உலகப் பொதுமறை திருக்குறளில் திருவள்ளுவர் சொன்னது போல இல்லாத ஒருவருக்கு உதவி செய்வதே தலை சிறந்த தானமாகும்.
இதை உலகில் மிகப் பெரிய அளவில், மிகச் சிறப்பாக நிரூபித்துக் கொண்டிருக்கும் இருவர் Bill Gates மற்றும் Warren Buffett. உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் இவர்கள் இருவரும் அவர்களுடைய சொத்தில் பெரும் பகுதியை பல்வேறு நலத் திட்டங்களுக்கு வழங்கி உதவி செய்து வருகிறார்கள்.
எங்கோ அமெரிக்காவில் பிறந்து, Microsoft என்ற பெரும் நிறுவனத்தினை நிறுவியதின் மூலம் வரும் வருவாயை இந்தியாவில் இருக்கும் AIDS நோயாளிகளுக்கு செலவிடுவதில் Bill Gates க்கு என்ன லாபம்? இந்திய அரசாங்கம் ஒதுக்கிய தொகையை விட Bill Gates செய்து வரும் உதவி பெரியது. இந்தியாவிலும் பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு தூரம் இதைப் போன்ற நலத் திட்டங்களுக்கு உதவுகிறார்கள் என்று பார்த்தால் பெரும்பாலானோர் எதுவும் உதவவில்லை என்பது தெரியும்.
Altruism என்ற ஆங்கில வார்த்தைக்கு சுயநலமில்லாத சேவை என்று பொருள். இதற்கு எனக்கு தெரிந்த வரையில் இந்தியாவில் இரண்டே பேரைத்தான் உதாரணமாக சொல்ல முடியும்; இருவருமே இப்போது உயிருடன் இல்லை-ஒருவர் மகாத்மா காந்தி, மற்றொருவர் அன்னை தெரஸா.
இதைப் போல சேவை மனப்பான்மை ஒருவருடைய மரபணுவிலேயே (genes) இருக்கிறது என்கிறது விஞ்ஞான ஆராய்ச்சி. Richard Dawkins எழுதிய "The Selfish Gene" என்ற புத்தகத்தில் இதை விளக்குகிறார்.ஒவ்வொருடைய மரபணுவும் selfish ஆக இருந்தால் மட்டுமே evolution எனப்படும் பரிணாம வளர்ச்சியில் தொடர்ந்து இருக்க/வளர முடியும் எனபதே அவருடைய தியரி.
எங்கோ பிறந்த Bill Gates இந்தியாவில் இருக்கும் AIDS நோயாளிகளுக்கு உதவும் போது, இந்தியாவில் இருக்கும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி திருப்பதி கோயிலுக்கு தங்க விமானம் வேய இரண்டு கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்துள்ளார். இது தானம் அல்ல, சுய நலம், விளம்பரம், பாவ பரிகாரம்...எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
இவரைத் தவிர மற்ற பெரும் பணக்காரர்கள் இந்தியவில் வறுமை ஒழிய எதுவும் உதவி செய்வதில்லை. அரசியல்வாதிகளிடம் நாம் இதை எதிபார்க்க முடியாது. எப்படி தானம் செய்யும் உணர்வு ஒருவருடைய மரபணுவில் இருக்கிறதோ, அதே போல மக்கள் சொத்தை கொள்ளை அடிப்பதும் அதே மரபணுவில் இருக்க சாத்தியம் இருக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். தலைமுறை, தலைமுறையாக மக்கள் சொத்தை திருடி, கோடிகளில் பணத்தை வைத்துக் கொண்டு அதை செலவு செய்ய திரைப் படங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு, மேலும், மேலும் பணத்தை ஈட்டும் வித்தை தமிழ்நாட்டில் ஒரு குடுமபத்துக்கு கை வந்த கலை.
லண்டனில் சில வருடங்களுக்கு முன் நடந்த தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பில் இறந்த ஒரு பெண்ணின் பெற்றோருக்கு இங்கிலாந்து அரசு உதவித் தொகை வழங்கிய போது, அதை அப்படியே எடுத்து இந்தியாவில் உள்ள பார்வையிழந்த குழந்தைகளின் சிகிச்சைக்கு கொடுத்துவிட்டனர். Altruism என்ற வார்த்தைக்கு இதைவிட வேறு சிறந்த உதாரணம் வேண்டுமா?
நலத் திட்டங்களுக்கு உதவி செய்ய நாம் Bill Gates அல்லது Warren Buffet போல பெரும் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அங்கங்கே, நம்மால் முடிந்த அளவு இல்லாதவர்க்கு உதவி செய்வதே பெரிய விஷயம். பிச்சைக்காரர்களுக்கு பிச்சையாக பணம் கொடுப்பதை விட ஏதேனும் உணவுப் பொருளை வாங்கிக் கொடுங்கள். என்னுடைய காரில் எப்போதும் நான்கைந்து பிஸ்கட் பாக்கட்டுகளை வைத்திருப்பேன். சிக்னலில் கார் நிற்கும் போது பிச்சை கேட்டு வரும் குழந்தைகளுக்கு அதை கொடுப்பதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்.படிப்பு உதவி கேட்டு வீட்டுக் கதவைத் தட்டும் குழந்தைகளுக்கு புத்தகங்களும், துணியும் வாங்கிக் கொடுக்க என்னால் முடிந்த அளவு உதவி செய்கிறேன்.
அரசியல்வாதிகளையும், அரசாங்கத்தையும் எதிர்ப்பார்த்து காத்திருக்காமல் நாமே, நம்மால் முடிந்த அளவு நம்முடைய இந்த சமுதாயத்திற்கு உதவி செய்வோம். இந்த 63 ம் சுதந்திர தின விழாவில் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். ஜெய் ஹிந்த்.
Comments