பில் கேட்ஸ் தன்னுடைய நிறுவனத்தை நிர்வாகிக்க ஒரு புதிய தலைவரைத் தேர்வு செய்ய நினைக்கிறார். வேலை தேடி நேர்முகத் தேர்வுக்கு 5000 பேருக்கு மேல் வரவே, அவர்களை மிகப் பெரிய ஒரு அறையில் சந்திக்கிறார். அவர்களில் ஒருவர் நம் நண்பர் ராமசாமி.
பில் கேட்ஸ் : உங்கள் வருகைக்கு நன்றி.
ஜாவா தெரியாதவர்கள் போகலாம்.
2000 பேர் அறையைவிட்டு வெளியேறுகின்றனர்.
ராமசாமி தனக்குள் சொல்லிக் கொள்கிறார்:
'நமக்கு ஜாவா யார் என்று தெரியாது. இருந்தாலும் இருந்துதான் பார்ப்போமே!'
பில் கேட்ஸ் : யாருக்கெல்லாம் 100 பேருக்கு மேல் தலைமை வகித்த அனுபவமில்லையோ அவர்கள் செல்லலாம்.
2000 பேர் வெளியேறுகின்றனர்.
ராமசாமி தனக்குள் சொல்லிக் கொள்கிறார்
'நாம் யாருக்குமே /எங்குமே தலைமைப் பதவி தாங்கியது இல்லை. இருந்தாலும் என்னதான் ஆகிறது என்று பார்ப்போமே.
நமக்குத்தான் ரிஸ்க் எடுக்கறது ரஸ்க்
சாப்பிடற மாதிரி ஆச்சே !'
பில் கேட்ஸ் : யாருக்கெல்லாம் மானேஜ்மென்ட் படிப்பில் டிப்ளோமா இல்லையோ, அவர்கள் போகலாம்.
500 பேர் வெளியேறுகின்றனர்.
ராமசாமி தனக்குள் சொல்லிக் கொள்கிறார்,
'நாம்தான் 5 ம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லையே,
எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா ?'
கடைசியாக,
பில் கேட்ஸ்: யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் (Serbo - Croat) மொழி தெரியாதோ அவர்கள் கிளம்பலாம்.
498 பேர் வெளியேறுகின்றனர்.
ராமசாமி தனக்குள் சொல்லிக் கொள்கிறார்,
'அது என்ன செர்போ-க்ரோட் மொழி?? நமக்கு தமிழே ததிங்கிணத்தோம் போடும், பரவாயில்லை, சமாளிப்போம்'.
பில் கேட்ஸ்: ஓகே, நான் இதுவரை செர்போ-க்ரோட் மொழி கேட்டதில்லை. எங்கே நீங்கள் இருவரும் பேசிக்கொள்ளுங்கள் பார்க்கலாம்'.
நிதானமாக ராமசாமி அருகில் இருப்பவைப் பார்த்து தமிழில் கேட்கிறார் 'எந்த ஊரு ?'
அந்த ஆள் அதே தமிழில் சொல்கிறார் … 'மதுரை '
Comments