Skip to main content

Posts

Showing posts from 2007

மறக்க முடியாத சந்திப்பு

என்னுடைய வேண்டுகோளை ஏற்று குடும்பத்துடன் இன்று (30/12/07) Hotel Breeze க்கு வருகை தந்த நம் "ரம்யா" நண்பர்கள் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றி. ஷங்கர் வர முடியாத காரணத்தால் என் சிங்கப்பூர் பயணத்தின் போது ரவி மற்றும் ஷங்கர் குடும்பத்துடன் ஒரு மாலைப் பொழுது "ராஜ்" என்ற பெங்காலி ரெஸ்டாரன்ட்டில் 24 Dec அன்று நன்றாக கழிந்தது. பிறகு இன்று Breeze Hotel களைகட்டியது. குமார், செழியன், பாண்டியன் மற்றும் முருகன் தவிர்க்க முடியாத காரணங்களால் வரமுடியாமல் போனது வருத்தம் என்றாலும், மற்ற அனைவரும் வந்து சேர்ந்தது ஒரு மிக மகிழ்ச்சியான விஷயம். நம்முடைய மனைவியர் நிறைய பேர் ஒருவருடன் ஒருவர் அறிமுகமே இல்லாமல் இருந்தாலும் எந்தவித பந்தாவும் இல்லாமல் உடனே பழக ஆரம்பித்தது மிகவும் ஒரு நல்ல விஷயம். குழந்தைகளும் அப்படியே. ஸ்ரீதர் நேற்று என்னுடன் அலைபேசி மூலம் குறுஞ்செய்தி (SMS) அனுப்பி மும்பையில் இருப்பதாகவும் முடிந்தால் கலந்து கொள்வதாக சொல்லி இருந்ததால் என்னுடைய எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது. பிறகு ஒரு sweet surprise ஆக அவன் குடும்பத்துடன் கலந்து கொண்டான். குஞ்சிதபாதம், Berger ரவி,...

Berger ரவியும், பிள்ளையாரும்

என்னுடைய பெசன்ட் நகர் office building owner சமீபத்தில் தொலை பேசி, "நண்பரே, என் வீட்டில் ஒரு பஜன் ஒன்றுக்கு யாராவது நல்ல பிரசங்கி (பேச்சாளர்) ஒருவரை ஏற்பாடு செய்ய முடியுமா, அவர் ஒரு பக்திமயமான topic பற்றி ஒரு கால் மணி நேரம் பேச வேண்டும் " என்றார். நான், "ஐயா, நான் event manager தானே தவிர பஜன் manager அல்ல," என்று மறுத்து விட்டேன். பிறகு தீடீரென நம் ரவி ஞாபகம் வந்ததது. உடனே அவனுக்கு விஷயத்தைச் சொன்னேன். ஆரம்பத்தில் மறுத்தவன் , பிறகு சம்மதித்தான். நேற்று (15/12) மாலை, என் office building owner வீட்டில் ஜகஜ்ஜோதியாக "தடைகளை அகற்றும் பிள்ளையார் (Vinayaka-Vigna Vinasaka) " என்ற பெயரில் ஒரு அட்டகாசமான உரை நிகழ்த்தி அசத்திவிட்டான். ரவியின் பக்திமயமான பேச்சை பலபேர் புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். ஒரு விஷயம்: அங்கு வந்த கூட்டம் ஒன்றும் பெருமாள் கோவிலில் புளியோதரை வாங்கி தின்னும் கூட்டம் இல்லை. எல்லோருமே மிக, மிக நல்ல பதவிகளில் இருக்கும் IAS, IFS, Consulate, Foreign Trade ஆசாமிகள். ரவிக்கு என் பிரத்யேக நன்றி (special thanks). காலப் போக்கில் மாற்றங்...

2008 ம் ஆண்டை குடும்பத்துடன் வரவேற்போம்

புது வருடம் பிறக்கும் முன் எல்லோரும் குடும்பத்துடன் சந்திக்கும் ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்தேற எல்லாம் வல்ல வல்லக்கோட்டை முருகனைப் பிரார்த்திக்கிறேன். இது என் ஆறு வருட கனவு. 1998 இல் சென்னை மாற்றலாகி வந்தபின் நான் அடிக்கடி சந்தித்த மூன்று பேர் சாயீ, Berger ரவி, மற்றும், நல்லவரெல்லாம் சீக்கிரமே இறைவனிடம் போய்விடுவார்கள் என்ற கூற்றை உண்மையாக்கிய, முகுந்தும்தான். பிறகு மெதுவாக ஷங்கர், குஞ்சிலி, முருகன் என்று மறுபடியும் வட்டம் பெரிதானாலும் அடிக்கடி சந்திப்பது என்பது மிக, மிக அரிதாகவே நடந்தது. பிறகு மெதுவாக ஷங்கர் பெங்களூர் சென்றதும், சேகர் மற்றும் குமாரை எதேச்சையாக ரவி ஒரு நாள் சந்தித்ததும், ராஜ்குமாருடன் மறுபடி தொலை தொடர்பு ஏற்பட்டதும், செழியனை அவன் அலுவகத்தில் சந்தித்ததும்(நீ வயசான மாதிரி ஆயிட்ட, ஆனா திடீர்னு எப்படி கடலூர்ல இருந்ததைவிட tall ஆயிட்ட? போன்ற செழியனின் கேள்விகளுக்கு என்னால் அப்போது பதில் சொல்ல முடியவில்லை), கோபாலபுரத்தில் ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறிய போது, அருகில் சென்ற காரில் இருந்து சாம்பா திடீரென வெளிப்பட்டது ஒரு ஆச்சர்யமான சம்பவம் என்றால், அவன் சொல்லாமல் கொள்ளாமல் டெல்லி...

ஐஸ்வர்யராயும் அதகளமும்

சமீபத்தில் சாயீ ரொம்பவும் புலம்பி தனி மெயில் ஐடி க்ரியேட் பண்ணி அனுப்பியதன் பின்னணியில் நான் இருப்பதால் இந்த special blog. நாமெல்லாம் சில நாட்களுக்கு முன் சந்தித்துக்கொண்டபோது நம் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க நான் ஐஸ்வர்யராயின் பிறந்த நாள் படத்தை அனுப்பினேன். நான் அதற்குமுன் பலமுறை சொல்லியும் நண்பன் சாயீ தனி ஐடி க்ரியேட் செய்யாத காரணத்தால் அவனுடைய office id க்கு அந்த மெயில் போய்விட்டது. இப்போது அதன் காரணமாக சாயீ சூட்டோடு சூடாக தனி மெயில் ஐடி க்ரியேட் செய்து அனுப்பியதற்கு நான் தமிழில் அனுப்பிய பதில் நிறைய பேரால் படிக்க முடியாமல் போனதால் இதோ அந்த பதில்: என்ன சாயீ, சும்மா அதிருதுல்ல, நீ பர்சனல் ஐடி மாத்தணும்தானே ஐஸ்வர்யா ராய் படத்தப் போட்டு தாக்கினது. இப்போ மரியாதையா நீயே ஐடி மாத்திட்டல்ல? ஹா ஹா ஹா. மக்களா, மெயில் அனுப்பிச்சா பாத்துட்டு ரிப்ளை பண்ணாம இருந்தா இதுதாண்டி கதி (ச்சும்மா மதுர பாஷைல போட்டுத் தாக்குரோம்ல?) ஸாரிமா சாயீ, எதாவது குழப்பம் ஆயிடுச்சா? குஞ்சிலி, காலா காலத்தில நீயும் தனி மெயில் ஐடி க்ரியேட் பண்ணிக்கோ! உன்னுடைய office id க்கு அனுப்ப பயமா இருக்கு.

க்ரூயிஸ் ஷிப் பயணம்? இதப் படிங்க மொதல்ல!

சில வருடங்களுக்கு முன் எல் & டியில் வேலையில் இருந்தபோது ஊரிலிருக்கும் டீலர்களையெல்லாம் கூட்டிக்கொண்டு சிங்கப்பூர் சென்று அங்கிருந்து SuperStar Virgo எனும் மிதக்கும் 5 Star Luxury Cruise Liner கப்பலில் 4 இரவுகள் மறக்கமுடியாத பயணம் செய்தோம். இந்த blog அந்த பயணம் பற்றியல்ல. கனடா நாட்டைச் சேர்ந்த MS Explorer எனும் இதே வகை க்ரூயிஸ் ஷிப் நேற்று இரவு ஒரு ஐஸ்பெர்க் (மிகப் பெரிய மிதக்கும் ஐஸ் கட்டி) மேல் மோதி கவிழ்ந்திருக்கிறது. நல்ல வேளையாக அதிலிருந்த 154 tourists & shipcrew ஆகியோரைக் காப்பாற்றிவிட்டார்கள். இப்போதெல்லாம் க்ரூயிஸ் பயணம் போகுமுன் இன்ஷூரன்ஸ் செய்து கொள்வது சாலச் சிறந்தது. சமீபத்தில் க்ரூயிஸ் பயணம் செய்த நண்பன் செழியன் இதை வழிமொழிவான் என நம்புகிறேன்.

The 10 Commandments of Azim Premji, Chairman of Wipro

Stories are abound about Azim Hasham Premji in the Indian business circles. He is credited with transforming the fledgling $2 million hydrogenated cooking fat company he inherited from his father at the age of 21 into a $2.1 billion IT Services organization serving customers from across the globe. A recipient of many awards and accolades—primary among them being Time magazine’s listing him as one of the world’s 100 most influential people in 2004 and the Padma Bhushan in 2005—Premji, unlike many others believes each one of them is recognition for all those who over the years have shared his thoughts and experiences on a host of issues ranging from India’s meteoric rise in the world order to the importance of universal quality education. Here, we capture his advice to techies in ten simple commandments—Premji’s commandments. 1 Take charge, dream on The first thought that crossed young Azim Premji’s mind when he stepped into the Wipro factory at Almaner was ‘take charge’. T...

Berger ரவியா? பாரி வள்ளலா?

கடந்த சனி (15/11/07) நடந்த மறக்க முடியாத சந்திப்பின் கடைசி நேரத்தில் முருகன் பாண்டியில் இருந்து வாங்கிவந்த Mansion House சோமபானம் கொஞ்சம் மிஞ்சி விட்டது. அவசரத்தில் நம் நண்பன் Berger ரவியின் காரில் அது தவறுதலாகப் போய்விட்டது. ரவியைப் போன்ற நல்ல மகான்கள் கெட்ட பேர் வாங்கிவிடக்கூடாது என்று நரசிம்மன் சொன்னதன் பேரில் ரவியிடம் விசாரித்தபோது, ரவி சொன்ன பதில் புல்லரிக்கவைத்தது. எனக்கும் ரவிக்கும் அலைபேசி (mobile phone) மூலம் நடந்த பேச்சு இதோ: நான்: ரவி, சாரிமா, நேத்து ஞாபகம் இல்லாம உன் வண்டியில சரக்கு பாட்டில் போயிடுச்சு, அத பாத்தியா? ரவி: ம், பாத்தேனே நான்: அடப்பாவி, அது எங்கடா? ரவி: ஒ, அதுவா? நேத்து குமார ட்ராப் பண்ணிட்டு கிளம்பும்போதுதான் கவனிச்சேன், குமார் ஒக்காந்த சீட் மேல கெடந்தது, குமார் போதைல அதைக்கூட கவனிக்கல. நாந்தான், அங்க ரோடு ஓரமா அந்த ராத்திரி குளுருல வேல பாத்துகிட்டு இருந்த ஒரு carpenter கிட்ட கொடுத்தேன், அவன் என்ன தெய்வமேன்னு பாத்தான் நான்: அடப்பாவி! இப்போது சொல்லுங்கள் நண்பர்களே, முல்லைக் கொடிக்கு தேர் தந்த பாரி வள்ளலையும் மிஞ்சிவிட்ட நம் நண்பன் ரவிக்கு ஜே!

Half a glass of wine a day keeps cancer away

London: It's a research that counters conventional thinking about the link between alcohol use and colon cancer -- drinking half a goblet of red wine a day could protect against the development of the disease. Researchers have carried out a study and found that a diet rich in grapes, that is red wine, contains an ingredient called resveratrol which blocks a chemical pathway that helps to prevent or spread colon cancer. "This is truly exciting, because it suggests that substances in grapes can block a key intracellular signalling pathway involved in the development of colon cancer before a tumour develops," lead researcher Dr Randall Holcombe was quoted by the 'Daily Mail' as saying. In fact, Dr Holcombe and his fellow researchers at the University of California came to the conclusion after studying a number of patients who're diagnosed with colon cancer. One group was given 20 milligrams daily of resveratrol as a pill; another drank 120 grams daily of grape p...

ரெசிடன்சி ஹோட்டலும் ப்ரில்லியண்ட் டுடோரியல்ஸ் கையேந்தி பவனும்

(இந்த அருமையான சந்திப்பை காமிரா இல்லாமல் நடத்தியதால் பழைய படங்களை இங்கே கொடுத்திருக்கிறேன்.) நண்பன் குமார் வெகு நாட்களுக்குப் பிற்கு இந்தியா வந்திருப்பதால், நண்பர்களுடன் ஒரு சந்திப்பு ரெசிடன்சி ஹோட்டலில் நடந்தது. நண்பர்கள் நாலு பேர் வெகு நாட்களுக்குப் பிற்கு ஒன்று சேர்ந்தால் மனம் விட்ட பேச எவ்வளவோ விஷயங்கள் இருக்கும். துரதிருஷ்டவசமாக இவ்வளவு பெரிய சென்னை மாநகரில் அதெற்கென ஒரு அமைதியான இடம் இல்லை.விதிவிலக்கில்லாமல் ரெசிடன்சி ஹோட்டலிலும் திடும் திடும் என அதிர்ந்திடும் காட்டுக் கத்தலான ஆங்கில இசை போட்டு வெறுப்படிக்கவே, அனைவரும் சட்டென சிறிது நேரத்திலேயே வெளியேறினோம். பிற்கு குமாரின் வேண்டுகோளின் பேரில் ப்ரில்லியண்ட் டுடோரியல்ஸ் வாசலில் உள்ள கையேந்தி பவனுக்கு சென்றோம். குமார், ஷங்கர், சாயீ,நரசிம்மன், ரவி, முருகன், செழியன், நான் என எல்லோருமே ஏறக்குறைய ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகும்,பாசாங்கு ஏதும் இல்லாத நட்பு மட்டுமே இதைப் போன்ற சந்திப்புகளுக்கு வழிவகுக்க முடிகிறது. நைஜீரியாவிலிருந்து வந்திருக்கும் குமாரும், GRT Grand போன்ற பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் ஷங்கரும் மற்ற எல்லா நண...

GET SMART(ER)

You're No Genius? Don't Worry. You Can Still Beef Up Your Brain With a Little Effort -By Christina Breda Antoniades Special to The Washington Post You're struggling with a tricky problem at work. Then you had to do the embarrassing "Um, hiiiiiiiiiii," routine to cover the fact that you forgot the name of the woman you always bump into at the copy machine. And now at happy hour you've clammed up because someone mentioned Pyongyang, and though it dimly rings a bell, you're not sure if it's a table sport or a place or some sort of noodle dish. If only you were smarter, you think. Not that you're dumb (we'd never call you that, at least not to your face). But wouldn't it be nice to have all the answers, a picture-perfect memory and the ability to astonish your friends or wow your boss with big words and bigger thoughts? It's a common desire, but just how plausible it is depends on whom you ask. And before you get an answer, you'll almos...

ஐஸ் ஹோட்டல் அற்புதம்

நாமெல்லாம் அவரவர் வசதிக்கும்/கம்பெனி பட்ஜெட்டுக்கும் ஏற்றார்போல ஹோட்டல்களில் தங்குகிறோம். ஷங்கர் போன்ற globe trotting ஆசாமிகள் 5 Star ஹோட்டல்களை நாடும்போது, நம்மில் பலர் ஒரு நல்ல, டீசண்ட் ஆன ஹோட்டலில் தங்க விழைகிறோம். Business Travellers மற்றும் Tourists ஆகியோரை கவரும் விதமாக இப்போது விதவிதமான ஹோட்டல்களை காண முடிகிறது. Apartment Hotels, Boutique Hotels என்று விளம்பரப்படுத்தி பணம் பார்க்கிறார்கள். சமீபத்தில் சிங்கப்பூரில் ஷங்கருடன் பேசியபோது Chicagoவில் உள்ள ஒரு விஞ்ஞானமயமான ஒரு ஹோட்டல் பற்றி சிலாகித்து சொன்னான். ஆள் உதவி ஏதுமின்றி check-in செய்வதிலிருந்து எல்லாமே computerமயம் (computerஐ கணினி என்று சொல்ல ஏனோ கை வரவில்லை. எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல எல்லா வார்த்தைகளையும் தமிழ்படுத்தும்போது சில அபத்தங்களை தவிர்க்கலாம் என எண்ணுகிறேன். Biology subjectஇல் Protoplasm என்பதை "உயிரணு பாயசம்" என்று பாடப் புத்தகங்கள் குறிப்பிடும்போது சற்று எரிச்சலாகத்தான் இருக்கிறது) என்று சொன்னபோது ஆஹா என்று சொல்லத் தோன்றியது. இப்போது ஒரு ஐஸ் ஹோட்டல் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்: ஸ்வீடன் நாட்டின...

E-Mail Scammers Ask Your Friends for Money!

Nigeria continues to develop and export the world’s most innovative Internet scams. In one bizarre variation that seems to have ramped up in recent months, the scammers are taking a page from Facebook and leveraging the power of social connections. Here’s how it works: The scammer somehow breaks into a victim’s Web-based e-mail account. He then impersonates the victim and sends an emergency plea for help to everyone in the account’s address book, asking them to wire money to Nigeria. The e-mail includes some variation on a story about getting mugged or losing a wallet while on a trip to Nigeria. This happened recently to Drew Biondo of Port Jefferson, N.Y. He said he was at home early one morning when his wife alerted him to an e-mail she had received from his Yahoo address about his Nigerian money troubles. He scrambled to try to regain control over his account, but trying to find a phone number for an actual human at Yahoo was “ridiculously difficult,” he said. Mr. Biondo, a public r...

தீபாவளி தீபாவளி

தீபாவளி என்றால் கிட்டத்தட்ட எல்லோருக்குமே பட்டாசும், புதுத்துணியும் தான் நினைவு வரும். எனக்கு என் அப்பா. மூன்று பெண்களுக்கு நடுவே ஒரே பையனாக பிறந்ததாலோ என்னவோ, என் அப்பாவுக்கு என் மீது ஒரு தனி வாஞ்சை. என்ன ஆனாலும் சரி, எனக்கு காஸ்ட்லியான துணிதான் வாங்குவார். மதுரையில் அமர்ஜோதி என்ற ஆயத்த ஆடையகம் (ரெடிமேட் துணிக்கடை) அப்போது ரொம்ப பிரபலம் (இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை). நான் ஸ்கூலில் ஐந்தாவதோ, ஆறாவதோ படிக்கும் போது ஒரு நல்ல ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலந்த டிசைனில், மிகவும் மெத் மெத் என்று ஒரு சட்டை வாங்கிக்கொடுத்தார். அந்த சட்டை ஈஜிப்ஷன் காட்டனில் செய்யப்பட்ட சட்டை என்பதால் எனக்கு ஒரே பெருமை. அந்த வருஷம், என்னுடைய கிளாசில் யாரும் ரெடிமேட் சட்டையே வாங்கவில்லை என்பது வேறு விஷயம். பட்டாசுக்கு ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு ஒரு மாசம் முன்பே லிஸ்ட் போட ஆரம்பித்துவிடுவேன். நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகத்தான் என் அப்பா எனக்கு வாங்கித் தருவார். சுற்றும் முற்றும் இருக்கும் சக நண்பர்கள் வயிறு எரியும்படி, தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே மத்தாப்பு கொளுத்த ஆரம்பித்து விடுவேன். இப்போதெல்லாம் ...

KL- சில ஆச்சர்யங்கள்

மலேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் மற்ற இஸ்லாமிய நாடுகளின் கெடுபிடிகள் இல்லை. எங்கெங்கு நோக்கிடும் கருப்பு பர்த்தாக்கள் இல்லை. அங்கங்கே தீடிரென தொழுகை நேரத்தில் அல்லா.... என்று அலறும் ஸ்பீகர்கள் இல்லை.ஹைதராபாத் நகரெங்கும் தீவிரவாதிகளா பொதுமக்களா என இனம் பிரிக்க முடியாமல் பட்டாபட்டி பைஜாமாக்களில் அலையும் ஆஜானுபாகர்கள் இங்கு இல்லை. இஸ்லாமிய நாடு என்பதற்கு முக்கிய அடையாளமான மதுவிலக்கு தீவிரமாக இல்லாவிட்டாலும் மதுபானங்கள் விற்கும் கடைகளை மிக, மிக அரிதாகவே காண முடிந்தது. அதுவும் நாங்கள் போன நேரம், ரம்ஜான், ஹரிராயா ஆகிய முக்கிய விரதங்களுடன் கூடிய பண்டிகைகள் முடிந்த நேரம் என்பதால், தண்ணீருக்கு பதிலாக சர்வ சாதாரணமாக கிடைக்கும் பீர் வகைகளை மட்டும் பார்க்க முடிந்தது. நரசிம்மன் எப்படியோ மோப்பம் பிடித்து ஒரு cold storage கடையைக் கண்டுபிடித்த பின்தான் பெருமூச்சு விட்டோம். KLCC உள்ளே ஒரு அருமையான ரெஸ்டாரன்ட் இருக்கிறது, முதல் நாள் அதில் ஒரு அமர்க்களமான லேட் லஞ்ச் சாப்பிட்டோம். பிறகு இலக்கில்லாமல் ஊர் சுற்றி விட்டு, ஹோட்டல் வரும்போது கால் வலியோ வலி. எங்கள் அதிர்ஷ்டம், மிக அருகாமையில் ஒரு தமிழ் ரெ...

சிங்கப்பூரில் இருந்து KL

சிங்கப்பூரில் இறங்கி ரவியைச் சந்தித்து விட்டு, இரவு உணவுக்குப் பின் அடுத்த நாள் காலை கோலாலம்பூர் (KL) பயணத்திற்கு தயாராகி விட்டோம். ஷங்கர் இரண்டு நாள் கழித்து சிங்கப்பூர் வந்து சேருவேன் என்று சொன்னதால் அவசரப் பயணமாக KL சென்றோம். KL ஒரு மிகப் பெரிய நகரம். நம்ம சென்னையைப் போல எல்லா இடங்களிலும் கூட்ட நெரிசல். டாக்சி டிரைவர்களும் நம் ஊர் போலவே மீட்டருக்கு சூடு வைத்து பகல் கொள்ளை அடிக்க சித்தமாக இருக்கிறார்கள். நாங்கள் தங்கிய சீசன்ஸ் கிராண்ட் ஹோட்டல் ஒரு இன்ஜினியரிங் அற்புதம். KL நகரத்தின் மிக உயரமான ஹோட்டல் இது. கவனிக்கவும், உயரமான கட்டிடம் அல்ல. அந்தப் பெருமையை இன்னும் பெட்ரோனாஸ் டவர் மட்டுமே கொண்டாட முடியும். என்னதான் சொன்னாலும், சிங்கப்பூருடன் ஒப்பிடும் போது KL மிக, மிக affordable நகரம்தான். உலகிலேயே உயரமான கட்டிடம் பெட்ரோனாஸ் டவர்தான் என்று சிலகாலம் மலேசிய மக்கள் ஜல்லியடித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்தப் பெருமை தைவானுக்கு. வெகு சீக்கிரம் துபாய்க்கு. துபாயில் மிக, மிக, மிக உயரமாக ஒரு கட்டிடம் கட்ட திட்டமிட்டவுடன், கடவுள் சட்டென்று உஷாராகி துபாய் ஆசாமிகளை அணுகி "தம்பிகளா, ரொ...

எங்கும் பரவட்டும் தமிழ்!

நண்பர்களே, என்னதான் ஆங்கிலம் பகட்டு மொழி என்றாலும் தமிழில் பேசும் போது வரும் அன்னியோனியம் ஒரு தனி சுகம். கடல் கடந்து இருக்கும் நம் ரவி, குமார்,அடிக்கடி கடல் கடக்கும் ஷங்கர் போன்ற நண்பர்கள் தமிழ் மொழி மேல் மேலும் காதல் வளர இந்த தமிழ் blog செய்திகள் உதவும் என்று நம்பி பிள்ளையார் சுழியுடன் ஆரம்பிக்கிறேன். சிங்கப்பூர் ஒரு மகத்தான நகரம், ஆறேழு முறை சென்றும் அலுக்கவில்லை என்பதுதான் நிஜம், ஒரு சக்தி வாய்ந்த காந்தம் போல என்னை இழுத்துக்கொண்டே இருக்கிறது என்பது உண்மை. மேலும் ரவி அங்கு வசிப்பதால் அதிக இஷ்டம். நல்ல நண்பர்கள் பத்து பேருடன் செல்லவேண்டுமென்ற ஆசை வெகு நாட்களாக இருந்தும் நிறைவேறாமல் போய்க்கொண்டிருந்ததால் சட்டென முடிவு எடுத்து போன வாரம் போய் வந்து விட்டோம். மலேசியா தற்போது 50 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதால் ஏகப்பட்ட விளம்பரங்கள் செய்து, கோலாலம்பூர் ஜே ஜே என இருக்கிறது. கோபால் பல்பொடி விளம்பரம் போல சிங்கப்பூர், மலேசியா ஆகிய ஊர்களில் நமது புகழ் பரவ என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துவிட்டு வந்தோம். என்ன செய்தோம் என்பது என் அடுத்த blog மலரில்...காத்திருங்கள், நண்பர்களே, காத்த...

Let's Kill Gandhi

Mahatma Gandhi's great grandson,Tushar A Gandhi, has written & released a book called "Let's Kill Gandhi." In this book he has alleged that Brahmins were behind the death of Mahatma. According to him (in the book) Brahmins had tried to kill Mahatma on several occasions and finally one Brahmin (Nathuram Godse) succeeded in the attempt. This comment has, naturally, provoked a lot of heated discussions and now Tushar is trying to retract his comment. Clarifying his recent remarks on the issue, he said in a statement that he had not referred to the Brahmin community as a whole. "I am not in the habit of making generalised statement and branding an entire community for the sins of the few. An unnecessary controversy has been ignited due to misreporting of certain observations made by me," Gandhi said referring to remarks made at a function to release his book Let's kill Gandhi on Tuesday. "What I had said was that a group of Poona Brahmins were const...

India on the move

Stephen S Roach, Chief Economist at the US-based Morgan Stanley, returning from his fourth trip to India in three years, said the South Asian country has achieved breakthroughs in savings and foreign direct investments that would script one of the world’s most exceptional economic development stories over the next three-five years. “I am returning from India with great enthusiasm. India has made solid progress on two counts — savings and FDI — and infrastructure development seems set to follow. These are breakthroughs that can unshackle India’s greatest strengths — a high-quality stock of human capital and the magic of its entrepreneurial spirit. India’s national saving at 32.4 per cent in the 12 months ending March 2006 is up significantly from the 25 per cent average of the 1990 to 2004 period. At the same time, the aggregate investment ratio has moved up to 33.4 per cent as of March 2006, a major breakout from the 26 per cent average of the preceding 15 years. And foreign ...

India the Superpower? Think again

India should put aside pride about its growing economy and concentrate on improving the lives of average citizens, argues Fortune's Cait Murphy. Plug in the words "India" and "superpower" into an Internet search engine and it's happy to oblige - with 1.3 million hits. I confess that I did not check each one, but I suspect that almost all of these entries date from the last couple of years. This is understandable. For the first time ever, India has posted four straight years of 8 percent growth; since it cracked open its economy in 1991, it has averaged growth of 6 percent a year - not in the same league as China, but twice the derisory "Hindu rate of growth" that had marked the first 45 years of independence. India has gone nuclear, and even gotten the United States to accept that status. Its movies are crossing over to become international hits. The recent $11.3 billion takeover of Corus by Mumbai-based Tata Steel was the biggest acquisition ever ...

A Robot in Every Home?

If someone told us there would be PCs or TVs in every household in India, by the year 2007,we would have ridiculed the person. Now it is becoming a reality. Bill Gates (yes, the richest man on our Mother Earth and the .... oh,do you really need intro for this man?) has penned his thoughts in one of the recent articles appeared in Scientific American. Please find the gist of that given below: Scientific American, December 16, 2006 A Robot in Every Home by Bill Gates The leader of the PC revolution predicts that the next hot field will be robotics The emergence of the robotics industry is developing in much the same way that the computer business did 30 years ago. Think of the manufacturing robots currently used on automobile assembly lines as the equivalent of yesterday's mainframes. The industry's niche products include robotic arms that perform surgery, surveillance robots deployed in Iraq and Afghanistan that dispose of roadside bombs, and domestic robots that vacuum the...

Kamal Hassan & Controversies

Its no doubt Kamal Hassan is a multi-faceted film personality-excellent actor, script writer, fabulous dancer (or used to be one), soon to be an exemplary director-yet, why he is sometimes openly delaying his movies? Is the delay is due to controversies-like his all famous tussles with almost all his directors, naming of the movie (Mumbai Express, Sandiyar etc.) and sometime civil suites against(atleast most of his) movies. Another thing which is bogging him down is his reluctance to come out in the open & say that, "Ok,I am only person who can direct me." Or if he is comfortable with his directors, why there are so many news items about his tussle with almost all his directors? Is it a hype created by the media? Some of his detractors even say it is a way with Kamal to make people talk about his movies, so that the tempo is well maintained till the release of any movie. As a hardcore Kamal fan, right from my school days (am now in my early 40's), its hard for me to d...

Gandhi Giri

While Indian Youth have a re-awakening to Gandhiji's ideals and teachings, movies like Lage Raho Munnabhai are helping to go in to a positive trend, Indians living in US(well,atleast a few of them)have dared to ridicule the Father of our nation by posting this video on YouTube. One can say there is nothing wrong with the video and people should not bother too much about it. When this shown on CNN-IBN Channel, there was a big uproar,for few days and then we turned our attention to the crying of the voluptuous Shilpa Shetty (she has not completed her college, but can speak in ten languages, she is going to dine with the Royal Family in England and all that). See for yourself and judge. Honestly, in my opinion, the Indian, who has taken and posted it, could have chosen someone else (possibly a politician of today's India)and not the Mahatma.

Is someone listening?

Ok, guys/gals I am not new to blogging, tried several times and dropped in to oblivion simply because of my laziness, or should I say I had better things to do? Ok,now that I have started, all I want is someone to read all my blogs and comment on it (if possible). What am I going to blog? Anything and everything under the sun! To start with I love music, books,..I like Angelina, Pierce Brosnan (please, I cant stand the new Bond), Johnny Depp, Kamal Hassan and the list will go on. To start with I have given the Musical Video I enjoyed recently very much: