Skip to main content

கிலிமாஞ்சாரோ

 


சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எந்திரன் படத்தில் கிலிமாஞ்சாரோ என்று ஒரு பாடல் வருகிறது. இதை இதுவரை யாருமே சென்று எடுக்காத மச்சு-பிச்சு (Machu-Picchu) என்ற இடத்தில எடுத்திருக்கிறார்கள். இது பெரு நாட்டில் உள்ள ஒரு மிகப் புராதனமான  இடம்.

அந்தப் பாடலின் ஆரம்ப வரிகள் இவை:
கிலிமஞ்சரோ  – மலை
கனிமஞ்சரோ  – கன்னக்
குழிமஞ்சரோ
யாரோ  யாரோ 

பெரு நாட்டில் மச்சு-பிச்சுவில் எடுத்துவிட்டு ஒரு எதுகை-மோனைக்காக கிலிமஞ்சரோ என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலை எழுதிய கவிஞர் Dr. விஜய்.

இவர் இன்று மாலை சன் டிவியில் அந்தப் பாடல் ஒளிபரப்பானபோது," நிறையப் பேர் கிலிமஞ்சரோ என்றால் என்ன என்று கேட்கிறார்கள், கிலிமஞ்சரோ, உயரமான எவரஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ள ஒரு இடம்," என்று மிக அபத்தமாக உளறினார்.

கிலிமஞ்சரோ சிகரம் இருப்பது தென் ஆப்ரிக்காவில். அதற்கும் எவரெஸ்ட் சிகரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதைப் போல எந்தவிதமான பொது அறிவும் இல்லாமல் இருக்கும் இவருக்கு எந்த புத்திசாலி டாக்டர் பட்டம் கொடுத்தது என்று தெரியவில்லை.

என்ன கொடுமை இது?

Comments

கிளிமஞ்சாரோ என்பதுதானே சரியான வார்த்தை, கிலிமஞ்சரோ என்பது தவறு.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88

http://ta.wikipedia.org/wiki/கிளிமஞ்சாரோ_மலை
Ram Sridhar said…
ள, ழ போன்ற எழுத்துக்கள், அவற்றின் தனிப்பட்ட உச்சரிப்பு எல்லாம் தமிழ் மொழியில் மட்டும்தான். வேறு எந்த மொழியிலும் கிடையாது. எனவே அது "கிலிமாஞ்சாரோ" தான் "கிளிமாஞ்சரோ" கிடையாது.
Karthik said…
Boss.. Enakku Tamil eludhuvadhu konjam kastam dhan..

But English letters tamil translate pannum podhu.. endha variyations um podalam nu sollaradhu thavaru..

But eluthukkalin uruvam, Phonetics vechi decide pannanum.. So.. ள, ழ matters..
And Tamil is known for its unique Phonetic Symbols..
ஆனாலும் உங்களுக்கு ஆசை சார். இவங்கள்லாம் சரியாப் பேசுவாங்கன்னு. டாக்டர் பட்டம் வாங்குனா ஒழுங்கா பேசனும்னு எந்தச் சட்டத்துல இருக்கு? நாங்க எப்பவுமே அபத்தமாத்தான் பேசுவோம். ஏனா எங்களுக்குத் தெரிஞ்சதே அவ்வளவுதான.. சும்மா டாக்டர் பட்டத்தைப் பத்தி பேசிகிட்டு.. நாங்கள்ளால் கிளினிக் அரம்பிச்சு உங்கள மாதிரி கொற சொல்ற ஆளுகளுக்கு வைத்தியம் பாத்தாத்தன் நீங்கள்ளாம் அடங்குவீங்க..

:-)

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

'சுஜாதா - எழுத்தின் கோட்பாடு' - சுஜாதாவின் படைப்புகள் பற்றிய புதிய பார்வையில்  ஒரு புத்தகம் 

சுஜாதாவின் சுவாரஸ்யமான படைப்புகளில் 50 படைப்புகளைத் தேர்வு அவற்றைப் பற்றி என்னுடைய பார்வை ' சுஜாதா - எழுத்தின் கோட்பாடு ' என்ற பெயரில் புத்தகமாக விரைவில் வருகிறது. இந்தப் புத்தகத்தில் சுஜாதாவின் தேர்ந்தெடுத்த கதைகள் / நாடகங்கள் / திரைப்பட வசனங்கள் பற்றிய பார்வை மட்டுமே இருக்கும். சற்று வித்தியாசமாக, புத்தகத்தின் முகவுரையாக 'சுஜாதாவுடன் நான்' என்ற பெயரில் சுஜாதாவுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்த சில பிரபலங்கள் தங்களுடைய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். புத்தக வெளியீடு தேதி போன்ற விவரங்கள் இங்கு விரைவில் பகிர்ந்துகொள்ளப்படும். அச்சுப் புத்தகத்திற்கு என்றும் தீவிர ரசிகர்கள் இருப்பதால் அச்சுப் புத்தக விற்பனைக்கு மட்டும் முழுக்கட்டணத்துடன் முன் பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும். முன் பதிவு செய்பவர்களுக்கு வீட்டுக்கு Speed Post மூலம் புத்தகம் அனுப்பிவைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.