பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இந்த செய்தியே உதாரணம்: நியூ யார்க் நகரில் உள்ள "செரண்டிபிட்டி (Serendipity)" என்ற ரெஸ்டாரண்டில் அதனுடைய 50 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் ஒரு மிக விலையுயர்ந்த Grand Opulence Sundae என்ற ஐஸ்க்ரீம் ஒன்றை 1000 அமெரிக்கன் டாலருக்கு (சுமார் ரூ.50,000/-) அறிமுகம் செய்துள்ளனர். இதன் சிறப்புகள்:
- தஹிதி மற்றும் மடகாஸ்கர் போன்ற நாடுகளில் விளையும் மிக உயர்ந்த வகை வனிலா பருப்பிலிருந்து இதன் வனிலா க்ரீம் எடுக்கப்படுகிறது.
- உலகிலேயே விலை உயர்ந்த "அமேடி போர்சிலானா (Amedei Porceleana) என்ற சாக்லேட் இதில் சேர்க்கப்படுகிறது.
- மேலும் விலையுயர்ந்த வெனிசுலா (Venezuela) நாட்டைச் சேர்ந்த சாக்லேட்டும் சேர்க்கப்படுகிறது.
- பாரிஸ் நகரிலிருந்து வரவழைக்கப்படும் செர்ரி பழங்கள், மார்ஸிபான், மற்ற விலையுயர்ந்த பழங்களும் சேர்க்கப்படுகின்றன.
- பிரான்ஸ் நாட்டில் அர்மனாக் பகுதியிலிருந்து வரவழைக்கப்படும் மிக உயர்ந்த வகை பிராந்தி சேர்க்கபடுகிறது.
- தங்கத்தை மிக லேசாகத் தட்டி அதில் கிடைக்கும் தங்க இலை (gold foil) சேர்க்கபடுகிறது (நம் நாட்டில் பெரும்பாலான இனிப்பு வகைகளில் சேர்க்கப்படும் வெள்ளி இலை (Silver foil) வெள்ளியால் ஆனது அல்ல; அலுமினியத்தால் ஆனது. உடலுக்கு மிகத் தீங்கு விளைவிக்கக் கூடியது).
- எல்லாவற்றுக்கும் மேலாக Grand Passion Caviar எனப்படும் மிக அரிதான, விலையுயர்ந்த மீன் முட்டைகள் சேர்க்கப்படுகின்றன. இவை விளக்கு வெளிச்சத்தில் தங்கத்தைப் போல ஜொலிக்கும் தன்மை உடையவை.
- இதை எல்லாவற்றையும் ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து, சாப்பிட ஒரு தங்க ஸ்பூனும் தருகிறார்கள்.
Comments