என்னய்யா இது? நான் ஹெலிகாப்டரில் போனதே இல்லை, என்னைப் போய் நீங்கள் ஹெலிகாப்டர் பேரன்ட்டா என்று கேட்டால் என்ன நியாயம் என்று கேட்கிறீர்களா?
பொறுமை, பொறுமை. நம்மில் பலருக்கு நம் குழந்தைகள் என்ன வகுப்பில் படிக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருக்கலாம். ஆனால், நாம் நம் குழந்தைகள் மேல் (குறிப்பாக அவர்கள் படிப்பின் மேல்) ரொம்ப அக்கறை எடுத்துக் கொண்டு குழந்தைகள் வேண்டாம் என்று சொன்னால் கூட கேட்காமல் விழுந்து, விழுந்து அவர்களுடைய படிப்பில் உதவி செய்கிறோம் என்ற பேரில் உபத்திரவம் செய்கிறோம் என்றால் நமக்கு பெயர் "ஹெலிகாப்டர் பேரன்ட்."
இதில் சில பெற்றோர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் குழந்தைகளுடைய record books, assignments, essays/experiments இவை எல்லாவற்றையும் கூட எழுதிக் கொடுப்பார்கள். இவர்களுக்கு கூடுதலாக "மிலிடரி ஹெலிகாப்டர் பேரன்ட்"
அது சரி, இதற்கு ஏன் ஹெலிகாப்டர் பேரன்ட் என்ற பெயர் என்றால் இதைபோன்ற பெற்றோர்கள் ஒரு ஹெலிகாப்டரைப் போல குழந்தைகளுக்கு அருகிலேயே சுற்றிக் கொண்டிருப்பதால் (hovering around) இந்தப் பெயர்.
உலகின் சில தேர்ந்த சைக்காலஜிஸ்ட்கள் இது ஒரு ஆரோக்கியமான விஷயம் அல்ல என்கிறார்கள். குழந்தைகள் இயற்கையாக அவர்களுடைய குணநலன்களை வளர்த்துக் கொள்ள இது ஒரு தடையாக இருக்குமென நினைக்கிறார்கள். எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைகளைச் சேர்க்க செல்லும்போது பெற்றோரைப் பார்த்து "are you a helicopter parent?" என்று கேட்கிறார்கள்.
சமீபத்தில் என்னுடைய மகள் Ananyaa வை கோபாலபுரத்தில் உள்ள DAV பள்ளியில் சேர்த்தோம். அப்போது என் மகளுடன் சென்றிருந்த என் மனைவியிடம் இந்த கேள்வி (are you a helicopter parent?) கேட்கப்படிருக்கிறது. அவளால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், நுழைவுத் தேர்வு (entrance test) மற்றும் நேர்முகம் (interview) மூலம் என் மகளுக்கு அட்மிஷன் கொடுத்து விட்டார்கள். என் மனைவி இதை என்னிடம் கேட்டபோது நான் இணையத்தில் (internet) தேடியபோது கிடைத்த சில சுவாரசியமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
மேலும் சில தகவல்களுக்கு: http://www.utexas.edu/features/2007/helicopter
Comments