Skip to main content

ஆங்கிலப் பட விமர்சனம் - Winter's Bone - வாழ்க்கையே போர்க்களம்; வாழ்ந்துதான் பார்க்கணும்

நீ பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இடையே நீ தெரிந்து கொள்ளக் கூடாத உண்மைகள் இருக்கின்றன

 அமெரிக்காவின் ஓசார்க் (Ozark Region) மிசௌரி மற்றும் ஆர்கன்சாஸ் இடையே உள்ள ஒரு இடம். அதிகம் இயற்கை வளமோ, ஒரு நகரத்திற்குரிய முன்னேற்றம் எதுவும் இல்லாத ஒரு (கிட்டத்தட்ட) வறண்ட பூமி. கதாநாயகி ரீ டாலி (Jennifer Lawrence) தந்தை போதை மருந்து அடிமை. அடிக்கடி போதை மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் அவனால் குடும்பம் தனித்து விடப்பபடுகிறது. ரீயின் தாய் மனநிலை சரியில்லாத நிலையில், தாயையும், இரண்டு உடன் பிறப்புகளையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு 17 வயதான ரீயின் தலையில் விழுகிறது.

உதவிக்கென யாருமே இல்லாத நிலையில் குடும்பத்தைக் காப்பாற்றும் முயற்சியில் மிகவும் கஷ்டப்படுகிறாள் ரீ. திடீரென ஒரு நாள் வீடு தேடிவரும் காவல் அதிகாரி ரீயின் தந்தை ஜாமீனில் வெளிவரும் பொருட்டு, அதற்கு பிணயமாக அவர்கள் வசிக்கும் வீட்டை எழுதிக் கொடுத்துவிட்டதாகவும், அடுத்த வாரத்தில் வழக்கு நடக்கும் நீதி மன்றத்துக்கு வரவில்லை என்றால் அவர்களின் வீடு பறிமுதல் செய்யப் படும் என மிரட்டுகிறார்.

 ரீ அவளுடைய தந்தையைத் தேடிக் கண்டுபிடிப்பதாக உறுதி அளிக்கிறாள். ஏற்கனவே, வசதி இல்லாமல் அவர்களுடைய குதிரையை பக்கத்துக்கு வீட்டுக்கு விற்கும் அளவுக்கு வறுமை ரீயை வாட்டுகிறது. இந்நிலையில், தந்தை வராத பட்சத்தில் இருக்கும் ஒரே வீடும் பறிபோய் விடுமோ என்ற கவலையில் ரீ அவளுடைய ஊரில் இருக்கும் எல்லோரிடமும் உதவி கேட்கிறாள். யாரும் முன்வருவதோடு இல்லாமல், இதெல்லாம் ரீக்கு தேவை இல்லாத விஷயம் என்று சொல்லி வெறுப்பேற்றுகிறார்கள்.

ரீயின் தந்தையுடன் பிறந்த டியர் டிராப் (Tear Drop) என வினோதப் பெயர் கொண்ட அவளுடைய பெரியப்பன் கூட அவளுக்கு உதவ முன்வராத நிலையில், அந்த ஊரில் கிட்டத்தட்டஒரு தாதா மாதிரி இருக்கும் தம்ப் மில்டன் (Thump Milton) ரீ இவ்வாறு அவள் தந்தையைத் தேடி அலைவது பிடிக்காமல் அவனுடைய மனைவி மற்றும் இரு பெண்களைக் கொண்டு ரீயை காயப்படுத்தி துன்புறுத்துகிறான். அச்சமயம், அங்கு வரும் ரீயின் பெரியப்பன் டியர் டிராப் அவளைக் காப்பாற்றி அழைத்து செல்கிறான்.

வீட்டைக் காப்பாற்ற வேறு வழி தெரியாமல் ராணுவத்தில் சேர முயல்கிறாள் ரீ. ராணுவத்தில் சேர்ந்தால் $40000 கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செல்லும் அவளிடம், வேலைக்கு ஆள் எடுக்கும் ராணுவ அதிகாரி அந்தப் பணம் உடனே கிடைக்காது என்றும், மேலும் 18 வயதிற்கு முன் ராணுவத்தில் பெற்றோர் அனுமதி தேவை என்றும் சொல்லுவதால் திரும்பிவிடுகிறாள். அவளுடைய தம்பியை தத்து எடுத்துக் கொள்ள ஒத்துக்குக் கொள்ளும் அவளுடைய பக்கத்துக்கு வீட்டு பெண், ரீயின் தங்கையை (6 வயது) தத்து எடுத்துக் கொள்ள மறுக்கிறாள்.

 ரீ படும்பாட்டைக் கண்டு மனம் மாறும் அவளுடைய பெரியப்பன் டியர் டிராப், அவளுடைய முயற்சிக்கு உதவ முன்வருகிறான்.  ரீயின் தந்தை லோகல் தாதா தம்ப் மில்டன் செய்யும் சட்டத்துக்கு புறம்பான செயல்களை காவல்துறைக்கு காட்டிக் கொடுக்க முயன்றான் என்றும், இதனால் கோபமடையும் மில்டன் அவனைக் கொன்று இருக்கலாம் என்றும் சொல்கிறான். அவனைத் தேடும் வேலையை விட்டுவிடும்படி ரீயை வற்புறுத்துகிறான்.

 தொடர்ந்து முயன்றும் தன்னுடைய தந்தையைப் பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்காத நிலையில் காவல் அதிகாரியிடம் தன்னுடைய தந்தை இறந்து விட்டதாக ரீ கூறுகிறாள். அதற்கு ஏதாவது சாட்சி கொண்டுவந்தால் வழக்கை முடித்து வீட்டு அடமானப் பத்திரத்தை திருப்பிக் கொடுத்துவிடுவதாக அந்த அதிகாரி சொல்கிறார்.

இந்நிலையில், ரீயை அடித்துத் துன்புறுத்திய மில்டனின் மனைவி இன்னொரு பெண்ணுடன் ரீயின் வீட்டுக்கு வருகிறாள். துப்பாக்கியுடன் அவர்களை விரட்ட முயற்சிக்கும் ரீயிடம் அவளுடைய தந்தை இறந்ததற்கான ஆதாரத்தை தன்னால் தரமுடியும் என்று சொல்லி தன்னுடன் வருமாறு சொல்கிறாள். ரீயின் கண்களைக் கட்டி அவர்கள் இருவரும் காரில் அவளை அழைத்து செல்கிறார்கள்.

ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு ஏரிக்கு அழைத்து செல்லப்படும் ரீ, அந்த பெண்கள் சொன்னதன் பேரில் ஏரியில் தன் தந்தையின் உடலைத் தேடுகிறாள். சடலம் ஒன்று கையில் தட்டுப்பட மனம் உடைந்து அழுகிறாள். தந்தையின் மரணத்துக்கு சாட்சியாக அவருடைய வலது கையை (மணிக்கட்டுக்கு மேல்) அறுத்து எடுக்கிறாள். கூட வரும் மில்டனின் மனைவி ஒரு கை மட்டும் போதாது என்று இன்னொரு கையையும் அறுத்து எடுக்கிறாள். காவல் அதிகாரியை சந்தித்து தந்தையின் கைகளைக் கொடுக்கிறாள் ரீ. இது எப்படி அவளுக்கு கிடைத்தது என கேள்வி எழுப்புகிறார் அவர். யாரோ ஒரு மூட்டையில் வைத்து தன் வீட்டு வாசலில் வீசிவிட்டு சென்றதாக சொல்கிறாள் ரீ.

 படம் முடியும் போது, ரீ அவள் வீட்டு வாசலில் தன் தம்பி, தங்கையோடு அமர்ந்திருக்கிறாள். அடையாளம் தெரியாத யாரோ பணம் தந்ததாக சொல்லி அவளிடம் நிறைய பணம் தருகிறார் காவல் அதிகாரி. படம் ஆரம்பம் முதல் சீரியஸாக இருக்கும் ரீ முகத்தில் சிரிப்பை பார்க்க முடிகிறது.

இந்தப் படத்தில் யாரும் பெரிய நடிகர்கள் இல்லை. இந்தப் படத்திற்கு பிறகுதான் ரீயாக நடித்த Jennifer Lawrence க்கு X -Men : First Class படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் நினைத்தபடி உருவம் மாறும் மிஸ்டிக் (Mystique) ஆக நடித்திருக்கிறார் இவர்.

இது மற்ற ஹாலிவுட் படம் போல பளபள கார்களும், ஜொலிக்கும் கட்டிடங்களும், கண்ணைக் கவரும் இயற்கை காட்சிகளும் இந்தப் படத்தில் கிடையாது. இருந்தாலும், எந்தவிதமான செயற்கையான காட்சி அமைப்புகளோ, லாஜிக் அத்துமீறல்களோ இல்லாமல் மிக இயற்கையான காட்சிகளுடன், தேர்ந்த நடிப்புடன் மிக அருமையாக இருக்கிறது இந்தப் படம். 2010 ம் வந்த படம் இது. நிறைய விருதுகளை வாங்கி இருந்தாலும் இன்னும் இந்தியாவில் திரைக்கு வராத படம் இது. DVD கிடைக்கிறது. வாங்கிப் பாருங்கள்.

படத்தின் ட்ரைலர் இதோ:




Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...