அமெரிக்காவை சார்ந்த செய்தி நிறுவனமான தாம்சன் ராய்ட்டர்ஸ் (Thomson Reuters) சமீபத்தில் வெளிட்டுள்ள அறிக்கை ஒன்று உலகெங்கிலும் அதிர்ச்சி அலையைக் கிளப்பியுள்ளது.
அந்த அறிக்கையின்படி, உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான், இரண்டாவதாக காங்கோ, மூன்றாவதாக பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இருக்கின்றன.
இதில் என்ன அதிர்ச்சி? இந்த வரிசையில் நான்காவது இடத்தில் இருப்பது இந்தியா!!!
ஆமாம், இந்தியாவேதான். இது என்ன கூத்து என்று கேட்கலாம். அந்த அறிக்கையில் காரணங்கள் இருக்கின்றன.
எந்தெந்த விதத்தில் பாதுகாப்பின்மை இருக்கிறது என்று பார்த்தால், இந்த அறிக்கை அதை பல்வேறுவிதமான அளவீடு (parameters) மூலம் கணக்கிட்டுள்ளது.
- ஆப்கானிஸ்தான்: இங்கு வாழும் 11 பெண்களில் ஒருவர் மகப்பேறு காலத்தில் தகுந்த கவனிப்பு இல்லாமல் இறக்கிறார். கிட்டத்தட்ட 87 % பெண்கள் படிப்பில்லாமல் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 80 % பெண்கள் விருப்பமில்லாமல் திருமணத்திற்கு வற்புறுத்தப்படுகிறார்கள்.
- காங்கோ: இங்கு வாழும் பெண்களில் கிட்டத்தட்ட 4 . 5 லட்சம் பெண்கள் ஒவ்வொரு வருடமும் கற்பழிக்கப்படுகிறார்கள்-இது கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 1200 பெண்கள் என்ற கணக்கில். 90 % பெண்கள் வீடுகளில் (தந்தை, உறவினர் மற்றும் கணவர் மூலம்) கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.
- பாகிஸ்தான்: காலாச்சார சீரழிவு, சமுதாய மூட நம்பிக்கைகள், மத சம்பந்தமான கட்டுப்பாடுகள் என்பன போன்ற பல விஷயங்களில் பெண்கள் துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.காங்கோ ஓலவே இங்கும் கிட்டத்தட்ட 90 % பெண்கள் வீடுகளில் (தந்தை, உறவினர் மற்றும் கணவர் மூலம்) கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், பெண் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள்
- இந்தியா: 1 கோடிக்கும் மேல் பெண்கள் விபசாரத்தில் தள்ளப்படுகிறார்கள். பெண் சிசுக் கொலை, கருச்சிதைவு போன்ற காரணங்களால் கடந்த நூற்றாண்டில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இறந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டில் ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்கு முன் திருமணம் நடக்கிறது.
இந்தியாவில் பிறந்த ஒவ்வொரும் வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயமில்லை இது. உடனே விழித்துக்கொண்டு செயலில் இறங்கி நம் சகோதரிகளையும், தாய்களையும் காப்பாற்ற வேண்டும்.
படம் நன்றி: trust .org வலைத்தளம்
தகவல் நன்றி: ஹிந்து பிசினஸ்லைன் செய்தித்தாள்
Comments