Skip to main content

Posts

Showing posts from 2009

"KING OF POP" மைக்கேல் ஜாக்சன் மரணம்

பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன் இன்று அதிகாலை காலமானார். திடீர் மாரடைப்பினால் மரணம் நேர்ந்ததாக தெரிகிறது. 50 வயதான ஜாக்சனுக்கு மூன்று குழந்தைகளும், இரண்டு முன்னாள் மனைவிகளும் உள்ளனர். இதில் இரண்டாவது மனைவியான லிசா மேரி உலகப் புகழ் எல்விஸ் பிரஸ்லியின் [Elvis Presley] மகளாவார். பதினோரு வயதில் இசை உலகில் நுழைந்த ஜாக்சன், அவருடைய பெற்றோரின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவதாகப் பிறந்தவர். இவருடைய அசுர சாதனையான "Thriller" ஆல்பம் 1982 இல் வெளியானபோது ஜாக்சனுக்கு வயது 22! இதுவரை இவருடைய பாடல்கள் கொண்ட பிரபல ஆல்பங்கள் 750 மில்லியனுக்கு மேல் விற்பனையாகி வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளன. 13 முறை Grammy அவார்டுகள் பெற்றுள்ள ஜாக்சனுக்கு கெட்ட நேரம் 2005 இல் ஆரம்பித்தது என்று சொல்ல வேண்டும். குழந்தைகளுடன் தகாத முறையில் பாலுறவு வைத்துக்கொள்ள முயற்சித்தார் என வந்த செய்தின் மூலம் இவருடைய புகழ் கிடுகிடுவெனச் சரிந்தது. பலமுறை plastic surgery செய்து கொண்டதால் இவருடைய முகம் மிக விகாரமாக மாறியது. சரியான முறையில் சொத்தை பராமரிக்கத் தவறியதால் ஏராளமான சட்டச் சிக்கலில் மாட்டிக்கொ...

இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்; இந்த ஆஸ்திரேலிய சம்பவத்தின் பின்னணி என்ன?

சமீப காலமாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பல இந்திய மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்து கொண்டிருப்பதின் பின்னணி என்ன என்பதைப் பற்றி செய்தித் தாள்களிலும், தொலைக் காட்சி சேனல்களிலும் தினசரி ஏதாவது பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன; மெல்போர்ன் பல்கலைக் கழகம் தனக்கு அளித்த கௌரவ டாக்டர் பட்டம் வேண்டாம் என சூப்பர் ஸ்டார் அமிதாப் மறுக்கிறார், மாணவர்கள் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்துகிறார்கள், ஒரு இடத்தில பழிக்கு பழி வாங்கும் வண்ணம் இந்திய மாணவர்கள் ஒரு ஆஸ்திரேலிய மாணவனைத் தாக்குகிறார்கள்...இது போல பல சம்பவங்கள். ஆஸ்திரேலியாவில் போய் படித்து ஒன்றும் ஆகப்போவதில்லை என பல பெற்றோர்கள் மாணவர்களின் நினைப்பில் மண் போடுகிறார்கள், கோலிவுட் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஆஸ்திரேலியா வேண்டாம் வேறு எங்காவது டூயட் வைத்துக் கொள்ளுங்கள் என திரை இயக்குனர்களை வேண்டிக்கொள்கிறார்கள், சுற்றுப்பயணம் போக ஆஸ்திரேலியாவை மனதில் வைத்திருந்த நிறையப்பேர் வேண்டாம், வேறு எங்காவது போகலாம் என விடுமுறையை ஒத்திபோடுகிறார்கள், இந்திய-ஆஸ்திரேலியா இருதரப்பு வர்த்தகம் [bilateral trade ties] பாதிக்...

Controversies Behind the deaths of Subash Chandra Bose & Hitler

பிரபாகரனைப் பற்றிய என்னுடைய முந்தய வலைப் பதிவை படித்த நண்பரொருவர், வேறு எங்கேனும் இதைப் போலவே முக்கிய தலைவரின் மரணத்தில் குழப்பம் வந்திருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிரண்டு இல்லை, ஏராளமான குழப்பங்கள் இருந்திருக்கின்றன; முக்கியமான ஒரு தலைவர், நம்முடைய சுபாஷ் சந்திர போஸ். இவருடைய மரணத்தில் ஏராளமான சந்தேகங்கள் இதுவரை தீர்க்கப் படாமலேயே இருக்கின்றன. இரண்டாவது உலகப் போரின் நடுவே, ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் அவர் இறந்து விட்டதாக செய்திகள் பரவலாக இருந்தாலும் இதுவரை பெரும்பாலான இந்தியர்கள் அதை நம்பவில்லை. அடுத்ததாக, ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டு இறந்தபோது இதேபோல பெரிய குழப்பம் இருந்தது. ஹிட்லர் இறந்ததாக சொல்லப்பட்ட பின் சில வருடங்கள் கழித்து ஒரு ஓவியம் ஏலத்துக்கு வந்தபோது பெரும் சர்ச்சை வெடித்தது; அந்த ஓவியம் ஒரு கரிக் கோடு ஓவியமாகும் [charcoal line drawing]. ஹிட்லர் அதைப் போல் ஓவியங்கள் சிலவற்றை பொழுதுபோக்காக வரைந்திருந்தார். கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் ஒரு ஓவியம் 1950 இல் ஏலத்துக்கு வந்த போது, பெரும்பாலான செய்தித் தாள்கள் இது ஹிட்லர் வரைந்த ஓவியம் என்றால் அவர் தற்கொலை செய...

Tamil Tigers confirm leader's death

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) has confirmed its leader, Velupillai Prabhakaran, has been killed. "We announce today, with inexpressible sadness and heavy hearts that our incomparable leader and supreme commander ... attained martyrdom fighting the military oppression," Selvarasa Pathmanathan, the LTTE's head of international relations, said in a statement on Sunday. The Tigers said Prabhakaran had been killed on Tuesday during fighting between the LTTE and the Sri Lankan military and declared a week of mourning. The military had previously announced Prabhakaran, 54, was shot on Monday while travelling in a small convoy of vehicles in a bid to escape the final battle between the two sides. 'Final request' The LTTE statement read: "For over three decades, our leader was the heart and soul and the symbol of hope, pride and determination for the whole nation of people of Tamil Eelam," "Since the failure of the peace process and the escalat...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...

தமிழில் விக்கிப் பீடியா!

தொடர்ந்து பல்வேறு ஆண்டுகளாக இண்டர்நெட்டில் மேய்ந்து வரும் எனக்கு இன்று இந்து நாளிதழில் வந்த ஒரு செய்தி ஆச்சரியமாக இருந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து தமிழில் விக்கிப் பீடியா செயல்பட்டு வருகிறது என்ற செய்திதான் அது. நம்மில் பலருக்கு விக்கிப் பீடியா பற்றி தெரிந்திருக்கக் கூடும். விக்கிப் பீடியா பல்வேறு மொழிகளில் இருக்கும் ஒரு இலவச என்சைக்ளோ பீடியா. இதில் யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். ஏற்கனவே பதிவு செய்துள்ள செய்திகளைத் திருத்தலாம் என ஏராளமான சுதந்திரம் உள்ள ஒரு நல்ல முயற்சி. இது 2001 இல ஜிம்மி வேல்ஸ் [Jimmy Wales] மற்றும் லேரி சாங்கர் [Larry Sanger]ஆகிய இருவரால் தொடங்கப் பட்டது. இன்று கிட்டத்தட்ட 260 மொழிகளில் உலகெங்கும் பல்வேறு மக்களால் உபயோகிக்கப் படுகிறது. இதன் தமிழ் பதிப்பு அவ்வளவாக பிரபலம் அடையவில்லை, இது தமிழில் இருப்பதே நிறைய பேருக்குத் தெரியவில்லை என ஆதங்கத்துடன் இந்து நாளிதழில் வந்த செய்தி குறிப்பிட்டிருந்தது. இதன் தமிழ் தளத்துக்கு [http://ta.wikipedia.org] சென்று பார்க்கலாம் என்று முயற்சித்தேன். அரைமணி நேரம் கூட என் ஆர்வம் நீடிக்கவில்லை; காரணம் அதன் தமிழாக்கம்! நடை முறையில்...

"குரங்கு" ஜாவேத் மியான்டடின் மகன் திருமணம்

1992 இல் நடந்த Benson & Hedges Cup இறுதிப் போட்டியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. இந்திய விக்கெட் கீப்பர் கிரண் மொரே ஏகப்பட்ட அப்பீல் கேட்டு பாகிஸ்தானிய அணியை வெறுப்பேற்றினார். இதை நக்கல் செய்யும் பொருட்டு அப்போது பேட்டிங் செய்த ஜாவேத் மியாண்டட் குரங்கு போல குதித்து காண்பித்தது அப்போதைய ஹை-லைட். அந்த போட்டியில் நம் அணி அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக சச்சின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த குரங்கு ஜாவேத் மியான்டடின் மகன், அகில உலக தீவிரவாதியான தாவுத் இப்ராகிமின் மகளைத் திருமணம் செய்தபோது [2005] எடுத்த படம் இது. ஒரு இன்டர்நேஷனல் கொள்ளைக்காரனின் மகள் இவ்வளவு தங்கம் அணிவதில் என்ன அதிசயம? [படம் அனுப்பிய நண்பர் நாகுவுக்கு நன்றி]

ஸ்விஸ் நாட்டிலுள்ள இந்திய கறுப்புப் பணம்!

ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போது அரசியல் கட்சிகள் புதிது புதிதாக வியூகங்கள் அமைத்து எதிர் கட்சியினரை தாக்குவார்கள். இந்த முறை பாஜக [BJP] எடுத்துக் கொண்டுள்ள ஆயுதம் ஸ்விஸ் நாட்டு வங்கிகளில் உள்ள கோடிக்கணக்கான கறுப்புப் பணம்! இந்தியாவைச் சேர்ந்தவர்களால் மட்டும் தற்போது 25 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 70 கோடி வரை சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி, பா.ஜ.,வை குறை கூறியே பிரசாரம் செய்வதென முடிவு செய்து விட்டது. பா.ஜ.,வை பொறுத்தவரை, ராமர் கோவில் போன்ற பிரசாரங்கள் எல்லாம் இனி அவ்வளவு எடுபடாது என தெரிந்து விட்டது. இதனால் தான் அக்கட்சித் தலைவர் அத்வானி, சுவிஸ் வங்கி விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளார். "பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் இருந்து சுவிஸ் வங்கியில் டிபாசிட் செய்யப்பட்ட பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என அத்வானி எழுப்பிய கறுப்பு பண விவகாரம், தற்போது அரசியல் கட்சிகளின் பிரசாரங்களில் எதிரொலிக்கத் துவங்கி விட்டன. இதனால், கறுப்பு பண சுரங்கமாகக் கருதப்படும் ச...

பைரஸி பூதம்!

சமீபத்தில் பார்த்த அயன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். மலேசியாவிலிருந்து சூர்யா ஒரு திருட்டு மாஸ்டர் DVD யுடன் வருவார். அவரை கூட்டிப் போகவரும் பிரபு சொல்லுவார், " "நாளைக்குத் தான் இந்த படம் ரிலீஸ், அதுக்குள்ள எவ்வளவு பிரிண்ட் போடமுடியுமோ அவ்வளவு போட்டு வித்துடனும்." அது பாடலாக இருந்தாலும் சரி, அல்லது திரைப்படமாக இருந்தாலும் சரி சுடச் சுட உடனே பைரஸியாக வெளிவந்துவிடுகின்றன. பைரஸி dvd வாங்கக்கூடாது என்று என் நண்பி சுதாவைப் போல வெகு சிலரே பிடிவாதமாக இருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை இது டெக்னாலஜியின் சாபக்கேடு. என்னதான் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு திரைத் துறையினர் கவனமாக இருந்தாலும் எல்லா மொழிப் படங்களுமே உடனடியாக சந்தைக்கு வந்து விடுகின்றன. ரூ.10 முதல் 30 கிடைக்கும் இந்த [பெரும்பாலும்] பாடாவதியான ப்ரிண்டைப் பார்த்துவிட்டு படம் சூப்பர் என்றோ சொதப்பல் என்றோ உடனடியாக அந்த படத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது. இதுவே அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோடீஸ்வரனாகவோ அல்லது பீச்சில் கொண்டக்கடலை சுண்டல் விற்பவராகவோ ஆகிவிட வழிவகுக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் தமிழ் படங்கள...

ஒரே ஒரு சிகரெட்

சிகரெட்டினால் என்னென்ன தீமைகள் விளையலாம் என்று பட்டியலிட்டாலும் படித்தவர்களே அதையெல்லாம் லட்சியம் செய்யாதபோது, மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது? என்னதான் பொது இடங்களில் புகைப்பது குற்றம் என்று அரசு அறிவித்தாலும், சிகரெட் விற்பனை ஒன்றும் குறைந்தமாதிரி எனக்குத் தெரியவில்லை. சிகரெட் சம்பந்தமான சில சுவையான [?] தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைகிறேன். முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரே ஒரு சிகரெட்டில் 4400 வெவ்வேறு ரசாயனப் பொருட்கள் [chemicals] இருக்கின்றன; இவற்றில் கிட்டத்தட்ட 599 addictive வகையைச் சார்ந்தவை [அதாவது, மறுபடியும், மறுபடியும் உங்களைப் புகைக்க வைக்கக் கூடிய போதைப் பொருட்கள்], இந்த 599 இல் 43 பொருட்கள் புற்றுநோய் [cancer] உண்டாக காரணமாக இருப்பவை. இவற்றில் சில மிக, மிக மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடியவை; அவை, Carbon Monoxide, Nitrogen Oxide, மற்றும் Hydrogen Cyanide ஆகியவை. இவை எல்லாவற்றையும் மீறிய பிரதான வில்லன், நிகோட்டின் [Nicotine] . நிகோட்டின் போதை உண்டாகக் காரணம் அது உடனடியாக நம் உடம்பில் உள்ள epinephrine என்ற ஹார்மோனைச் அதிக அளவில் சுரக்கச் செய்து...

அரசியல்வாதிகளின் மூடநம்பிக்கைகளும், அதில் புரளும் கோடிகளும்!

தேர்தல் வியாபாரத்தில் குதித்துள்ள நம் வேட்பாளர்கள் ஜோசியத்துக்கும், ஹோமங்கள் பண்ணுவதற்கும் வாரியிறைத்து வருகின்றனர். தேர்தல் வந்து விட்டாலே, லட்சக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்களுக்கு கூடுதல் பணம், பொருளுடன் மூன்று மாதம் வேலை கிடைத்து விடுகிறது. "ஓட்டு போடுங்கம்மா' என்று கூவுவதற்கு ஏகப்பட்ட ஏழைப் பெண்களுக்கு தினமும் குறைந்தபட்சம் 500 ரூபாய் வரை கிடைக்கிறது; கூடவே, பிரியாணி பொட்டலங்களும். கடவுளுக்கு் மனு போடுகின்றனர்; கடவுளை திருப்திப்படுத்த ஹோமங்களை செய்கின்றனர். தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய சகஸ்ர ஹோமம், அதிருத்ர ஹோமம், தங்கள் கட்டுப்பாட்டில் அடுத்தவர்களை வைத்துக்கொள்ள "வாஷி கரண' ஹோமம், அடுத்தவர் கண்டிப்பாக தோல்வி அடைய "விபரீத பிரத்யங்கர' ஹோமம் என்று விசேஷ ஹோமங்கள் செய்யப்படுகின்றன. இதற்காக, வேத பண்டிதர்கள் சிலர், "போர்டு' மாட்டாத குறையாக சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், டில்லி, மும்பை, கோல்கட்டா போன்ற நகரங்களில் உள்ளனர். பெரும்பாலும், சென்னை, பெங்களூரு நகரங்களில் இருந்துதான் இப்படிப்பட்ட வேத மந்திர குழுக்களை தேசிய அரசியல் கட்சிகள், ஹோமங்களை செய்ய ...

குரங்கு கையில் பூமாலை

நன்றி: நண்பர் நாகுவுக்கு

கொள்ளையர்கள், கொலைகாரர்கள், கோடீஸ்வரர்கள்...

லோக்சபாவுக்கு, வரும் 16ம் தேதி முதல் கட்டமாக நடக்கும் தேர்தலில் 1,425 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில், 193 பேர் கோடீஸ்வரர்கள்; 222 பேர் கிரிமினல்கள். அத்துடன் முழுமையான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களும் கணிசமான அளவில் இடம் பெற்றுள்ளனர். லோக்சபா தேர்தல் ஐந்து கட்டமாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் வரும் 16ம் தேதி நடக்கிறது. 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 124 தொகுதிகளில் நடக்கும் இந்தத் தேர்தலில் மொத்தம் 1,425 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 222 பேர் கிரிமினல்கள். அதில், 51 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மொத்த வேட்பாளர்களில் 16 சதவீதம் பேர் கிரிமினல்களே. போட்டியிடும் 222 கிரிமினல்களில், 24 பேர் காங்கிரஸ் கட்சியையும், 23 பேர் பா.ஜ., 17 பேர் பகுஜன் சமாஜ், 10 பேர் சமாஜ்வாடி, எட்டுப் பேர் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், ஏழு பேர் ஐக்கிய ஜனதா தளம், ஐந்து பேர் தெலுங்கு தேசம், ஏழு பேர் ராஷ்டிரிய ஜனதா தளம், இரண்டு பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இரண்டு பேர் தேசியவாத காங்கிரஸ், ஆறு பேர் சிரஞ்சீவி தலைமையிலான பிரஜா ராஜ்யம் கட்சியையும் சேர்ந்தவர்கள். ம...

கடல் நடுவே அமர்க்களம்!

என் மகளின் பள்ளி விடுமுறை ஆரம்பித்து விட்டதால் வெளியே செல்ல வேண்டுமென்ற அன்புத் தொல்லையும் ஆரம்பித்துவிட்டது. என்ன வேலை தலைக்குமேல் இருந்தாலும் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதை என்றுமே நான் குறைத்துக் கொண்டது இல்லை. ஆனால், சொந்த பிஸினசில் பணம் கொட்டவில்லை என்றாலும் தலை தின்கும் பிரச்சினைகள் ஏராளம் என்பதால் சமீபத்தில் அவ்வளவாக வெளியில் செல்ல முடியவில்லை. பெரிய relief ஆக நேற்றைய தினம் அமைந்தது. சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கொட்டிவாக்கம் அருகே உள்ளது ஒரு சிறிய மீனவர் குடியிருப்பு. அங்குள்ள மீனவ நண்பர்கள் [பெரும்பாலும் இளைஞர்கள்] மிகத் துடிப்புடன், உற்சாகமாக life-jacket எல்லாம் தயார் செய்து கொண்டு, படித்த நான்கு இளைஞர்களின் துணையுடன் அங்கு வரும் மக்களை [8 பேர் ஒரு கட்டு மரத்தில்] நடுக்கடலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். கடற்கரையில் இருந்து கிட்டத் தட்ட இரண்டு கிலோமீட்டருக்கு மேல் நடுக்கடலுக்கு சென்றவுடன் நம்மிடம் ஒரு கயிறு ஒன்றைக் கொடுத்து, அதைப் பிடித்துக் கொண்டு கடலில் குதிக்கச் சொல்கிறார்கள். நீச்சலே தெரியாத என்னைப் போன்ற வீரர்கள் கூட தைரியமாக இந்த விளையாட்டில் ஈடுபட முடியும்....

'ஆஸ்கர் புயல்' ரஹ்மான்

இரு ஆஸ்கர்விருதுகளை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், தமிழர்களான நம் அனைவருக்கும் மிகப்பெரிய கவுரவத்தை தேடித்தந்திருக்கிறார். இதற்கு முன் எந்தவொரு இந்திய இசை அமைப்பாளரும் சாதிக்காததை சாதித்து மிக உயர்ந்த இடத்தை ரஹ்மான் எட்டிவிட்டார். அமெரிக்க மண்ணில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி, இந்தியர்களாலும் சர்வதேசத் தரத்துக்கு இணையானதிறமையை வெளிப்படுத்த முடியும் என்று நிரூபித்துவிட்டார். இந்திய சாதனையாளர்களைக் கொண்ட வெளிநாட்டுப் படங்களும், இந்தியப்படங்களும் இனி ஆஸ்கரில் போட்டி போட்டு முந்தி செல்வதற்கான பாதையை ரஹ்மான் வகுத்துவிட்டார். இடைவிடாத முயற்சி, இரவு பகல் பாராத கடின உழைப்பின் மூலம் இச்சாதனையை அவர் புரிந்திருக்கிறார். {News capsule courtesy: Dinamalar.com)

நகைச்சுவை மன்னன் நாகேஷ்

தமிழ் திரையுலகம் பல நகைச்சுவை நடிகர்களை தந்திருக்கிறது. ஆனால் இன்று நாம் யோசித்தால் நான்கு அல்லது ஐந்து பேருக்கு மேல் நம் நினைவில் நிறைய நடிகர்கள் நிற்கவில்லை. சந்திரபாபு : மறக்கமுடியாத ஒரு நடிகர். இவர் படங்களில் நகைச்சுவைக்கு மேல் வெஸ்டர்ன் டான்ஸ் மற்றும் மெட்ராஸ் தமிழ் [பெரும்பாலான படங்கள்] மேலோங்கி நிற்கும். பாலய்யா : இவருடைய நகைச்சுவை பெரும்பாலும் ஒரு வில்லத்தனம் கலந்தே இருக்கும். ஆனாலும் ரசிக்க முடிந்த காரணம் அவருடைய அமர்க்களமான "பாடி லாங்க்வேஜ்." தங்கவேலு : மிகப் பிரமாதமான டயலாக் டெலிவரி இவர் பலம். கல்யாணப் பரிசு, அறிவாளி, தேன்நிலவு ஆகிய படங்களில் இவருடைய காமெடியை ரசிக்காமல் எப்படி இருக்க முடியும்? சோ : நகைச்சுவை கலந்த சடைர் வகை காமெடி இவருடையது. நக்கல், நையாண்டி இல்லாமல் இவரால் காமெடி செய்ய முடியாது. இவரும், நாகேஷும் சேர்ந்து கலக்கிய நினைவில் நின்றவள் மற்றும் பல படங்களை அடிக்கடி பல சானல்களில் ரசிக்க முடிகிறது. கலைவாணர் என் எஸ் கே [என் எஸ் கிருஷ்ணன்] பற்றி ஏன் எழுதவில்லை என்று கேட்காதீர்கள். இதுவரை அவருடைய படம் எதுவும் நான் பார்த்ததில்லை. இவர்களுக்கெல்லாம் மேலாக இன்னும...

அருவருப்பின் உச்சக்கட்டம்!

இப்படி ஒரு பெண் நகை அணிந்தால் இந்தியாவில் ஏன் பணவீக்கம் வராது? என்ன ஒரு அருவருக்கத்தக்க ஆடம்பரம் இது? இவைகளை எல்லாம் வருமானவரி துறை என்ன செய்யப்போகிறது? படம் அனுப்பிய நண்பர் நாகுவுக்கு நன்றி

என்னதான் ஆயிற்று நம் இந்தியாவுக்கு?

போன வருட முடிவில் மும்பையில் நடந்த தீவிரவாதம், கேவலமான அரசியலால் நாம் தொடர்ந்து படும் அவதி, கிடு கிடுவென அதல பாதாளத்திற்கு போய் விட்ட நம் ஷேர் மார்கெட் போன்ற இன்னும் பல தலைவலிகளுக்கு நடுவே நமக்கு இதமான விதத்தில் இந்த புத்தாண்டு பிறந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. கடந்த வருட முடிவில் வெற்றியின் சிகரத்தை விஸ்வநாத் ஆனந்த் தொட்ட பிறகு, விளையாட்டுத் துறை மற்றும் பல்வேறு துறைகளில் நம் இந்தியர்களின் சாதனை தொடர்கிறது. ஸ்லம்டாக் மிலினர் [என்னவொரு அருமையான படம்!!] மூலம் தொடரும் ஏ.ஆர். ரஹ்மானின் உலக சாதனைகள், ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள், சர்வதேச கிரிக்கெட்டில் தொடரும் நம் ஆதிக்கம், ஆஸ்திரேலிய ஓபனில் [மிக்சட் டபல்ஸ்] வெற்றி [வாழ்க மகேஷ் மற்றும் சான்யா], சமீபத்து இரண்டு மேட்ச்களிலும் ஸ்ரீலங்காவை மிதி, மிதி என்று மிதித்த நம் தோனியின் அதிரடிப்படை [ஏன் இந்த சொதப்பல், சச்சின்?], ஆஸ்திரேலிய ஓபன் ஜூனியர் பட்டம் வென்ற யூகி பாம்ப்ரி, சண்டிகரில் நடக்கும் பஞ்சாப் கோல்ட் ஓபனில் முதல் மாட்சிலேயே நியுசிலாந்து அணியை வென்ற நமது ஹாக்கி அணி...கலக்குங்கப்பா, கலக்குங்க. இந்த கலக்கல் தொடரட...

வீடு வாங்கினால் மெர்சிடிஸ் பென்ஸ் இலவசம் !!

கடந்த 2008 ஆண்டு, இது வரை பகல் கொள்ளை அடித்து வந்த ரியல் எஸ்டேட் பிசினஸுக்கு ஒரு பெரிய அடியாக இருந்தது. 300-400% வரை லாபம் பார்த்து வந்த பல பெரிய புள்ளிகள் வியாபாரம் படுத்து விட்டதால் நிலை தடுமாறினர். லட்ச லட்சமாக கொட்டி வாங்கிய நிறைய இளித்த வாயர்கள் சமீபத்தில் பெய்த பெரும் மழையில், நிறைய இடங்களில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து ஏராளமான இன்னல்களுக்கு ஆளானார்கள். இந்த மந்த நிலையிலிருந்து வெளிவர ரியல் எஸ்டேட் முதலாளிகள் புதிது புதிதாக பரிசுத் திட்டங்களை அறிவித்து மக்களை மீண்டும் கவர பிரம்ம பிரயத்தனம் செய்கிறார்கள். நேற்று இரவு NDTV பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு விளம்பரம்; பெங்களூரில் ரூ. 69 லட்சத்துக்கு ஒரு வில்லா வாங்கினால் ஒரு புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் இலவசம். இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த வில்லா நிச்சயம் தும்கூரிலோ அல்லது சிக்பெல்லாபூரிலோ இருக்கும். ஏதாவது ஒரு காய்ந்த ஏரியை பிளாட் போட்டு விற்பனை செய்து அதில் வில்லாக்கள் கட்டப்பட்டிருக்கும். அடுத்த மழையின் போது வெள்ளம் உள்ளே புகுந்து, பென்ஸ் காரை படகாக மாற்றி உபயோகிக்க வேண்டியிருக்கும்; பென்ஸ் காரின் விலையைய...

2009 இல் அடியெடுத்து வைக்கும் நம் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தங்கு தடையில்லாத மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், வற்றாத வளமும் உள்ள நாடாக இந்தியா இருக்க எல்லாம் வல்ல இறைவன் (ராமனா, ஏசுவா, அல்லாவா என்பது முக்கியமல்ல) அருள் புரியட்டும்.