சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எந்திரன் படத்தில் கிலிமாஞ்சாரோ என்று ஒரு பாடல் வருகிறது. இதை இதுவரை யாருமே சென்று எடுக்காத மச்சு-பிச்சு (Machu-Picchu) என்ற இடத்தில எடுத்திருக்கிறார்கள். இது பெரு நாட்டில் உள்ள ஒரு மிகப் புராதனமான இடம்.
அந்தப் பாடலின் ஆரம்ப வரிகள் இவை:
கிலிமஞ்சரோ – மலை
கனிமஞ்சரோ – கன்னக்
குழிமஞ்சரோ
யாரோ யாரோ
பெரு நாட்டில் மச்சு-பிச்சுவில் எடுத்துவிட்டு ஒரு எதுகை-மோனைக்காக கிலிமஞ்சரோ என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலை எழுதிய கவிஞர் Dr. விஜய்.
இவர் இன்று மாலை சன் டிவியில் அந்தப் பாடல் ஒளிபரப்பானபோது," நிறையப் பேர் கிலிமஞ்சரோ என்றால் என்ன என்று கேட்கிறார்கள், கிலிமஞ்சரோ, உயரமான எவரஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ள ஒரு இடம்," என்று மிக அபத்தமாக உளறினார்.
கிலிமஞ்சரோ சிகரம் இருப்பது தென் ஆப்ரிக்காவில். அதற்கும் எவரெஸ்ட் சிகரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதைப் போல எந்தவிதமான பொது அறிவும் இல்லாமல் இருக்கும் இவருக்கு எந்த புத்திசாலி டாக்டர் பட்டம் கொடுத்தது என்று தெரியவில்லை.
என்ன கொடுமை இது?
Comments
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88
http://ta.wikipedia.org/wiki/கிளிமஞ்சாரோ_மலை
But English letters tamil translate pannum podhu.. endha variyations um podalam nu sollaradhu thavaru..
But eluthukkalin uruvam, Phonetics vechi decide pannanum.. So.. ள, ழ matters..
And Tamil is known for its unique Phonetic Symbols..
:-)