லண்டனிலிருந்து வெளிவரும் லான்செட் (Lancet) என்ற மருத்துவ இதழ் உலகப் புகழ்பெற்றது. இதில் சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு சிகிச்சைக்காக செல்லும் அனைவரையும் அச்சுறுத்தும் வண்ணம் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் மூலம் எந்த மருந்துக்குமே கட்டுப்படாத ஒரு புதிய வகை நோய் தொற்றுக் கிருமி (NDM-1, Super bug) உலகமெங்கும் வேகமாகப் பரவுகிறது என்ற செய்திதான் இந்த பரபரப்புக்குக் காரணம்.
இதில் பெரிய வேதனை என்னவென்றால் இதை எழுதிய விஞ்ஞானிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த கார்த்திகேயன் குமாரசாமி என்பவர். இந்த கட்டுரையின் உள்நோக்கம் என்னவாக இருந்தாலும் இந்தியாவைச் சேர்ந்த தலை சிறந்த விஞ்ஞானிகள் பலர் இதற்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பெரிய எதிர்ப்பை எதிர்பார்க்காத இந்திய விஞ்ஞானி கார்த்திகேயன் குமாரசாமி உடனே புத்திசாலித்தனமாக இந்தக் கட்டுரையில் இந்தியாவை இழிவுபடுத்தும் நோக்குடன் தான் எதுவும் எழுதவில்லை என்றும், அவை தன்னுடைய கவனத்திற்கு வராமல் வேறொரு விஞ்ஞானியால் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மெடிக்கல் டூரிசம் என்ற பெயரில் நம் நாட்டிற்கு சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிவருகிறது. இந்தியாவில் இதன் தற்போதைய மதிப்பு 1200 கோடிக்கு இருக்கலாம். இந்தியாவின் potential ஐ பார்க்கும்போது இந்தத் தொகை வெறும் ஜூஜூபிதான்.
பல்வேறு நாட்டினர் இந்தியாவுக்கு சிகிச்சைக்கு வர இங்குள்ள மருத்துவ வசதிகள் வெளிநாடுகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல என்றாலும், சிகிச்சை செலவு மற்ற பெரும்பாலான நாடுகளைக் காட்டிலும் மிக மிகக் குறைவே. இங்குள்ள மருத்துவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள். நம்முடைய para-medical staff களும் உலகத் தரம் வாய்ந்தவர்கள்தான்.
UK, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியாவுக்கு சிகிச்சைக்காக செல்பவர்களை திசை திருப்பவே இந்த நாடகம் என நினைக்கத் தோன்றுகிறது. மேலும், இப்போது மிகப் பெரிய குரலில் மறுப்பு சொல்லும் இந்திய விஞ்ஞானி இதை முதலிலேயே செய்திருக்கலாமே?
இதையும் மீறி சமீபத்தில் International Society for Aesthetic Plastic Surgery வெளியிட்ட அறிக்கையில் Plastic Surgery இல் இந்தியாவை உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாக சேர்த்து பெருமைப்படுத்தியுள்ளது.
இந்த "Super Bug" சமாச்சாரமும் பன்றிக் காய்ச்சல் போல ஒரு புஸ்வானமாகட்டும். இதைப் போன்ற விஷயங்களை மறுபடி, மறுபடி வெளியிட்டு மக்களிடையே பீதியைக் கிளப்பும் பத்திரிக்கை/டிவிகளுக்கு கூடிய சீக்கிரம் மத்திய அரசு ஒரு பெரிய ஆப்பு வைக்கவேண்டும்.

Comments