சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்த சமையல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிளாய்ட் கார்டோஸ் (Floyd Cardoz) என்பவர் உப்புமா செய்ததின் மூலம் பரிசுத் தொகையாக 1 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.45 லட்சம் ) வென்று இருக்கிறார்.
இந்தப் போட்டியில் பங்கேற்றவர்களை உங்கள் நினைவில் நிற்கும் அல்லது நீங்கள் அதிகம் ஈர்க்கப்பட்ட ஒரு உணவு வகையை செய்யுங்கள், அதே சமயம் அது சத்துள்ளதாக இருக்க வேண்டும் என்று நடுவர்கள் சொல்லி இருந்தனர். நம்மூர் உப்புமாவில் பலவகையான காய்கறிகளுடன் ஊட்டச்சத்து மிகுந்த காளானையும் போட்டு ஒரு புதுவிதமான உப்புமா செய்து முதல் பரிசை வென்றுள்ளார் பிளாய்ட். இவர் நியுயார்க் நகரில் "தபலா" எனப்படும் ஒரு ரெஸ்டாரண்டில் முதன்மை சமையற்காரராக (Chief Chef) பணியாற்றிவருகிறார். வாழ்வுதான்.
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்
Comments