Skip to main content

ஐஸ் ஹோட்டல் அற்புதம்

நாமெல்லாம் அவரவர் வசதிக்கும்/கம்பெனி பட்ஜெட்டுக்கும் ஏற்றார்போல ஹோட்டல்களில் தங்குகிறோம். ஷங்கர் போன்ற globe trotting ஆசாமிகள் 5 Star ஹோட்டல்களை நாடும்போது, நம்மில் பலர் ஒரு நல்ல, டீசண்ட் ஆன ஹோட்டலில் தங்க விழைகிறோம். Business Travellers மற்றும் Tourists ஆகியோரை கவரும் விதமாக இப்போது விதவிதமான ஹோட்டல்களை காண முடிகிறது. Apartment Hotels, Boutique Hotels என்று விளம்பரப்படுத்தி பணம் பார்க்கிறார்கள்.

சமீபத்தில் சிங்கப்பூரில் ஷங்கருடன் பேசியபோது Chicagoவில் உள்ள ஒரு விஞ்ஞானமயமான ஒரு ஹோட்டல் பற்றி சிலாகித்து சொன்னான். ஆள் உதவி ஏதுமின்றி check-in செய்வதிலிருந்து எல்லாமே computerமயம் (computerஐ கணினி என்று சொல்ல ஏனோ கை வரவில்லை. எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல எல்லா வார்த்தைகளையும் தமிழ்படுத்தும்போது சில அபத்தங்களை தவிர்க்கலாம் என எண்ணுகிறேன். Biology subjectஇல் Protoplasm என்பதை "உயிரணு பாயசம்" என்று பாடப் புத்தகங்கள் குறிப்பிடும்போது சற்று எரிச்சலாகத்தான் இருக்கிறது) என்று சொன்னபோது ஆஹா என்று சொல்லத் தோன்றியது. இப்போது ஒரு ஐஸ் ஹோட்டல் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்:
ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம், அங்கிருந்து சுமார் 1350 கீமி தொலைவில் இருக்கிறது Kiruna நகரம். அங்கிருந்து மிக அருகில் இருக்கும் ஒரு சின்ன கிராமம்தான் Jukkasjärvi (ஜுக்காசார்வி). இங்குதான் இந்த அதிசய ஐஸ் ஹோட்டல் உள்ளது. முழுக்க முழுக்க ஐஸால் செய்யப்படும் ஹோட்டல் இருக்கிறது. அதென்ன "செய்யப்படும்" என்று கேட்கிறீர்களா? ஒவ்வொரு வருடமும் winter இல் கட்டப்பட்டு பிறகு summer இல் கரைந்து ஓடிவிடுகிறது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல ஒவ்வொரு வருடமும் இந்த அதிசயம் கட்டப்படுகிறது! என்ன இந்த ஐஸ் ஹோட்டல் இருக்கும் கிராமத்தில் இருந்து Artic Circle 200 கீமீ தூரம்தான்.

1990 ஆம் வருடத்தில்தான் இந்த ஹோட்டல் முதலில் கட்டப்பட்டது.அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் வேறுவேறு designகளில் கட்டப்படும் இது ஒரு இன்ஜினியரிங் அற்புதம்.Torne River எனும் ஒரு ஜீவ நதி பனிக்காலத்தில் உறைந்து போய்விடும் பொது இந்த ஐஸ் ஹோட்டல் சடுதியில் கட்டப்படுகிறது. பிரத்யேகமாக ஒவ்வொன்றாக மெனக்கெட்டு ஒரு நவீன ஹோட்டலின் எல்லா வசதிகளையும் ஐஸில் கொண்டு வந்து பார்ப்போரை அசர வைக்கிறார்கள்.

கடந்த பதினேழு வருடங்களாக சலிக்காமல் புதிதுபுதிதாக இந்த ஐஸ் ஹோட்டல் கட்டப்படுகிறது. Winter வரும்போது கட்டப்படும் இந்த ஹோட்டல் மறுபடியும் summer இல் உருகி Torne River இல் ஐக்கியமாகி விடும்போது மிஞ்சுவது அதைப்பற்றிய நினைவுகளும் அதனுடைய புகைப்படங்களும்தான்.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...