Skip to main content

பைரஸி பூதம்!

சமீபத்தில் பார்த்த அயன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். மலேசியாவிலிருந்து சூர்யா ஒரு திருட்டு மாஸ்டர் DVD யுடன் வருவார். அவரை கூட்டிப் போகவரும் பிரபு சொல்லுவார், " "நாளைக்குத் தான் இந்த படம் ரிலீஸ், அதுக்குள்ள எவ்வளவு பிரிண்ட் போடமுடியுமோ அவ்வளவு போட்டு வித்துடனும்."

அது பாடலாக இருந்தாலும் சரி, அல்லது திரைப்படமாக இருந்தாலும் சரி சுடச் சுட உடனே பைரஸியாக வெளிவந்துவிடுகின்றன.

பைரஸி dvd வாங்கக்கூடாது என்று என் நண்பி சுதாவைப் போல வெகு சிலரே பிடிவாதமாக இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்த வரை இது டெக்னாலஜியின் சாபக்கேடு. என்னதான் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு திரைத் துறையினர் கவனமாக இருந்தாலும் எல்லா மொழிப் படங்களுமே உடனடியாக சந்தைக்கு வந்து விடுகின்றன. ரூ.10 முதல் 30 கிடைக்கும் இந்த [பெரும்பாலும்] பாடாவதியான ப்ரிண்டைப் பார்த்துவிட்டு படம் சூப்பர் என்றோ சொதப்பல் என்றோ உடனடியாக அந்த படத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது.

இதுவே அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோடீஸ்வரனாகவோ அல்லது பீச்சில் கொண்டக்கடலை சுண்டல் விற்பவராகவோ ஆகிவிட வழிவகுக்கிறது.

என்னைப் பொறுத்தவரை நான் தமிழ் படங்களை பைரஸி dvd யில் பார்ப்பதில்லை. உடனே நான் ஒரு மறத்தமிழன், தன்மானத் தமிழன் என்றெல்லாம் சொல்லிகொள்ளப் போவதில்லை. ஆங்கிலப் பட dvd க்கள் பைரஸியாக இருந்தாலும் மிகத் தெளிவான ப்ரிண்டுடன் வருகின்றன. சற்று விலை அதிகம் என்றாலும் தங்கத் தகட்டில் [gold disc] மட்டும் வாங்குவது என்ற என் பிடிவாதம் மட்டுமே காரணம் இல்லை.

ஆங்கிலப் படங்களின் dvd க்கள் படம் வந்த சில நாட்களிலேயே காபிரைட்டுடன் dvd யாக வந்து விடுகின்றன. ஆனால், தமிழ் திரையுலகம் தேவையில்லாமல் படம் வெளியாகி மூன்று ஆண்டுகளுக்கு பின்தான் dvd யாக வரவேண்டுமென அனாவசியமான ஒரு கட்டுப்பாட்டினால் இந்த பிரச்சினையில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது.

இதனால் மட்டமான பிரிண்ட் மட்டுமே பைரஸி dvd யாக கிடைக்கிறது. மூன்று வருடங்களுக்குப் பின்னர் காபி ரைட்டுடன் ரூ.40 க்கு MoserBaer dvd யாக வந்தாலும் அதை நாய் சீண்டுவதில்லை.

இதில் ஒரு ஆச்சரியமான/அதிர்ச்சிகரமான விஷயம் நேற்று நடந்தது; என் அருமை மகன் என்னைப் போலவே ஒரு ஆங்கிலப் பட பைத்தியம். வெகு சின்ன வயதிலிருந்தே [பெரும்பாலும்] நல்ல படங்களாகவே என்னுடன் சேர்ந்து பார்த்து வருவதால் அவனுடைய ரசனை நன்கு பண்பட்டு இருக்கிறதென்றே சொல்லவேண்டும். அவன் ஒரு பைரஸி dvd யை என்னிடம் கொடுத்து படம் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறதென்று சொல்லு என்று சொல்லிவிட்டு போய் விட்டான். Wolverine என்ற படம் X-Men series இல் வந்த படங்களின் prequel.

IMDB என்ற இணையதளத்தை எப்போதும் refer செய்தே படம் வாங்குவது என் பழக்கம்; நேற்றும் அப்படி இந்த Wolverine படத்தை refer செய்ய முயன்றபோது அதிர்ச்சி அடைந்தேன், காரணம், அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி 1, மே 2009 என்று இருந்தது. அடப் பாவிகளா! மறுபடியும் முதல் பாராவைப் படிக்கவும்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

'சுஜாதா - எழுத்தின் கோட்பாடு' - சுஜாதாவின் படைப்புகள் பற்றிய புதிய பார்வையில்  ஒரு புத்தகம் 

சுஜாதாவின் சுவாரஸ்யமான படைப்புகளில் 50 படைப்புகளைத் தேர்வு அவற்றைப் பற்றி என்னுடைய பார்வை ' சுஜாதா - எழுத்தின் கோட்பாடு ' என்ற பெயரில் புத்தகமாக விரைவில் வருகிறது. இந்தப் புத்தகத்தில் சுஜாதாவின் தேர்ந்தெடுத்த கதைகள் / நாடகங்கள் / திரைப்பட வசனங்கள் பற்றிய பார்வை மட்டுமே இருக்கும். சற்று வித்தியாசமாக, புத்தகத்தின் முகவுரையாக 'சுஜாதாவுடன் நான்' என்ற பெயரில் சுஜாதாவுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்த சில பிரபலங்கள் தங்களுடைய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். புத்தக வெளியீடு தேதி போன்ற விவரங்கள் இங்கு விரைவில் பகிர்ந்துகொள்ளப்படும். அச்சுப் புத்தகத்திற்கு என்றும் தீவிர ரசிகர்கள் இருப்பதால் அச்சுப் புத்தக விற்பனைக்கு மட்டும் முழுக்கட்டணத்துடன் முன் பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும். முன் பதிவு செய்பவர்களுக்கு வீட்டுக்கு Speed Post மூலம் புத்தகம் அனுப்பிவைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.