Skip to main content

கொள்ளையர்கள், கொலைகாரர்கள், கோடீஸ்வரர்கள்...

லோக்சபாவுக்கு, வரும் 16ம் தேதி முதல் கட்டமாக நடக்கும் தேர்தலில் 1,425 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில், 193 பேர் கோடீஸ்வரர்கள்; 222 பேர் கிரிமினல்கள். அத்துடன் முழுமையான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களும் கணிசமான அளவில் இடம் பெற்றுள்ளனர்.


லோக்சபா தேர்தல் ஐந்து கட்டமாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் வரும் 16ம் தேதி நடக்கிறது. 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 124 தொகுதிகளில் நடக்கும் இந்தத் தேர்தலில் மொத்தம் 1,425 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 222 பேர் கிரிமினல்கள். அதில், 51 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மொத்த வேட்பாளர்களில் 16 சதவீதம் பேர் கிரிமினல்களே.


போட்டியிடும் 222 கிரிமினல்களில், 24 பேர் காங்கிரஸ் கட்சியையும், 23 பேர் பா.ஜ., 17 பேர் பகுஜன் சமாஜ், 10 பேர் சமாஜ்வாடி, எட்டுப் பேர் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், ஏழு பேர் ஐக்கிய ஜனதா தளம், ஐந்து பேர் தெலுங்கு தேசம், ஏழு பேர் ராஷ்டிரிய ஜனதா தளம், இரண்டு பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இரண்டு பேர் தேசியவாத காங்கிரஸ், ஆறு பேர் சிரஞ்சீவி தலைமையிலான பிரஜா ராஜ்யம் கட்சியையும் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் சுயேச்சைகள் மற்றும் சிறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். கொலை, கொள்ளை, பணம் பறிப்பு, கொலை முயற்சி, ஆட்கடத்தல் என, பல்வேறு விதமான குற்றங்களில் இவர்களுக்கு தொடர்பு உண்டு. இந்த கிரிமினல்களுக்கு எதிராக 571 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 306 வழக்குகள் கொடூரமான குற்றங்கள் தொடர்பானவை.


அதிகம்: அதே நேரத்தில், முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 14 சதவீதம் பேர் அதாவது 193 பேர் கோடீஸ்வரர்கள். கடந்த லோக்சபா தேர்தலோடு ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை 9 சதவீதம் அதிகம். காங்கிரஸ் சார்பில் 45 கோடீஸ்வரர்களும், பா.ஜ., சார்பில் 30, பகுஜன் சமாஜ் சார்பில் 22 கோடீஸ்வர்களும் போட்டியிடுகின்றனர். மற்றவர்கள் இதர கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர். அதே நேரத்தில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 68 சதவீதம் பேர் தங்களின் வருமானம் குறித்த முழு விவரம் தராதவர்கள். தேர்தலில் போட்டியிடுவோர் தங்களின் சொத்து விவரங்களோடு, "பான்' கார்டு மற்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்பது விதி. இருந்தாலும், 68 சதவீதம் பேர் அதை செய்யவில்லை.


மேலும், மொத்த வேட்பாளர்களில் 93 சதவீதம் பேர் ஆண்கள், 7 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். 60 சதவீதம் பேர் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் அல்லது டாக்டர் பட்டம் பெற்றவர்கள். ஒரே தொகுதியில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரிமினல் வேட்பாளர்கள் போட்டியிட்டால், அந்த தொகுதி "Red Hot" என, அழைக்கப்படுகிறது. இதன்படி, தேர்தல் நடக்கும் 124 தொகுதிகளில் 38 தொகுதிகள், "ரெட் ஹாட்' என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் பீகார் மாநிலம் முதலிடம் வகிக்கிறது.


பீகாரில் முதல் கட்ட தேர்தலில் 200 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 26 சதவீதம் பேர், அதாவது 51 பேர் கிரிமினல்கள். ஜார்க்கண்டில் போட்டியிடும் 79 பேரில் 17 பேரும், மகாராஷ்டிராவில் போட்டியிடும் 242 பேரில் 42 பேரும், உ.பி.,யில் போட்டியிடும் 268 பேரில் 46 பேரும் கிரிமினல்கள். நாடு முழுவதும் 1,200 அரசு சார்பற்ற அமைப்புகளை உள்ளடக்கிய, தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக பிரசாரம் மேற்கொண்டு வரும், "National Election Watch" என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன.

தேர்தல் ஆணையம் [Election Commission] என்று ஒன்று இருந்ததாக ஞாபகம்; அது சரி, எல்லாம் வல்ல அரசியல்வாதிகள் முன் அதெல்லாம் எம்மாத்திரம்? தமிழ்நாடு Chief Election Commissioner திரு. நரேஷ் குப்தாவைப் பார்த்தாலே பாவமாக இருக்கிறது.

Courtesy: Dinamalar.com

Comments

SethuMandapam said…
Sridhar
It is nice to have brought statistics to light. Though we keep reading these were very difficult to digest. Please also let us know as how we can register "NOT INTENDING TO CAST A VOTE". I wish to do that from Kolkatta. Is it possible and I do not want my vote to be filled in by some unknown criminal to aid another criminal.
your response will help our Ramya group as well as the country.

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...