எதுவும் கிடைக்கும் நியு யார்க் நகரில் ஒரு புதிய கடை திறக்கிறார்கள், "கணவர்கள் விற்பனைக்கு," என்ற பெயரில்.
அந்தக் கடையில் மொத்தம் 6 மாடிகள். உள்ளே நுழையும் பெண்கள் ஒவ்வொரு மாடியாக கீழேயிருந்து மேலே சென்று அவர்களுக்கு பிடித்தமான கணவனைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரே ஒரு கண்டிஷன்: மேலே இருந்து கீழே வர முடியாது.
முதல் நாளே கடையில் கூட்டம் அம்முகிறது. ஒரு அழகான பெண் வரிசையில் நின்று களைத்து போய் கடைக்குள் நுழைகிறாள்:
முதல் மாடி: "இங்கு, கடவுள் நம்பிக்கை உள்ள, நல்ல பதவியில் இருக்கும் கணவர்கள் கிடைப்பார்கள்" என்று ஒரு போர்டு இருக்கிறது. அந்தப் பெண் அடுத்த மாடிக்கு அதிக எதிர்பார்ப்புடன் செல்கிறாள்.
இரண்டாம் மாடி: " இங்கு, கடவுள் நம்பிக்கை உள்ள, நல்ல பதவியில் இருக்கும, குழந்தைகளை விரும்பும் கணவர்கள் கிடைப்பார்கள்" என்று ஒரு போர்டு இருக்கிறது. அந்தப் பெண் அடுத்த மாடிக்கு அதிக எதிர்பார்ப்புடன் செல்கிறாள்.
மூன்றாம் மாடி: " இங்கு, கடவுள் நம்பிக்கை உள்ள, நல்ல பதவியில் இருக்கும, குழந்தைகளை விரும்பும், மிக அழகான கணவர்கள் கிடைப்பார்கள்" என்று ஒரு போர்டு இருக்கிறது. அந்தப் பெண் அடுத்த மாடிக்கு அதிக எதிர்பார்ப்புடன் செல்கிறாள்.
நான்காம் மாடி: " இங்கு, கடவுள் நம்பிக்கை உள்ள, நல்ல பதவியில் இருக்கும, குழந்தைகளை விரும்பும், மிக அழகான, வீட்டு வேலை செய்யத் தெரிந்த கணவர்கள் கிடைப்பார்கள்" என்று ஒரு போர்டு இருக்கிறது. அந்தப் பெண் அடுத்த மாடிக்கு மிக, மிக அதிக எதிர்பார்ப்புடன் செல்கிறாள்.
ஐந்தாம் மாடி: " இங்கு, கடவுள் நம்பிக்கை உள்ள, நல்ல பதவியில் இருக்கும, குழந்தைகளை விரும்பும், மிக அழகான, வீட்டு வேலையும், மிகத் தேர்ச்சியான முறையில் காதலிக்கவும் தெரிந்த கணவர்கள் கிடைப்பார்கள்" என்று ஒரு போர்டு இருக்கிறது. அந்தப் பெண் அடுத்த மாடிக்கு மிக, மிக அதிக எதிர்பார்ப்புடன் செல்கிறாள்.
ஆறாம் மாடி: "நீங்கள் இந்த மாடிக்கு வருகை தரும் 43,63,012 ஆவது நபர் ஆவீர்கள். எவ்வளவு இருந்தாலும் பெண்களை திருப்தி செய்யவே முடியாது என்பதற்கான அத்தாட்சியே இந்த மாடி" என்று ஒரு போர்டு இருக்கிறது. அதற்கு அருகில், "இந்த கடைக்கு வருகை தந்ததற்கு நன்றி. கவனமாக பார்த்து வெளியே செல்லவும்," என்று இன்னொரு போர்டு.
நன்றி: நண்பர் செழியன் அவர்களுக்கு
Comments