுடன் பரிமாறிக் கொள்கிறேன்: கொஞ்ச நாட்களுக்கு முன் கோடிகளைக் கொட்டி பண முதலைகள்...மன்னிக்கவும், முதலாளிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் IPL அணிகளை வாங்கிய செய்தியை நாம் அறிவோம். இன்று அதைவிட பெரிய கூத்து நடந்திருக்கிறது; உலகெங்கிலும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை bidding மூலம் ஒவ்வொரு அணியின் முதலாளியும் வாங்கியிருக்கிறார்கள். எல்லாமே கோடியில்தான். இந்த bidding நேர்மையாக நடக்க வேண்டுமென லண்டனைச் சேர்ந்த பிரபல ஏல நிறுவனமான Chrirstie மூலம் இந்த ஏலம் நடந்துள்ளது. கன்னாபின்னா என்று விலை எகிறக் கூடாதென்று, ஒரு அணிக்கு குறைந்த பட்சம் US$ 1.5 மில்லியன் (ரூ.6 கோடி) அதிக பட்சம் US$5 மில்லியன் (ரூ.20 கோடி) என்றும் அளவீடு (capping) கொடுக்கப்பட்டது. இந்தத் தொகை மொத்த அணிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதில் ரொம்ப புத்திசாலித்தனமாக இந்தியாவின் மூத்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், யுவராஜ் சிங், சௌரவ் கங்குலி ஆகியோர்களை "Icon Players" என்று வகைப்படுத்தி இவர்கள் ஏலத்திற்கு அ

What is Your Money Personality?

Like almost everything else in life, your response to money is largely dictated by your personality. But have you given much thought to how you behave in regard to your finances and how that behavior affects your bottom line? Understanding your money personality is the first step and will help you shape your approach to spending, saving and investing. So what's your money personality? Read on to find out. What's your type? Money personalities have been analyzed in a variety of ways and many people can identify with aspects of several profiles. They key is to find the profile that most closely matches your behavior. The major profiles are: big spenders, savers, shoppers, debtors and investors. Big Spenders Big spenders love nice cars, new gadgets and brand-name clothing. Big spenders aren't bargain shoppers; they are fashionable and they are looking to make a statement. This often means a desire to have the smallest cell phone, the biggest plasma TV and

The World's Happiest Countries

A British researcher merged dozens of statistical metrics to rank nations on the elusive notion of contentment. No. 1: Denmark Population: 5.5 million Life Expectancy: 77.8 years GDP Per Capita: $34,600 With a high standard of living, negligible poverty, and a broad range of public and social services, it's easy to see why Denmark tops the happiness map. There's a high level of education; public schools are top-quality and private ones are affordable. The low population gives the nation a strong sense of identity. And Denmark's physical beauty forms a great backdrop to daily life. The weather is a bit tough, though. No. 2: Switzerland Population: 7.5 million Life Expectancy: 80.5 years GDP Per Capita: $32,300 Smack in the middle of Europe and surrounded by picture-postcard scenery, Switzerland ranks second among the world's happiest countries. It has a low crime rate, good infrastructure, and a wealth of outdoor activities, from skiing in the Alps to boating on Lake Gen

Pour Your Heart Into It!

In 1982, Howard Schultz, the current chairman and chief global strategist of Starbucks, left his prestigious job as national sales manager for a European housewares company to join a small, Seattle-based coffee roaster and retailer. Starbucks had come to Schultz’s attention when he noticed this small business was purchasing a disproportionately large number of coffee makers from his company. When Schultz visited Seattle, he stopped to check out Starbucks and became intrigued with the possibilities. “I saw Starbucks,not for what it was but for what it could be,” he has said. The key to Schultz’s vision was simple: create community. The idea came to him while visiting Milan,Italy, where he observed how people gathered at their neighbourhood espresso bars “like an extension of the front porch, an extension of the home,” he liked to say. At Starbucks, Schultz saw a means to bring people together in America, just as espresso bars bring them together i

ஜொள்ளித் திரிந்த காலம்!

என்னுடைய மேற்பட்ட புகைப்படத்தைப் பார்த்தவுடன், உங்களில் பலருக்கு நான் ஏன் வசந்த் & கோ முதலாளி மாதிரி போஸ் கொடுக்கிறேன், அப்படி என்ன பெரிதாக சொல்லிவிடப் போகிறேன் என்று மனதில் கேள்வி எழும். என்னுடைய office இல் சமீபத்தில் photo shoot ஒன்று எடுத்தோம், எங்களுடைய VirtuIndia Office brochure க்காக. அதற்கு வந்த photographer போனால் போகிறது என்று என்னை எடுத்த photo வை உங்களுக்கு வேறு எப்படி காண்பிப்பது? என் படத்தைப் போட்டு விட்டதால் கொஞ்சம் சுயபுராணம் பாடினால் என்ன என்று தோன்றியது! சமீபத்தில் பார்த்த "கல்லூரி" படத்தில் வருவது போல என்னுடைய கல்லூரி காலத்தில் ஜொள்ளிக் கொண்டு அலைந்தது பற்றி சொல்லலாம். பள்ளியில் படிக்கும் போது ஜெயந்தி என்று ஒரு பெண் கூடப் படித்தது. படிப்பில் ஒன்றும் பெரிய சுட்டி இல்லை (அதாவது அந்தப் பெண், நான் எப்போதுமே சுட்டிதான் ஹா ஹா ஹா) என்றாலும், பார்க்க நல்ல களையாக இருந்த ஒரு முகம். பள்ளியில் இருந்து கல்லூரிக்கு வந்த பின்னும் வீடு ஒரே ஏரியா என்பதால் கொஞ்ச நாள் டாவடித்துவிட்டு விட்டுவிட்டேன். பிறகு, நண்பன் சாலைமணி மாதவன் (நண்பா, எங்கேயடா இருக்கிறாய்?) தயவால் மத

எழுத்தாளர் சுஜாதா என்கிற மாபெரும் ஜீனியஸ்!

சுஜாதா என்கிற மாபெரும் எழுத்தாளர், இலக்கியவாதி, விஞ்ஞான ஆர்வலர், திரைப்பட வசனகர்த்தா...என்று பன்முகங்கள் கொண்ட இந்த ஜீனியஸ் பற்றிய முகவுரை தேவை இல்லை என்றாலும், நான் தமிழ் புத்தகமே படிப்பதில்லை என்று அலட்டல் செய்யும் நண்பர்கள் சிலரும், நான் புத்தகமே படிப்பதில்லை என்று சொல்லும் நண்பர்கள் பலரும் இருப்பதால்.... _____________________________________________________________________________________ நன்றி: சுப்புடு, கிறுக்கல்.காம் 70களிலும் 80களிலும் ஒரு ராக் ஸ்டார் அந்தஸ்து பெற்றிருந்த எழுத்தாளர் சுஜாதாவைப் நம்மைபோல் இந்தத் தலைமுறை ஆட்களும் படித்து ரசிப்பதற்கு அவரின் எழுத்துத் திறமை மட்டுமே காரணம். "When I was little, my ambition was to grow up to be a book. Not a writer. People can be killed like ants. Writers are not hard to kill either. But not books. However systematically you try to destroy them, there is always a chance that a copy will survive and continue to enjoy shelf-life in some corner of an out-of-the-way library somewhere, in Reykjavik, Valladolid, or Vancouver." -Am

நீங்கள் "helicopter parent" ஆ?

என்னய்யா இது? நான் ஹெலிகாப்டரில் போனதே இல்லை, என்னைப் போய் நீங்கள் ஹெலிகாப்டர் பேரன்ட்டா என்று கேட்டால் என்ன நியாயம் என்று கேட்கிறீர்களா? பொறுமை, பொறுமை. நம்மில் பலருக்கு நம் குழந்தைகள் என்ன வகுப்பில் படிக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருக்கலாம். ஆனால், நாம் நம் குழந்தைகள் மேல் (குறிப்பாக அவர்கள் படிப்பின் மேல்) ரொம்ப அக்கறை எடுத்துக் கொண்டு குழந்தைகள் வேண்டாம் என்று சொன்னால் கூட கேட்காமல் விழுந்து, விழுந்து அவர்களுடைய படிப்பில் உதவி செய்கிறோம் என்ற பேரில் உபத்திரவம் செய்கிறோம் என்றால் நமக்கு பெயர் "ஹெலிகாப்டர் பேரன்ட்." இதில் சில பெற்றோர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் குழந்தைகளுடைய record books, assignments, essays/experiments இவை எல்லாவற்றையும் கூட எழுதிக் கொடுப்பார்கள். இவர்களுக்கு கூடுதலாக "மிலிடரி ஹெலிகாப்டர் பேரன்ட்" அது சரி, இதற்கு ஏன் ஹெலிகாப்டர் பேரன்ட் என்ற பெயர் என்றால் இதைபோன்ற பெற்றோர்கள் ஒரு ஹெலிகாப்டரைப் போல குழந்தைகளுக்கு அருகிலேயே சுற்றிக் கொண்டிருப்பதால் (hovering around) இந்தப் பெயர். உலகின் சில தேர்ந்த சைக்காலஜிஸ்ட்கள் இது ஒரு ஆரோக்கியமான விஷயம் அல்

பல கல்யாணம்-நிறைய வருமானம்

சமீபத்தில் BBC TV யில் ஒரு வினோத செய்தி பார்த்தேன். இங்கிலாந்தில் பல பெண்களை திருமணம் செய்து கொண்டவர்களுக்கு நிறைய வரிச்சலுகைகளை அறிவித்திருக்கிறது Gordon Brown அரசாங்கம். பல பெண்களை திருமணம் செய்துகொண்டால் செலவும் அதிகம் இல்லையா, அதனால் இந்த சலுகை என்று கூறியிருக்கிறார் இங்கிலாந்தின் பிரதமர். ஆனால் ஒன்று, இங்கிலாந்து நாட்டு சட்டப்படி யாரும் அங்கே ஒருவருக்கு மேல் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஆனால், வெளிநாடுகளில் (குறிப்பாக இஸ்லாம் நாடுகளில்) ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்வது சர்வ சகஜம். இவர்கள் இங்கிலாந்தில் வசிக்கும் பட்சத்தில் இந்த சலுகைகள் அவர்களுக்கு கிடைக்கும். அடப்பாவிகளா! கொஞ்சம் வருடங்களுக்கு முன் இந்த சட்டம் வந்திருந்தால் நான், சாயீ, நரசிம்மன் எல்லோருமே இங்கிலாந்தில் செட்டில் அகியிருப்போமே! இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லப்பா!

மும்பை கலவரம்

ராஜ் தாக்ரே ஒரு LKG அரசியல்வாதி. இவர் தேவையில்லாமல் ஒரு கூட்டத்தில் பேசும்போது அமிதாப் பச்சனை வம்புக்கு இழுத்திருக்கிறார். என்னதான் மும்பையிலேயே இவ்வளவு வருடம் இருந்துகொண்டு கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அமிதாப் மும்பைக்கு எதுவும் செய்யவில்லை என்றும், முழுக்க முழுக்க உ.பி மாநிலத்துக்குதான் எல்லாம் செய்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். பதிலுக்கு அமிதாப் எதுவும் சொல்லாத நிலையில் அவருடைய மனைவி ஜெயா பச்சன் "எங்களுக்கு பால் மற்றும் உதவ் தாக்ரே ஆகியோரைத்தான் தெரியும், இது யார் ராஜ் தாக்ரே?" என்று எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிட்டார். உடனே, ராஜ் தாக்ரேயின் குண்டர்கள் மும்பை எங்கும் கலவரம் செய்து கண்ணில் பட்ட மற்ற மாநிலத்தவர்களை உதைத்து, கடைகளை நொறுக்கி, தீவைத்து ஏக கலாட்ட செய்தார்கள். இதில் கொடுமை என்னவென்றால் எல்லா செய்தி ஊடகங்களும் (channels) போட்டி போட்டுக்கொண்டு மும்பையில் பிற மாநிலத்தவர் இருக்கலாமா, வேண்டாமா? என்று கேனத்தனமாக sms contests நடத்தி கல்லா கட்டின. இதைவிட ஒரு கடைந்தெடுத்த அயோக்யத்தனம், முட்டாள்தனம் இருக்க முடியாது. மும்பை என்ன பாகிஸ்தானா? இதில் ஒரு ராஜ் தாக்ரே