கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை எவ்வளவு பேர் படித்திருப்பீர்கள் எனத் தெரியாது. நான் படித்திருக்கிறேன். அதில் ஒரு மிகப் பிரமாண்டமான வெள்ளத்தைப் பற்றி குறிப்பு இருக்கிறது. அந்த வெள்ளத்தின் போது ஜீசஸின் கட்டளையை ஏற்று நோவா என்பவர் ஒரு பெரிய படகு ஒன்றை தயாரிக்கிறார். உலகின் அனைத்து உயிரினங்களையும் காப்பற்றவேண்டி, எல்லா மிருகங்கள், பறவைகள் மற்ற உயிரினங்களின் ஒவ்வொரு ஜோடியை தன்னுடைய படகில் ஏற்று செல்கிறார். Noah"s Ark எனப்படும் இந்த படகுதான் பின்னாளில் உலகத்தில் மற்ற ஜீவராசிகள் வர முக்கியமான காரணம் என்று சொல்வார்கள்.
இப்போது நம் உலகம் அழிவுப் பாதையில் போய்க் கொண்டிருப்பதால், விஞ்ஞானிகள் ஒரு மிகப் பெரிய vault ஒன்றை Artic பிரதேசத்தில் கட்டி, அதனுள் உலகின் ஒவ்வொரு தாவர வகைகளின் மாதிரியையும் காப்பாற்ற எண்ணற்ற விதைகளை (கிட்டத்தட்ட4.5 மில்லியன்) பாதுகாக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
உலகின் அனைத்து தாவர வகைகளும் இங்கு பாதுகாப்பாக வைத்துவிட்டால், எதிர்காலத்தில் உலகம் அழிந்துவிட்டால், மறுபடியும் இந்த தாவர விதைகளைக் கொண்டு உலகைக் காப்பாற்றிவிடலாம் என்று நினைக்கிறார்கள். உலகின் ஒரு மூலையில், வட துருவத்தில் இருந்து 1000 கி.மி தூரத்தில் நார்வே நாட்டின் ஒரு மூலையில் இந்த இடம் இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் உயரத்தில் Svalbard இருக்கிறது. பெல்ஜியம் நாட்டை விட பெரிதான இந்த ஊரில் மொத்தமே 2300 பேர்தான் வசிக்கிறார்கள். காரணம் இந்த ஊரின் குளிர், பனி, எதுவுமே வளராத தன்மை.
இந்த vault எப்போதுமே மைனஸ் 18 டிகிரியில் இருக்குபடி அமைக்கபட்டிருக்கிறது. ஒருவேளை மின்சாரம் இல்லை என்றால் கூட இந்த ஊரின் தட்பவெட்பமே மைனஸ் 3.5 டிகிரிக்குமேல் போகாது என்பதால் எக்காலத்திலும் இந்த விதைகள் கெட்டுப் போக வாய்ப்பில்லை. முக்கியமாக, ஒரு வேளை அருகில் இருக்கும் கிரீன்லாந்தோ, ஆர்டிக் பிரதேசமோ முழுவதும் கரைந்து வெள்ளம் வந்தால் கூட, கடல் மட்டத்திலிருந்து 130 மீ மேல் இருப்பதால் ஒரு விதை கூட பாதிக்காது என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.
எனக்குள் இருக்கும் Doubting Thomas (இவரும் ஒரு பைபிள் கதாபாத்திரம்தான்) கேட்கும் கேள்வி: உலகமே அழிந்துவிட்டால், அப்புறம் யாருக்கு இந்த விதைகள் எல்லாம் பயன்படப் போகின்றன?

Comments