போன வருட முடிவில் மும்பையில் நடந்த தீவிரவாதம், கேவலமான அரசியலால் நாம் தொடர்ந்து படும் அவதி, கிடு கிடுவென அதல பாதாளத்திற்கு போய் விட்ட நம் ஷேர் மார்கெட் போன்ற இன்னும் பல தலைவலிகளுக்கு நடுவே நமக்கு இதமான விதத்தில் இந்த புத்தாண்டு பிறந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
கடந்த வருட முடிவில் வெற்றியின் சிகரத்தை விஸ்வநாத் ஆனந்த் தொட்ட பிறகு, விளையாட்டுத் துறை மற்றும் பல்வேறு துறைகளில் நம் இந்தியர்களின் சாதனை தொடர்கிறது.
ஸ்லம்டாக் மிலினர் [என்னவொரு அருமையான படம்!!] மூலம் தொடரும் ஏ.ஆர். ரஹ்மானின் உலக சாதனைகள், ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள், சர்வதேச கிரிக்கெட்டில் தொடரும் நம் ஆதிக்கம், ஆஸ்திரேலிய ஓபனில் [மிக்சட் டபல்ஸ்] வெற்றி [வாழ்க மகேஷ் மற்றும் சான்யா], சமீபத்து இரண்டு மேட்ச்களிலும் ஸ்ரீலங்காவை மிதி, மிதி என்று மிதித்த நம் தோனியின் அதிரடிப்படை [ஏன் இந்த சொதப்பல், சச்சின்?], ஆஸ்திரேலிய ஓபன் ஜூனியர் பட்டம் வென்ற யூகி பாம்ப்ரி, சண்டிகரில் நடக்கும் பஞ்சாப் கோல்ட் ஓபனில் முதல் மாட்சிலேயே நியுசிலாந்து அணியை வென்ற நமது ஹாக்கி அணி...கலக்குங்கப்பா, கலக்குங்க. இந்த கலக்கல் தொடரட்டும்.
Comments