புது வருடம் பிறக்கும் முன் எல்லோரும் குடும்பத்துடன் சந்திக்கும் ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்தேற எல்லாம் வல்ல வல்லக்கோட்டை முருகனைப் பிரார்த்திக்கிறேன். இது என் ஆறு வருட கனவு. 1998 இல் சென்னை மாற்றலாகி வந்தபின் நான் அடிக்கடி சந்தித்த மூன்று பேர் சாயீ, Berger ரவி, மற்றும், நல்லவரெல்லாம் சீக்கிரமே இறைவனிடம் போய்விடுவார்கள் என்ற கூற்றை உண்மையாக்கிய, முகுந்தும்தான்.
பிறகு மெதுவாக ஷங்கர், குஞ்சிலி, முருகன் என்று மறுபடியும் வட்டம் பெரிதானாலும் அடிக்கடி சந்திப்பது என்பது மிக, மிக அரிதாகவே நடந்தது. பிறகு மெதுவாக ஷங்கர் பெங்களூர் சென்றதும், சேகர் மற்றும் குமாரை எதேச்சையாக ரவி ஒரு நாள் சந்தித்ததும், ராஜ்குமாருடன் மறுபடி தொலை தொடர்பு ஏற்பட்டதும், செழியனை அவன் அலுவகத்தில் சந்தித்ததும்(நீ வயசான மாதிரி ஆயிட்ட, ஆனா திடீர்னு எப்படி கடலூர்ல இருந்ததைவிட tall ஆயிட்ட? போன்ற செழியனின் கேள்விகளுக்கு என்னால் அப்போது பதில் சொல்ல முடியவில்லை), கோபாலபுரத்தில் ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறிய போது, அருகில் சென்ற காரில் இருந்து சாம்பா திடீரென வெளிப்பட்டது ஒரு ஆச்சர்யமான சம்பவம் என்றால், அவன் சொல்லாமல் கொள்ளாமல் டெல்லிசென்றதும், பின்னர் அவனே ஒரு நாள் தொலைபேசியில் கூப்பிட்டு Nestle க்காக event நடத்த முடியுமா என்று ஆசையை வளர்த்துவிட்டு பின் தொடர்பே இல்லாமல் போனதும், வேறு பல விஷயங்களும் நடந்தும், நடக்காமல் இழுத்துக்கொண்டே போன (போகும்?) விஷயம் நாம் எல்லோரும் குடும்பத்துடன் சந்திக்கும் விஷயம்தான்.
மறக்காமல், மறுக்காமல், எல்லோரும் 30 ம் தேதி மாலையில் சந்திக்கலாம். ரவி, உன்னுடைய மீட்டிங்கை சீக்கிரம் முடித்துவிட்டு வந்துவிடு. ஷங்கர் இதற்காக மெனக்கெட்டு அவனுடைய foreign tour ஐ முடித்துக்கொண்டு நேராக சென்னைக்கு குடும்பத்துடன் வருவதால் இந்த ஏற்பாடு.
இது வரை சேகர், நரசிம்மன், குமார், குஞ்சிலி, ரவி, ஷங்கர் ஆகியோர் சம்மதம் கொடுத்துவிட்டனர்.
செழியன், சாயீ, ராஜ்குமார், முருகன, ஸ்ரீதர்-சீக்கிரம், please.

Comments