சில வருடங்களுக்கு முன் எல் & டியில் வேலையில் இருந்தபோது ஊரிலிருக்கும் டீலர்களையெல்லாம் கூட்டிக்கொண்டு சிங்கப்பூர் சென்று அங்கிருந்து SuperStar Virgo எனும் மிதக்கும் 5 Star Luxury Cruise Liner கப்பலில் 4 இரவுகள் மறக்கமுடியாத பயணம் செய்தோம். இந்த blog அந்த பயணம் பற்றியல்ல.
கனடா நாட்டைச் சேர்ந்த MS Explorer எனும் இதே வகை க்ரூயிஸ் ஷிப் நேற்று இரவு ஒரு ஐஸ்பெர்க் (மிகப் பெரிய மிதக்கும் ஐஸ் கட்டி) மேல் மோதி கவிழ்ந்திருக்கிறது. நல்ல வேளையாக அதிலிருந்த 154 tourists & shipcrew ஆகியோரைக் காப்பாற்றிவிட்டார்கள்.
இப்போதெல்லாம் க்ரூயிஸ் பயணம் போகுமுன் இன்ஷூரன்ஸ் செய்து கொள்வது சாலச் சிறந்தது. சமீபத்தில் க்ரூயிஸ் பயணம் செய்த நண்பன் செழியன் இதை வழிமொழிவான் என நம்புகிறேன்.
Comments