Skip to main content

பாயிண்ட் பிரேக் (Point Break) -"அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் அடிக்கும் வங்கிக் கொள்ளைகள்" - ஆங்கிலப் பட விமர்சனம்


 ஜானி (கினு ரீவ்ஸ்) ஒரு இளம் FBI அதிகாரி. அவன் வேலை பார்க்கும் லாஸ் ஏஞ்சலிஸ் (லாஸ் ஏஞ்சல்ஸ் என்பது தவறு) நகரில் அடிக்கடி பிரபல வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளின் உருவமுள்ள முகமூடிகளை அணிந்த ஒரு நால்வர் குழு இந்தக் கொள்ளைகளை மிக வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் நடத்திவிட்டு தப்பிச் செல்கிறது. ஜானியின் மேலதிகாரியான ஏஞ்சலோ பாப்பாஸ் (கேரி புசி) இந்தக் கூட்டத்தைப் பிடிக்க வழி தெரியாமல் தவிக்கிறார். பல நாட்களாக நடக்கும் இந்தக் கொள்ளைகளின் பல வீடியோக்களை ஆராய்ந்து அவர்கள் தேர்ந்த wind surfer களாக (தண்ணீருக்கு மேல் பலகையின் மூலம் சறுக்கி விளையாடுவது) இருக்க வாய்ப்பிருக்கிறது என்று ஜானியிடம் சொல்கிறார்.

எப்போதுமே இது போன்ற தீர விளையாட்டுகளில் (adventue sports) ஆர்வமுள்ள ஜானி இது போன்ற குழுக்களை ஆராய்ந்து ஒரு குறிப்பிட்ட குழுவில் சேர ஆர்வம் காட்டுகிறான். வங்கிகளைக் கொள்ளை அடிக்கும் நால்வர் குழுவின் எல்லாவிதமான குணாதிசயங்களும் உள்ள அதே போன்ற நான்கு பேர் கொண்ட ஒரு குழுவில் தன்னை ஒரு தேர்ந்த surfer ஆக்க அவர்கள் உதவ வேண்டுமென கேட்டுக் கொள்கிறான். அந்தக் குழுவின் தலைவனான போதி (பேட்ரிக் ஸ்வேஸி) இதற்கு ஒப்புக் கொள்கிறான். குழுவில் சேர்ந்து surfing கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் ஜானிக்கு அந்த விளையாட்டு மிகவும் பிடித்துப் போகிறது. போதியின் நண்பியான டைலருக்கும் (லோரி பெட்டி) ஜானிக்கும் காதல் உண்டாகிறது. போதி குழுவில் இருந்து கொண்டு அவ்வப்போது தன்னுடைய மேலதிகாரியான ஏஞ்சலோ பாப்பாஸுக்கு செய்தி அனுப்பிகிறான் ஜானி. லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இதுவரை கொள்ளை அடிக்கப் படாத வங்கிகளின் அருகே கண்காணிப்பு பணியில் பாப்பாஸ் மற்றும் ஜானி இருவரும் ஈடுபடுகின்றனர்.

விரைவிலேயே அவர்கள் இருவரும் ஒரு கொள்ளை நடப்பதைக் கண்கூடாகப் பார்த்துவிட்டு போதியின் குழுவை விரட்டுகின்றனர். போதி தப்பி ஓடும் போது அவனை விரட்டும் ஜானி காலில் அடிபட்டு கீழே விழுந்து விடுகிறான். கூட்டத்தில் ஒருவனை சுடும் வாய்ப்பு இருந்தும் சுடாமல் தயங்குகிறான். பாப்பாஸ் இதைக் கண்டு கொதித்துப் போகிறார். ஜானி வேண்டுமென்றே சுடாமல் இருந்ததாக பழி சொல்கிறார். ஜானியின் நண்பி டைலருக்கு அவன் FBI ஐச் சேர்ந்தவன் என்று தெரிய வருகிறது. போதியின் குழுவிலும் ஜானியின் சுயரூபம் தெரிந்து விட, போதி டைலரைக் கடத்துகிறான். அவளை விடுவிக்க வேண்டுமென்றால், ஜானி தங்களுடன் சேர்ந்து ஒரு வங்கிக் கொள்ளையில் ஈடுபட வேண்டுமென சொல்கிறான். ஜானி வேறு வழியில்லாமல் ஒப்புக் கொள்கிறான்.

ஜானியைத் தவிர மற்ற அனைவரும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளின் முகமூடிகளை மாட்டிக் கொண்டு கொள்ளையில் ஈடுபடும்போது  எதிர்பாராவிதமாக அந்த வங்கியில் இருக்கும் ஒரு காவல் அதிகாரி சுட ஆரம்பிக்க பெரிய களேபரம் நடக்கிறது. போதியின் நண்பன் க்ரோமெட் இதில் இறக்கிறான். மற்றவர்கள் தப்பிவிட, ஜானி மட்டும் போலீசிடம் மாட்டிக் கொள்கிறான். சரியான நேரத்தில் அங்கு வரும் பாப்பாஸ் ஜானியை விடுவித்து போதியின் கூட்டத்தை விரட்ட ஆரம்பிக்கிறார். ஒரு விமானம் மூலம் இதுவரை கொள்ளை அடித்த பணத்தை எடுத்துக் கொண்டு போதி தப்பிக்க முயலும்போது பாப்பாஸும், ஜானியும் வந்துவிட அவர்களுக்குள் சண்டை நடக்கிறது. இதில் பாப்பாஸ் இறந்துவிட, ஜானியை விமானத்தில் ஏற்றிக் கொண்டு பறக்கிறான் போதி.

நடுவானத்தில் ஜானியை விமானத்தில் விட்டுவிட்டு பாராச்சூட் மூலம் போதியும், நண்பர்களும் குதிக்க, ஆத்திரம் தலைக்கேறும் ஜானி பாராச்சூட் எதுவும் இல்லாமல் குதித்துவிடுகிறான். ஆகாயத்தில் அவர்கள் மிதப்பதையும், ஒருவரை ஒருவர் விரட்டுவதையும் 1991 ம் ஆண்டிலேயே மிகச் சிறப்பாக எது special effect எது நிஜம் எனக் கண்டுபிடிக்க முடியாத வகையில் படமாக்கியுள்ளனர். கடைசியில் ஜானி  போதியை எப்படி பிடிக்கிறான், பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் சுவாரசியமான க்ளைமாக்ஸ்.

1991 இல் இந்தப் படம் வந்தபோது கினு ரீவ்ஸ் பெரிய நடிகராகவில்லை. பேட்ரிக் ஸ்வேஸி மட்டுமே இந்தப் படத்தில் நடித்த போது பிரபலமானவர் (இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்). Wind Surfer களின் பரபரப்பான வாழ்க்கையையும், அதில் உள்ள த்ரில் அம்சங்களையும், அட்டகாசமான கடல் அலைகளையும் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருப்பார் படத்தின் ஒளிப்பதிவாளர் டொனால்ட் பீட்டர் மேன்.

அவதார்,டைட்டானிக் போன்ற பல உலக ஹிட்டுகளை இயக்கிய ஜேம்ஸ் கேமரோனின் (James Cameron) முன்னாள் மனைவி கேத்ரின் பிக்லோ (Kathryn Bigelow) இந்தப் படத்தின் இயக்குனர்.இவர்தான் சென்ற வருடத்தின் சிறந்த படம் என்று பல விருகளை அள்ளிய ஹர்ட் லாக்கரை (Hurt Locker) இயக்கியவர்.  மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்தில் நடித்ததன் விளைவாக இன்று வரை surfing மீது மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருக்கிறார் கினு ரீவ்ஸ்.

படத்தின் ட்ரைலர் இதோ:


Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்