இன்னுமொரு ரயில் விபத்து. இதுவரை 13 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். காரணம் எப்போதும் போல இன்னும் அறியப்படவில்லை. அரக்கோணம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. கடந்த முதல்வரோ, இன்றைய முதல்வரோ போட்டி போட்டுக் கொண்டு இலவச தொலைக் காட்சி பெட்டி, இலவச கிரைண்டர், மிக்சி என்று நம் வரிப் பணத்தை பாழடிப்பதை விட்டுவிட்டு இதுபோன்ற வசதிகளை பெருக்குவதற்கு ஏன் முயற்சிப்பதில்லை? இந்த ஞானோதயம் இவர்களுக்கு வர இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோமோ தெரியவில்லை.
நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம் தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
Comments