Skip to main content

வீடு வாங்கினால் மெர்சிடிஸ் பென்ஸ் இலவசம் !!



கடந்த 2008 ஆண்டு, இது வரை பகல் கொள்ளை அடித்து வந்த ரியல் எஸ்டேட் பிசினஸுக்கு ஒரு பெரிய அடியாக இருந்தது. 300-400% வரை லாபம் பார்த்து வந்த பல பெரிய புள்ளிகள் வியாபாரம் படுத்து விட்டதால் நிலை தடுமாறினர். லட்ச லட்சமாக கொட்டி வாங்கிய நிறைய இளித்த வாயர்கள் சமீபத்தில் பெய்த பெரும் மழையில், நிறைய இடங்களில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து ஏராளமான இன்னல்களுக்கு ஆளானார்கள்.

இந்த மந்த நிலையிலிருந்து வெளிவர ரியல் எஸ்டேட் முதலாளிகள் புதிது புதிதாக பரிசுத் திட்டங்களை அறிவித்து மக்களை மீண்டும் கவர பிரம்ம பிரயத்தனம் செய்கிறார்கள்.

நேற்று இரவு NDTV பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு விளம்பரம்; பெங்களூரில் ரூ. 69 லட்சத்துக்கு ஒரு வில்லா வாங்கினால் ஒரு புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் இலவசம். இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த வில்லா நிச்சயம் தும்கூரிலோ அல்லது சிக்பெல்லாபூரிலோ இருக்கும். ஏதாவது ஒரு காய்ந்த ஏரியை பிளாட் போட்டு விற்பனை செய்து அதில் வில்லாக்கள் கட்டப்பட்டிருக்கும். அடுத்த மழையின் போது வெள்ளம் உள்ளே புகுந்து, பென்ஸ் காரை படகாக மாற்றி உபயோகிக்க வேண்டியிருக்கும்; பென்ஸ் காரின் விலையையும் சேர்த்து, வில்லாவின் மதிப்பு ரூ. 40 லட்சத்துக்கு மேல் இருக்காது;

இதே மந்த கதியில் நம் பொருளாதாரம் இருந்தால் இன்னும் கொஞ்ச நாட்களில் தெருத் தெருவாக "வீடு வாங்கலையோ சாமி, வீடு, வில்லா வாங்கலையோ, வில்லா" என்று கூவி வியாபராம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அப்போதும் ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் அல்லது ஒரு BMW நிச்சயம் இலவசமாகக் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...