செய்தி: சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும்,"இ-சலான்' மற்றும்"போர்ட்டபிள் சோலார் சிக்னல்' திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.
சென்னை நகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரையும், திருட்டு வாகனங்களை எளிதில் கண்டுபிடிக்கும் விதமாகவும்,"இ-சலான்' எனும் மின்னணு ரசீது வழங்கும் திட்டத்தை, போக்குவரத்து போலீஸ் அறிமுகப்படுத்தியது. போக்குவரத்து சிக்னல் பழுதான இடங்கள், அதிக வாகன போக்குவரத்து இருந்தும் சிக்னல் பொருத்த முடியாத இடங்கள், வி.ஐ.பி.,க்கள் போக்குவரத்தின் போது பயன்படுத்தத்தக்க வகையில், எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட," போர்ட்டபிள் சோலார் சிக்னல்' அமைப்பும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இவை இரண்டையும், சென்னை அண்ணா சாலை போலீஸ் நிலைய வளாகத்தில் நடந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். நேற்று இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்:
எல்லாம் ஓகேதான், ஆனால் இதற்காக நேற்று அண்ணா சாலை, எக்மோர் என்று எல்லா பிரதான சாலைகளிலும் நேற்று சொல்ல முடியாத அளவு வாகன நெரிசல் ஏற்பட்டது. அண்ணா சாலையின் ஒரு பகுதியில் இந்த அம்மா வருகிறார் என்று போக்குவரத்தை நிறுத்தி காலையில் அலுவலகம் செல்லும் நேரத்தில் எல்லோரையும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தவிக்கவைத்து போலீசார் அராஜகம் செய்தனர். இதற்கு ஒரு முடிவு இல்லையா? இப்படி அரசு விழாக்களுக்கு அம்மாவை வரவழைத்து போக்குவரத்து நெரிசலை உண்டு செய்து பொதுமக்களை துன்புறுத்த வேண்டுமா?
Comments