Skip to main content

Posts

Showing posts from August, 2010

ரூ.50,000/- ஐஸ்க்ரீம்

பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இந்த செய்தியே உதாரணம்: நியூ யார்க் நகரில் உள்ள "செரண்டிபிட்டி (Serendipity)" என்ற ரெஸ்டாரண்டில் அதனுடைய 50 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் ஒரு மிக விலையுயர்ந்த Grand Opulence Sundae என்ற ஐஸ்க்ரீம் ஒன்றை 1000 அமெரிக்கன் டாலருக்கு (சுமார் ரூ.50,000/-) அறிமுகம் செய்துள்ளனர். இதன் சிறப்புகள்: தஹிதி மற்றும் மடகாஸ்கர் போன்ற நாடுகளில் விளையும் மிக உயர்ந்த வகை வனிலா பருப்பிலிருந்து இதன் வனிலா க்ரீம் எடுக்கப்படுகிறது. உலகிலேயே விலை உயர்ந்த "அமேடி போர்சிலானா (Amedei Porceleana) என்ற சாக்லேட் இதில் சேர்க்கப்படுகிறது.  மேலும் விலையுயர்ந்த வெனிசுலா (Venezuela) நாட்டைச் சேர்ந்த சாக்லேட்டும் சேர்க்கப்படுகிறது.  பாரிஸ் நகரிலிருந்து வரவழைக்கப்படும் செர்ரி பழங்கள், மார்ஸிபான், மற்ற விலையுயர்ந்த பழங்களும் சேர்க்கப்படுகின்றன.  பிரான்ஸ் நாட்டில் அர்மனாக் பகுதியிலிருந்து வரவழைக்கப்படும் மிக உயர்ந்த வகை பிராந்தி சேர்க்கபடுகிறது.  தங்கத்தை மிக லேசாகத் தட்டி அதில் கிடைக்கும் தங்க இலை (gold foil) சேர்க்கபடுகிறது (நம் நாட்டில் பெ

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை

 உலகப் பொதுமறை திருக்குறளில் திருவள்ளுவர் சொன்னது போல இல்லாத ஒருவருக்கு உதவி செய்வதே தலை சிறந்த தானமாகும். இதை உலகில் மிகப் பெரிய அளவில், மிகச் சிறப்பாக நிரூபித்துக் கொண்டிருக்கும் இருவர் Bill Gates மற்றும் Warren Buffett. உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் இவர்கள் இருவரும் அவர்களுடைய சொத்தில் பெரும் பகுதியை பல்வேறு நலத் திட்டங்களுக்கு வழங்கி உதவி செய்து வருகிறார்கள். எங்கோ அமெரிக்காவில் பிறந்து, Microsoft என்ற பெரும் நிறுவனத்தினை நிறுவியதின் மூலம் வரும் வருவாயை இந்தியாவில் இருக்கும் AIDS நோயாளிகளுக்கு செலவிடுவதில் Bill Gates க்கு என்ன லாபம்? இந்திய அரசாங்கம் ஒதுக்கிய தொகையை விட Bill Gates செய்து வரும் உதவி பெரியது. இந்தியாவிலும் பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு தூரம் இதைப் போன்ற நலத் திட்டங்களுக்கு உதவுகிறார்கள் என்று பார்த்தால் பெரும்பாலானோர் எதுவும் உதவவில்லை என்பது தெரியும். Altruism என்ற ஆங்கில வார்த்தைக்கு சுயநலமில்லாத சேவை என்று பொருள். இதற்கு எனக்கு தெரிந்த வரையில் இந்தியாவில் இரண்டே பேரைத்தான் உதாரணமாக சொல்ல முடியும்; இருவருமே இப்போது உ

Super Bug என்ற பெயரில் இந்தியாவின் மேல் வீண்பழி

லண்டனிலிருந்து வெளிவரும் லான்செட் (Lancet) என்ற மருத்துவ இதழ் உலகப்  புகழ்பெற்றது. இதில் சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு சிகிச்சைக்காக செல்லும் அனைவரையும் அச்சுறுத்தும் வண்ணம் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் மூலம் எந்த மருந்துக்குமே கட்டுப்படாத ஒரு புதிய வகை நோய் தொற்றுக் கிருமி (NDM-1, Super bug) உலகமெங்கும் வேகமாகப் பரவுகிறது என்ற செய்திதான் இந்த பரபரப்புக்குக் காரணம். இதில் பெரிய வேதனை என்னவென்றால் இதை எழுதிய விஞ்ஞானிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த கார்த்திகேயன் குமாரசாமி என்பவர். இந்த கட்டுரையின் உள்நோக்கம் என்னவாக இருந்தாலும் இந்தியாவைச் சேர்ந்த தலை சிறந்த விஞ்ஞானிகள் பலர் இதற்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பெரிய எதிர்ப்பை எதிர்பார்க்காத இந்திய விஞ்ஞானி கார்த்திகேயன் குமாரசாமி உடனே புத்திசாலித்தனமாக இந்தக் கட்டுரையில் இந்தியாவை இழிவுபடுத்தும் நோக்குடன் தான் எதுவும் எழுதவில்லை என்றும், அவை தன்னுடைய கவனத்திற்கு வராமல் வேறொரு விஞ்ஞானியால் எழுதப்பட்டுள்ள

இந்தியர்களை தலை குனியச் செய்யும் கேவலப் பிறவி சுரேஷ் கல்மாடி

உலக அரங்கில் நமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்சம் நல்ல பெயரையும் குழி தோண்டிப் புதைத்து விட்டார் சுரேஷ் கல்மாடி. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் ஏன் நடத்தவேண்டும் என்று உலகமெங்கும் ஆவேசமான கேள்விகள் எழும் வண்ணம் ஊழல் புகார்கள் அடுக்கடுக்காக வந்தும் அசராமல் எல்லாப் புகார்களுக்கும் பொய்க் காரணங்கள் சொல்லி கோடிக்கணக்கான ரூபாயை முழுங்கிவிட்டு வளைய வரும் இந்த இழிவான பிறவியை இன்னும் உள்ளே தள்ளாமல் மத்திய அரசு மௌனம் காப்பது பெரும் வெட்ககேடு. டைம்ஸ் ஆப் இந்தியா ஆரம்பித்து வைத்து இந்த exposure அசிங்கத்தை இப்போது அத்தனை பத்திரிக்கைகளும், தொலைக் காட்சிகளும் கிழி, கிழி என்று கிழித்து வந்தாலும் எதற்கும் அசராமல் ஊழலுக்கு மேல் ஊழலாக செய்து வருகிறார் இந்த வெட்கங்கெட்ட கேவலப் பிறவி கல்மாடி. வேறு யாராவது ஒருவராக இருந்திருந்தால் இத்தனை நேரம் தூக்கி மாட்டி தொங்கியிருப்பர்கள். இதை போன்ற அரசியல் வா(வியா)திகளுக்கு ஏது வெட்கம், மானம், ரோஷம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

மூட நம்பிக்கையை வைத்து வியாபாரம் செய்யும் பகுத்தறிவு (?) கட்சியின் தொலைக் காட்சி சானல்கள்

சாமி இல்லை, பூதம் இல்லை என்றெல்லாம் சொல்லி பகுத்தறிவுக் காவலர்கள் என்று சொல்லிக் கொண்டு திரியும் திமுக வின் சன் மற்றும் கலைஞர் தொலைக் காட்சி சானல்கள் இரவு 10 மணியளவில் தினமும் நிஜம் என்ற பெயரில் நடத்தும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் மக்களின் மூட நம்பிக்கைகளை வைத்து பணம் பார்க்கும் நோக்கோடுதான் நடத்தப்படுகின்றன. தினமும் ஏதாவது ஒரு கிராமத்தில் பேய் உலாவுகிறது, பாம்பு சாமிக்கு பூசை செய்கிறது, மக்கள் மர்மமான முறையில் இறக்க காரணம் பழைய சாபம், பாம்புப் பெண்கள் பாம்பைப் போலவே சட்டை உரிக்கிறார்கள் என்றெலாம் ஏதாவது ஒரு கட்டுக் கதையை வைத்துக்கொண்டு மக்களின் மூட நம்பிக்கையை exploit செய்து பணம் சேர்க்கும் வேலையை இந்த இரண்டு சானல்களும் செய்கின்றன. இந்த மூட நம்பிக்கை வியாபாரத்தை ஆரம்பித்து வைத்த புண்ணியம் விஜய் டிவியைச் சேரும். இப்போது, ஜெயா டிவி உட்பட எல்லா சானல்களும் இதைபோன்ற உடான்ஸ் நிகழ்ச்சிகளை தினமும் ஒளிபரப்புகின்றன. மற்ற சானல்களை விட இந்த நிகழ்ச்சிகளை சன் மற்றும் கலைஞர் டிவி ஒளிபரப்பும்போது இது பெரும்பாலான மக்களை சென்று அடைகிறது. ஒரு பக்கம் சாதியே இல்லை என்று சொல்லிக் கொண்டு சாதி அடிப்டை

எந்திரனில் சுஜாதாவின் வசனம்

    சில நாட்களுக்கு முன்னதாக, எழுத்தாளர் சுஜாதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் சென்னையில் நடந்தது. உயிர்மை பதிப்பகம், சுஜாதா அறக்கட்டளை  இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஷங்கர், வசந்த், பார்த்திபன், ராஜீவ் மேனன், பட அதிபர் வி.சி.சந்திரசேககரன், எழுத்தாளர்கள்  இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், மதன், ஏ.நடராஜன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இயக்குனர் ஷங்கர் பேசியதாவது: சுஜாதா பன்முகம் கொண்டவர். அவரது எழுத்து திறமை மட்டுமே வெளியில் தெரிகிறது. மற்ற திறமைகள் மக்களுக்கு தெரியாமல் உள்ளது. திரைத் துறையில் அவர் சாதனை படைத்தார். வசனங்கள் சிறிதாகவும், பவர்புல்லாகவும் இருக்க வேண்டும் என்று கூறுவார். ‘அந்நியன்’ படத்தில்  ரயிலில் சாப்பாடு சரியில்லை, மின்விசிறி சுழலவில்லை என்று அம்பி (விக்ரம்) புகார் சொல்வார். அதைக்கேட்ட டி.டி.ஆர், ‘அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க’  என்பார். உடனே விக்ரம் ‘அட்ஜட்ஸ்ட் பண்ணி பண்ணித்தான் இந்த தேசம் இப்படி இருக்கு’ என்பார். ‘அந்நியன்’ படத்தில் ‘சிறுதப்புக்கும் கொலை  செய்வதா?’ என்று ஒருவர் கேட்க,’ தப்பு என்ன