Skip to main content

Posts

Showing posts from November, 2012
மனமார்ந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!! எங்கும் மகிழ்ச்சி ஒளி நிறைய, இன்பம் பெருக இறைவன் அருளை வேண்டுகிறேன்!!

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டாகடை .,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு !! விருதுநகர் பரோட்டா, தூத்துக்குடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, வீச்சு பரோட்டா .....சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே!! பரோட்டாவின் கதை என்ன தெரியுமா   பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.   இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.   பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்? மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள். பரோட்டாவின் மூ