Skip to main content

Posts

Showing posts from June, 2011

அண்ணா சாலையில் போக்குவரத்தை நிறுத்திய போக்குவரத்து போலீசாரின் அராஜகம்

செய்தி: சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும்,"இ-சலான்' மற்றும்"போர்ட்டபிள் சோலார் சிக்னல்' திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். சென்னை நகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரையும், திருட்டு வாகனங்களை எளிதில் கண்டுபிடிக்கும் விதமாகவும்,"இ-சலான்' எனும் மின்னணு ரசீது வழங்கும் திட்டத்தை, போக்குவரத்து போலீஸ் அறிமுகப்படுத்தியது.  போக்குவரத்து சிக்னல் பழுதான இடங்கள், அதிக வாகன போக்குவரத்து இருந்தும் சிக்னல் பொருத்த முடியாத இடங்கள், வி.ஐ.பி.,க்கள் போக்குவரத்தின் போது பயன்படுத்தத்தக்க வகையில், எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட," போர்ட்டபிள் சோலார் சிக்னல்' அமைப்பும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இவை இரண்டையும், சென்னை அண்ணா சாலை போலீஸ் நிலைய வளாகத்தில் நடந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.  நேற்று இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்: எல்லாம் ஓகேதான், ஆனால் இதற்காக நேற்று அண்ணா சாலை, எக்மோர் என்று எல்லா பிரதான சாலைகளிலும் நேற்று சொல்ல முடியாத அளவு வாகன நெரிசல் ஏற்பட்டது. அண்...

இறப்பதற்கு முன் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய 5 ரகசியங்கள்: படித்ததில் பிடித்தது

ஜான் பி.இஸோ (John B .Isso) எழுதிய The  Five Secrets You Must Discover Before You Die என்ற மிக அருமையான புத்தகத்தை (178 பக்கங்கள் மட்டுமே) இன்று ஒரே மூச்சில் படித்து முடித்தேன். வாழ்வின் குறிக்கோள் என்ன, நாம் வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும், அமைதியான, மகிழ்வான வாழ்வு வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மிகச் சுருக்கமாக, மிகத் தெளிவாக (lucid) கூறும் நூல் இது. கோடீஸ்வரனாக வேண்டும், சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும், டெண்டுல்கர் போல் ஆக வேண்டும் என்றெல்லாம்  உசுப்பேற்றாமல்  யதார்த்தமான விஷயங்களை சொல்லி இருக்கிறார் இந்த புத்தக ஆசிரியர். ஒரு முழுமையான, அர்த்தமுள்ள வாழ்வு வாழ என்ன செய்ய வேண்டும், அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்களை தேடிப் பிடித்து கிட்டத்தட்ட 200 பேருக்கும் மேல் இன்டர்வியு செய்து அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் என்னென்ன செய்தார்கள்/செய்கிறார்கள் என்று அலசி, அதை 5 ரகசியங்களாக மாற்றி இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளார் ஜான். பணம் இருக்கிறதோ இல்லையோ, வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியுடன் வாழும் நிறையப் பேரை நாம் பார்த்திருப்போம்; பணம், வசதி, சொகுசு வாழ்வு என்று எல்லாம் இர...

கணவர்கள் விற்பனைக்கு: படித்ததில் பிடித்தது.

எதுவும் கிடைக்கும் நியு யார்க் நகரில் ஒரு புதிய கடை திறக்கிறார்கள், "கணவர்கள் விற்பனைக்கு," என்ற பெயரில். அந்தக் கடையில் மொத்தம் 6 மாடிகள். உள்ளே நுழையும் பெண்கள் ஒவ்வொரு மாடியாக கீழேயிருந்து மேலே சென்று அவர்களுக்கு பிடித்தமான கணவனைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரே ஒரு கண்டிஷன்: மேலே இருந்து கீழே வர முடியாது.  முதல் நாளே கடையில் கூட்டம் அம்முகிறது. ஒரு அழகான பெண் வரிசையில் நின்று களைத்து போய் கடைக்குள் நுழைகிறாள்: முதல் மாடி: "இங்கு,  கடவுள் நம்பிக்கை உள்ள, நல்ல பதவியில் இருக்கும் கணவர்கள் கிடைப்பார்கள்" என்று ஒரு போர்டு இருக்கிறது. அந்தப் பெண் அடுத்த மாடிக்கு அதிக எதிர்பார்ப்புடன் செல்கிறாள். இரண்டாம் மாடி: " இங்கு, கடவுள் நம்பிக்கை உள்ள, நல்ல பதவியில் இருக்கும, குழந்தைகளை விரும்பும்  கணவர்கள் கிடைப்பார்கள்" என்று ஒரு போர்டு இருக்கிறது. அந்தப் பெண் அடுத்த மாடிக்கு அதிக எதிர்பார்ப்புடன் செல்கிறாள். மூன்றாம் மாடி: " இங்கு, கடவுள் நம்பிக்கை உள்ள, நல்ல பதவியில் இருக்கும, குழந்தைகளை விரும்பும், மிக அழகான கணவர்கள் கிடைப்பார்கள்" என்று ஒரு போர்டு இருக்கிற...

என்றும் சுஜாதா - எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள புத்தகத்தைப் பற்றி என் விமர்சனம்.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதி உயிர்மை பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தை நேற்று படித்தேன். புத்தகத்தின் ஆரம்பத்திலேயே ஆசிரியர் உஷாராக, " இந்தப் புத்தகம் Sujatha reader அல்ல. இது சுஜாதாவின் பன்முகத்தன்மை என நான் எதைக்கருதுகிறேன் என்பதற்கான தொகை நூல். சுஜாதா என்ற எழுத்து ஆளுமையின் பரந்து பட்ட விருப்பங்கள், ஈடுபாடுகள், அக்கரைகளையே நான் முதன்மைப் படுத்தியிருக்கிறேன். ஆகவே இது சுஜாதா படைப்புகளில் ஒரு குறுக்கு வெட்டுப்பார்வை போல உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே இதன் தனிச்சிறப்பு" என்று சொல்லிவிட்டார்.  எஸ்.ரா எழுதிய புத்தகம் என்பதால் எனக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்து, அது இந்தப் புத்தகத்தை படித்தவுடன் காற்றாகிப் போனது என்பதால் மட்டும் நான் அதிருப்தி அடையவில்லை. புத்தகத்தில் எதுவுமே புதிதாக இல்லை என்பதுதான் வேதனையான விஷயம். சுஜாதாவின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களின் கோர்வையாக இல்லாவிட்டலும், அட்லீஸ்ட், அவருடைய படைப்புகளின் ஒரு விமர்சனமாக இருந்திருக்கலாம். அல்லது, சுஜாதாவின் இன்னின்ன படைப்புகளைப் பற்றி என்னுடைய கருத்து இது என்றாவது சொல்லி இருக்கலாம். அதுவும் இல...

ஹானா-அதிரடி கலந்த அழகான ஆக் ஷன் படம்

 ஹாலிவுட் ஆக் ஷன் படங்கள் பொதுவாக கரம் மசாலா கலந்த சுத்தமான அடிதடி படங்களாகவே இருக்கும். எப்போதாவது ஒருமுறைதான் ஹானா போன்ற அழகான ஆக் ஷன் படங்கள் வெளிவரும். பனிபடர்ந்த காட்டின் நடுவே மானை வேட்டை ஆட ஹானா (Saorise Ronan) பொறுமையாக வில் மற்றும் அம்புடன் காத்திருக்கும் காட்சியில் ஆரம்பிக்கிறது படம். கிட்டத்தட்ட ஒரு மாடு சைசில் வரும் அந்த மானை அம்பு எய்தி கொள்கிறாள் ஹானா (. அம்புடன் சிறிது தூரம் ஓடிவிட்டு கீழே விழும் அந்த மானை நெருங்கி, "ஸாரி, உன் இதயத்தை மிஸ் செய்துவிட்டேன்," என்று சொல்லிவிட்டு துப்பாகியால் அதைப் போட்டுத் தள்ளுகிறாள் ஹானா. யாருமே இல்லாத அந்த பனிபிரதேசத்தில் (வடக்கு பின்லாந்த்) தன்னுடைய தந்தையால் (Eric Bana) ஒரு முக்கிய குறிக்கோளுடன் வளர்க்கப்படுகிறாள். தந்தை அமெரிக்க உளவு நிறுவனமான CIA யில் பணிபுரியும்போது சில துரோகிகளால் பெரிய ஆபத்தில் மாட்டிகொண்டு பின் தப்பிவிடுகிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஹானாவின் தாய் கொல்லப்டுகிறாள். ஹானாவின் தந்தை ஹானாவுடன் ஆளரவமில்லாத பனிபிரதேசத்தில் வாழ்கிறார். ஹானா தன்னை எல்லாவிதத்திலும் தயார் செய்துகொண்டவுடன், தன்னை ஏடாகூடமாக சிக்க...

சுஜாதா: மறைந்த முன்னோடி-ஒரு நல்ல கட்டுரை. எழுதியவர் ஜெயமோகன்.

 சமீபத்தில் இணையத்தை துழாவிக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட ஒரு நல்ல கட்டுரை. எழுதியவர் ஜெயமோகன். சுஜாதவின் எழுத்து ஆழம் இல்லாதது என்கிறார். நிறைய இடங்களில் சுஜாதாவை ஏராளமாக புகழ்ந்து எழுதினாலும் அவருடைய எழுத்தில் ஆழம் இல்லை எனவே அதற்கு இலக்கியத் தரம்  இல்லை என்கிறார். ஆழமில்லை, ஆழமில்லை என்பவர்கள் அவருடைய நகரம், ரேணுகா, பாலம்  போன்ற   பல்வேறு சிறுகதைகளைப் போல எழுத முடியுமா என்று முயற்சிக்க வேண்டும். என்ன பெரிய இலக்கியம், புடலங்காய். என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான வாசகர்கள் வாசித்து, மகிழ்ச்சியாக பிறருடன் பகிர்ந்து கொள்ளும் படைப்பே சிறந்த இலக்கியம். மற்றதெல்லாம் வெறும் ஜம்பம். சில நாட்களுக்கு முன் ராபர்ட் டௌனி ஜூனியர் நடித்த ட்யு டேட் (Due Date) பார்த்தேன், அதில் ஷேக்ஸ்பியரின் வரிகளை சொல்லிவிட்டு, ராபர்ட் டௌனி அவரை ஹிம்சித்துக் கொண்டிருக்கும் ஜாக் கலிபியானகிஸ் (Zach Galifianakis) என்ற நடிகரிடம் ஷேக்ஸ்பியரைத் தெரியுமா என்று கேட்பார். அதற்கு அந்த காமெடி பீஸ், "ஓ, தெரியுமே, அவர் ஒரு பைரேட் (கடல் கொள்ளைக்காரன்) தானே," என்பான். இலக்கியத்தின் ரீச் அ...

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மோசமான நாடுகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

அமெரிக்காவை சார்ந்த செய்தி நிறுவனமான தாம்சன் ராய்ட்டர்ஸ் (Thomson Reuters) சமீபத்தில் வெளிட்டுள்ள அறிக்கை ஒன்று உலகெங்கிலும் அதிர்ச்சி அலையைக் கிளப்பியுள்ளது. அந்த அறிக்கையின்படி, உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான், இரண்டாவதாக காங்கோ, மூன்றாவதாக பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இருக்கின்றன.  இதில் என்ன அதிர்ச்சி? இந்த வரிசையில் நான்காவது இடத்தில் இருப்பது இந்தியா!!! ஆமாம், இந்தியாவேதான். இது என்ன கூத்து என்று கேட்கலாம். அந்த அறிக்கையில் காரணங்கள் இருக்கின்றன. எந்தெந்த விதத்தில் பாதுகாப்பின்மை இருக்கிறது என்று பார்த்தால், இந்த அறிக்கை அதை பல்வேறுவிதமான அளவீடு (parameters) மூலம் கணக்கிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் : இங்கு வாழும் 11 பெண்களில் ஒருவர் மகப்பேறு காலத்தில் தகுந்த கவனிப்பு இல்லாமல் இறக்கிறார். கிட்டத்தட்ட 87 % பெண்கள் படிப்பில்லாமல் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 80 % பெண்கள் விருப்பமில்லாமல் திருமணத்திற்கு வற்புறுத்தப்படுகிறார்கள். காங்கோ : இங்கு வாழும் பெண்களில் கிட்டத்தட்ட 4 . 5 லட்சம் பெண்கள் ஒவ்வொரு வருடமும் கற்பழிக்கப்படுகிறார...

எலே, நாங்க மதுரக்காரங்கடீ

பில் கேட்ஸ் தன்னுடைய நிறுவனத்தை நிர்வாகிக்க ஒரு புதிய தலைவரைத் தேர்வு செய்ய நினைக்கிறார். வேலை தேடி நேர்முகத் தேர்வுக்கு 5000 பேருக்கு மேல் வரவே, அவர்களை மிகப் பெரிய ஒரு அறையில் சந்திக்கிறார். அவர்களில் ஒருவர் நம் நண்பர் ராமசாமி. பில்  கேட்ஸ் : உங்கள் வருகைக்கு நன்றி. ஜாவா  தெரியாதவர்கள் போகலாம்.  2000 பேர் அறையைவிட்டு வெளியேறுகின்றனர். ராமசாமி  தனக்குள் சொல்லிக் கொள்கிறார்: 'நமக்கு ஜாவா யார் என்று தெரியாது. இருந்தாலும் இருந்துதான் பார்ப்போமே!' பில்  கேட்ஸ் : யாருக்கெல்லாம் 100 பேருக்கு மேல் தலைமை வகித்த அனுபவமில்லையோ அவர்கள் செல்லலாம்.   2000 பேர் வெளியேறுகின்றனர்.  ராமசாமி  தனக்குள் சொல்லிக் கொள்கிறார் 'நாம் யாருக்குமே /எங்குமே தலைமைப் பதவி தாங்கியது இல்லை. இருந்தாலும் என்னதான் ஆகிறது என்று பார்ப்போமே. நமக்குத்தான் ரிஸ்க்   எடுக்கறது  ரஸ்க் சாப்பிடற மாதிரி ஆச்சே  !' பில்  கேட்ஸ் : யாருக்கெல்லாம் மானேஜ்மென்ட் படிப்பில் டிப்ளோமா இல்லையோ, அவர்கள் போகலாம். 500 பேர் வெளியேறுகின்றனர். ராமசாமி  தனக்குள்...

உப்புமா செய்ததற்கு பரிசு ரூ.45 லட்சம் !!

 சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்த சமையல்  போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிளாய்ட் கார்டோஸ் (Floyd Cardoz) என்பவர் உப்புமா செய்ததின் மூலம் பரிசுத் தொகையாக 1 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.45 லட்சம் ) வென்று இருக்கிறார்.  இந்தப் போட்டியில் பங்கேற்றவர்களை உங்கள் நினைவில் நிற்கும் அல்லது நீங்கள் அதிகம் ஈர்க்கப்பட்ட ஒரு உணவு வகையை செய்யுங்கள், அதே சமயம் அது சத்துள்ளதாக இருக்க வேண்டும் என்று நடுவர்கள் சொல்லி இருந்தனர். நம்மூர் உப்புமாவில் பலவகையான காய்கறிகளுடன் ஊட்டச்சத்து மிகுந்த காளானையும் போட்டு  ஒரு புதுவிதமான உப்புமா செய்து முதல் பரிசை வென்றுள்ளார் பிளாய்ட். இவர் நியுயார்க் நகரில் "தபலா" எனப்படும் ஒரு ரெஸ்டாரண்டில் முதன்மை சமையற்காரராக (Chief Chef) பணியாற்றிவருகிறார். வாழ்வுதான். நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்

முன்னேறும் தமிழ்நாடு! சொகுசுக் கப்பல்கள் பற்றி ஒரு பார்வை

2004 ம் ஆண்டில் சிங்கபூரிலிருந்து சூப்பர் ஸ்டார் வர்கோ (SuperStar Virgo) மூலம் மலேஷியா (லங்காவி), தாய்லாந்து (புகெட்-Phuket) ஆகிய ஊர்களைப் பார்த்துவிட்டு திரும்பும்போது நண்பர்கள் எல்லோரும் புலம்பினோம், "இது போன்ற பயண வசதிகள் நம் தமிழ்நாட்டில் எப்போது வருமோ?" என்று.  நடுவில் ஒன்றிரண்டு க்ரூஸ் (சொகுசுக் கப்பல்) நிறுவனங்கள் இந்தியாவில் க்ரூஸ் சேவை ஆரம்பித்துவிட்டு, பின் நம் மத்திய அரசு கொடுத்த குடைச்சல் தாங்காமல் ஓடிவிட்டன. இப்போது சென்னையில் உள்ள அமெட் (AMET) தன்னிலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெட் க்ரூஸ் என்ற நிறுவனம் முதன்முதலாக சென்னையிலிருந்து க்ரூஸ் சேவை ஆரம்பித்திருக்கிறது. மற்றொரு க்ரூஸ் நிறுவனமான ப்லமிங்கோ லைனர்ஸ் (Flemingo Liners) தூத்துக்குடியிலிருந்து இலங்கையில் உள்ள கொழும்புவுக்கு ஸ்கோஷியா ப்ரின்ஸ் (Scotia Prince) என்ற சொகுசுக் கப்பலை இன்று முதல் இயக்குகிறது.  ஸ்கோஷியா ப்ரின்ஸ்: 1044 பயணிகள் பயணிக்கக் கூடிய இந்த சொகுசுக் கப்பல் வாரம் மும்முறை தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே பயணிக்கும். இந்த க்ரூஸில் எல்லாவிதமான வசதிகளும் இருக்கின்றன: நீச்சல் குளம், உணவு ...