உலகில் அதிக அளவில் விற்பனையாகும் "ஸ்னோ"பீர் -ஒரு சீனா தயாரிப்பு |
உலகம் முழுவதும் உள்ள மக்களால், தண்ணீர், டீ ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, அதிகமாக விரும்பி குடிக்கப்படும் பானம் எது தெரியுமா? சந்தேகமே வேண்டாம்... பீர் தான். அதுவும், மேற்கத்திய நாடுகளில், பீர் குடிப்பது சர்வ சாதாரணம்.
ஜெர்மனி, பிரிட்டன், பெல்ஜியம், அமெரிக்கா போன்ற நாடுகளில், ஒவ்வொரு ஆண்டும் பீருக்காக, திருவிழாக்களே நடத்தப்படும் நடைமுறை உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் தான், பீர் அதிகமாக விற்பனையாகி வந்தது. ஆனால், சமீபகாலமாக இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில், பீர் விற்பனை திடீரென அதிகரித்துள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகளில், பீர் விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக, சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வில் ஆச்சரியமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், பீர் விற்பனை, 72 சதவீதம் வரை, சரிவை சந்தித்துள்ளது. பீர் குடிப்பதால், உடல் எடை அதிகரித்து விடுகிறது என, அமெரிக்க மக்களிடையே கருத்து எழுந்துள்ளது தான், இந்த சரிவுக்கு காரணம்.
ஜப்பானிலும் பீர் விற்பனை, கணிசமாக குறைந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன், எந்த அளவுக்கு விற்பனையானதோ, அந்த அளவுக்கு தான், தற்போதும் விற்பனையாகிறது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ஜப்பானின் ஏற்றுமதியை அடியோடு பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாலும், வயதான மக்கள், பீர் குடிக்கும் பழக்கத்தை கைவிட்டதாலும் தான், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில், கடந்த, 2008ல் பீருக்கு அதிக வரி விதிக்கப்பட்டதில் இருந்தே, அதன் விற்பனை தள்ளாடத் துவங்கி விட்டது. பீரின் விலை, அளவுக்கு அதிகமாக <உயர்ந்து விட்டதால், இதை குடிப்பதற்கு பதிலாக, வெறும் தண்ணீரை குடித்து விடலாம் என கருதிய பிரிட்டன் மக்கள், பீருக்கு டாடா கூறி விட்டனர். இதனால், சமீபகாலமாக, பிரிட்டனில் ஏராளமான பார்களுக்கு மூடு விழா நடத்தி விட்டனர்.
ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாகும் மொத்த பீர்களில், 20 சதவீதம், ஜெர்மனியில் தான் விற்பனையாகிறது. அங்கு பீர் விற்பனை குறையவில்லை என்றாலும், அதன் விற்பனை, எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என, ஜெர்மனியில் உள்ள பீர் தயாரிப்பு நிறுவனங்கள், புலம்பத் துவங்கி விட்டன.
வளர்ந்து வரும் நாடுகளில், நிலைமை தலைகீழாக உள்ளது. இந்தியாவில், கடந்தாண்டில் மட்டும் பீர் விற்பனை, 14 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டில், 170 கோடி லிட்டர் பீர் விற்பனையாகியுள்ளதாக, ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த, 2004ம் ஆண்டின் விற்பனையை ஒப்பிடுகையில், தற்போது, 70 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சி மற்றும் பீர் குடிப்பதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவது ஆகியவை தான், இந்த கிடுகிடு வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.
பீர் விற்பனையில் உலகின் முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது சீனா. கடந்த சில ஆண்டுகளாக, பீர் விற்பனை, இங்கு சக்கை போடு போடுகிறது. கடந்த, 2004ல், 28 ஆயிரத்து, 640 கிலோ லிட்டராக இருந்த பீர் விற்பனை, 2009ல், 42 ஆயிரத்து, 194 கிலோ லிட்டராக அதிகரித்துள்ளதால், மேற்கத்திய நாடுகளே, இதைப் பார்த்து அசந்து போய் இருக்கின்றன.
நன்றி: தினமலர்
பீர் குடிப்பது தவறு என நினைக்கும் மக்களுக்காகவே சீனா ஒரு புதிய வகை பீரை அறிமுகப்படுத்தியுள்ளது. முழுக்க, முழுக்க அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த பீரின் பெயர் "சிங்-டோ" (Tsingtao ). தற்போது மும்பை, பூனா, டெல்லி ஆகிய நகரங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதற்கு இருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியைத் தருகிறது என்கிறது இதைத் தயாரிக்கும் சிங்-டோ ப்ருவரி நிறுவனம்.
Comments