என்னதான் நானும் ஒரு கிரிக்கெட் ரசிகன் என்றாலும், மிகுந்த எரிச்சலுடன், என் கருத்தை உங்களுடன் பரிமாறிக் கொள்கிறேன்:
கொஞ்ச நாட்களுக்கு முன் கோடிகளைக் கொட்டி பண முதலைகள்...மன்னிக்கவும், முதலாளிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் IPL அணிகளை வாங்கிய செய்தியை நாம் அறிவோம். இன்று அதைவிட பெரிய கூத்து நடந்திருக்கிறது; உலகெங்கிலும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை bidding மூலம் ஒவ்வொரு அணியின் முதலாளியும் வாங்கியிருக்கிறார்கள். எல்லாமே கோடியில்தான்.
இந்த bidding நேர்மையாக நடக்க வேண்டுமென லண்டனைச் சேர்ந்த பிரபல ஏல நிறுவனமான Chrirstie மூலம் இந்த ஏலம் நடந்துள்ளது. கன்னாபின்னா என்று விலை எகிறக் கூடாதென்று, ஒரு அணிக்கு குறைந்த பட்சம் US$ 1.5 மில்லியன் (ரூ.6 கோடி) அதிக பட்சம் US$5 மில்லியன் (ரூ.20 கோடி) என்றும் அளவீடு (capping) கொடுக்கப்பட்டது. இந்தத் தொகை மொத்த அணிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதில் ரொம்ப புத்திசாலித்தனமாக இந்தியாவின் மூத்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், யுவராஜ் சிங், சௌரவ் கங்குலி ஆகியோர்களை "Icon Players" என்று வகைப்படுத்தி இவர்கள் ஏலத்திற்கு அப்பாற்பட்டவர்கள், எதையும் தாண்டி புனிதமானவர்கள் என்று சொல்லிவிட, இவர்கள் எல்லோருமே அவரவர் home team க்குதான் விளையாடுவோம் என்று சொல்லிவிட்டார்கள் (இதற்கு இவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1.6 கோடி கொடுக்கலாம் என BCCI பரிந்துரை (recommendation) செய்ததாக சில TV Channel கள் செய்தி வெளியிட்டன. இவை எல்லாமே இன்றைய bidding நடப்பதற்கு முன்.
இன்றைய bidding நடந்தபிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. இன்றைய இளைய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான M S Dhoni அதிகபட்ச விலைக்கு சென்னையின் Super Kings அணி ரூ.6 கோடிக்கு வாங்கிவிட்டது. அதன் பின் கும்ப்லேயில் ஆரம்பித்து நிறைய இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களை கோடிகளைக் கொட்டி ஒவ்வொரு அணியின் முதலாளிகளும் வாங்கிவிட்டனர்.
இதில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், கில் கிறிஸ்ட், ஷேன் வார்ன் (தமிழ் புத்தகங்களும், பத்திரிகைகளும், TV Channel களும் இவர் பெயரை ஷேன் வார்னே என்று குறிப்பிட்டு எரிச்சலூட்டுகிறார்கள்), பிரெட் லீ, மாத்யூ ஹேடன் ஆகியோரையும் வெவ்வேறு அணியினர் வாங்கியுள்ள நிலையில், ஹைதராபாத் அணிக்காக அன்ட்ரூ சைமண்ட்சை ரூ.5.6கோடி கொடுத்து வாங்கியிருப்பது என்ன லாஜிக் என்று புரியவில்லை. சைமண்ட்ஸ் அவ்வளவு பெரிய வீரரா என்று கிரிக்கெட் வல்லுனர்கள் யாராவது விளக்கினால் தேவலை!
பாவம், ஆஸ்திரேலியாவின் க்லென் மெக்ராவையும், பாகிஸ்தானின் மொஹமத் யூஸப் ஆகிய இருவரையும் இன்னும் எந்த அணியும் சீண்டவில்லை.
இதில் உனக்கென்ன வருத்தம் என்று கேட்பவர்களுக்கு; இவ்வளவு கோடிகளைக் கொட்டி கிரிக்கெட் வீரர்களை வாங்கும் இந்த முதலாளிகள், ஏன் இன்னும் மின்சார வசதி கூட வராத 1800 கிராமங்களை தத்து எடுத்து எதாவது நல்லது செய்யக்கூடாதா? அது சரி, அது நம் அரசின் வேலையல்லவா?
நம் கிரிக்கெட் அணிகளின் முதலாளிகளின் தற்போதைய தலையாய வேலை டோனி, யுவராஜ் சிங், சச்சின் போன்ற எண்ணற்ற ஏழைகளின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதுதானே?
http://www.ibnlive.com/news/ipl-showers-money-on-players-dhoni-tops-charts/59410-5-p1.html
Comments