சிங்கப்பூரில் இறங்கி ரவியைச் சந்தித்து விட்டு, இரவு உணவுக்குப் பின் அடுத்த நாள் காலை கோலாலம்பூர் (KL) பயணத்திற்கு தயாராகி விட்டோம். ஷங்கர் இரண்டு நாள் கழித்து சிங்கப்பூர் வந்து சேருவேன் என்று சொன்னதால் அவசரப் பயணமாக KL சென்றோம்.
KL ஒரு மிகப் பெரிய நகரம். நம்ம சென்னையைப் போல எல்லா இடங்களிலும் கூட்ட நெரிசல். டாக்சி டிரைவர்களும் நம் ஊர் போலவே மீட்டருக்கு சூடு வைத்து பகல் கொள்ளை அடிக்க சித்தமாக இருக்கிறார்கள். நாங்கள் தங்கிய சீசன்ஸ் கிராண்ட் ஹோட்டல் ஒரு இன்ஜினியரிங் அற்புதம். KL நகரத்தின் மிக உயரமான ஹோட்டல் இது. கவனிக்கவும், உயரமான கட்டிடம் அல்ல. அந்தப் பெருமையை இன்னும் பெட்ரோனாஸ் டவர் மட்டுமே கொண்டாட முடியும்.
என்னதான் சொன்னாலும், சிங்கப்பூருடன் ஒப்பிடும் போது KL மிக, மிக affordable நகரம்தான்.
உலகிலேயே உயரமான கட்டிடம் பெட்ரோனாஸ் டவர்தான் என்று சிலகாலம் மலேசிய மக்கள் ஜல்லியடித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்தப் பெருமை தைவானுக்கு. வெகு சீக்கிரம் துபாய்க்கு.
துபாயில் மிக, மிக, மிக உயரமாக ஒரு கட்டிடம் கட்ட திட்டமிட்டவுடன், கடவுள் சட்டென்று உஷாராகி துபாய் ஆசாமிகளை அணுகி "தம்பிகளா, ரொம்ப ஒசரம் வேண்டாம், நான் ரம்பை, ஊர்வசி, மேனகா மாதிரி அழகிகளோடு ஒரு மாதிரி இருக்கும் போது, உங்க ஆளுங்க பாத்துட போறாங்க," என்று request செய்து கொண்டதன் பேரில் உயரத்தை இப்போது குறைத்துக்கொண்டதாக கேள்வி.
முதல் நாள் KL நகரத்தின் பிரதான maals சிலவற்றை மட்டுமே பார்க்க முடிந்தது. பெட்ரோனாஸ் டவர் தரிசனம் வெளியில் இருந்து மட்டுமே சாத்தியமானது.
மறுநாள் காலையில் ஒரு உண்மையான super deluxe coach பிடித்து ஜென்டிங் ஹைலண்ட்ஸ் போய் சேர்ந்தோம். ஜென்டிங் ஒரு glorified VGP மற்றும் MGM வகையைச் சேர்ந்த theme park தான். அதன் ஒரே த்ரில் அங்கு போய் சேர உதவும் கேபிள் கார் சவாரிதான்.
கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் ஜென்டிங் இருப்பதால் கேபிள் கார் செங்குத்தாக ஏறுகிறது. பனிமூட்டத்தின் நடுவே எதிரே வரும் காக்காவே கண்ணுக்குத் தெரியாதபோது எப்படி இவ்வளவு உயரத்தில் இந்த கேபிள் டவர்களை நிர்மாணித்தார்கள் என்பது ஒரு பெரிய விஷயம். இறங்கி வரும்போதும் அந்த உயரம் வயிற்றில் ஏதோ செய்கிறது. ஜென்டிங் ஹைலண்ட்சுக்கு மிக அருகாமையில் மலேசியாவின் rain forests இருக்கின்றன. இந்தக் காடுகள் 32 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டது என்கிறார்கள். இதையெல்லாம் எப்படி கணக்கிடுகிறார்கள் என்பது மற்றொரு 32 மில்லியன் டாலர் கேள்வி!
உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள். நிச்சயமாக தீபாவளிக்கு முன் இன்னொரு blog மலருடன் சந்திக்கிறேன்.
Comments