கண்டேஜியன் (Contagion ) என்றால் தொற்றுநோய் (Contagious disease ) பரப்பக் கூடிய தொற்றுகிருமி.
ஆங்கிலத்தில் டிஸாஸ்டர் (disaster ) வகைப் படங்கள் நிறைய உண்டு. பேரழிவைக் காட்டக் கூடிய படங்களைத் தயாரிப்பது ஹாலிவுட் ஆட்களுக்கு லட்டு சாப்பிடுவது மாதிரி. கதை கொஞ்சம் சுமாராக இருந்தால் கூட CG/ அனிமேஷன் மூலம் மிரட்டி விடுவார்கள். சமீபத்தில் வந்து வெற்றி பெற்ற 2012 ஒரு சிறந்த உதாரணம்.
உலகையே கிடுகிடுக்க வைக்கும் பயங்கரமான நோய்களை வைத்து இதற்கு முன் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. கண்டேஜியன் படத்தின் சிறப்பம்சம் அதன் மிகச் சிறந்த நடிகர்கள் பட்டாளம்; Matt Damon, Lawrence Fishburne, Jude Law, Kate Winslet, Gwyneth Paltrow என்று அட்டகாசமான நட்சத்திர வரிசை, அதன் இயக்குனர் Steven Soderbergh (Oceans 11, 12 & 13, Erin Brokovich, Traffic, Che), அட்டகாசமான ஒளிப்பதிவு, மிரட்டும் இசை, மின்னல் வேகத்தில் நகரும் திரைக்கதை என்று நிறைய சொல்லலாம்.
படத்தில் Matt Damon மனைவியாக வரும் Gwyneth Paltrow ஹாங்காங் சென்று வருகிறார். சாதாரண தும்மல், இருமல் என ஆரம்பித்து வீட்டுக்கு வந்தவுடன் வலிப்பு வந்து விழுகிறார். மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலன் இன்றி இறக்கிறார். மனைவியை மருத்துவமனையில் இழந்த துக்கத்துடன் வீட்டுக்கு வந்தால், Matt Damon மகனும் காலி. மருத்துவர்கள் Matt Damon ஐ தனி சிகிச்சை (Isolation) பிரிவில் வைத்து கண்காணிக்கிறார்கள். அவருக்கு நோயின் அறிகுறிகள் (symptoms) எதுவும் இருப்பதில்லை.
அமெரிக்காவின் அட்லாண்டிஸில் உள்ள CDC (Centre for Disease Control) எனப்படும் அமெரிக்க அரசின் நோய் தடுப்பு மையத்தில் மருத்துவராக பணியாற்றும் Lawrence Fishburne உலகெங்கும் 32 உயிர்கள் அதற்குள் போய்விட்டன என்று தெரிந்து கொண்டு, இது ஒரு பயங்கரத்தின் ஆரம்பம் என உணர்கிறார். தன்னுடன் மருத்துவராக பணியாற்றும் Kate Winslet ஐ முதல் உயிர் (Gwyneth Paltrow) பிரிந்த மின்னியாபோலிஸ் நகருக்கு அனுப்புகிறார். ஒருவேளை இந்த தொற்றுநோய்க் கிருமி ஏதாவது தீவிரவாதிகளின் வேலையாக இருக்குமோ என மருத்துவர்கள் சந்தேகப்படுகின்றனர
கைவசம் இருக்கும் மருந்துகள் பயனளிக்காத நிலையில், நோயின் தீவிரத்தைத் தடுக்க விமான நிலையங்கள் மூடப்படுகின்றன. மக்களை பயப்பட வேண்டாம் என தொலைக் காட்சி மூலம் கேட்டுக் கொள்ளலாம் என Lawrence Fishburne நினைக்கும்போது, ஒரு அடாவடி வலைப்பதிவராக வரும் Jude Law, தன்னுடைய வலைப் பதிவில் அந்த தொற்றுநோய்க்கு மருந்து இருப்பதாக ஒரு புரளியை கிளப்புகிறார். அந்த மருந்தைப் பெற ஒரு பெரிய கூட்டமே முயல்கிறது. கட்டுக்கடங்காத கலவரம் வெடிக்கிறது. உலகெங்கும் தொற்று நோய் வெகுவேகமாகப் பரவுகிறது. ஊர்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. உலகெங்கும் கோடிக்கணக்கானவர்கள் அந்த பயங்கர தொற்றுநோய் மூலம் இறக்கிறார்கள்.

இதற்கிடையில், நோயின் ஆரம்பத்தைக் கண்டறிய முயலும் KatenWinslet அந்த நோய்க்கு பலி ஆகிறார். விஞ்ஞானிகளின் அயராத முயற்சியால் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கிறார்கள்.
நோயின் ஆரம்ப இடமான ஹாங்காங் செல்லும் மருத்துவர் (Marion Cotillard) கடத்தப்படுகிறார்...நிறையவே கதையைச் சொல்லிவிட்டேன். சுவாரசியம் குறையாமல் தட, தடவென செல்லும் இந்தப் படத்தை கண்டிப்பாக பாருங்கள். விஞ்ஞான, மருத்துவ விஷயங்கள், அரசு இயந்திரத்தின் கட்டுப்பாடுகள், அரசியல்வாதிகளின் மெத்தனம், என்று எல்லா விஷயங்களிலும் உண்மைக்கு மிக, மிக அருகிலேயே பயணக்கிறது படம்.
இது போன்ற லாஜிக் மீறாத ஒரு டிசாஸ்டர் படத்தைப் பார்த்து நிறைய நாளாகிவிட்டது. இந்தப் படத்தின் ட்ரைலர் பார்க்க கீழே இருக்கும் link ஐ சொடுக்கவும்.
இது போன்ற லாஜிக் மீறாத ஒரு டிசாஸ்டர் படத்தைப் பார்த்து நிறைய நாளாகிவிட்டது. இந்தப் படத்தின் ட்ரைலர் பார்க்க கீழே இருக்கும் link ஐ சொடுக்கவும்.
http://www.imdb.com/video/imdb/vi3924270105/ |
Comments