Skip to main content

Posts

Showing posts from July, 2010

மாஸ்டரின் 48வது செஞ்சுரி

  சிகரங்கள் தொட்டுவிடும் தூரம்தான் என்று விளையாடி வரும் "மாஸ்டர் ப்ளாஸ்டர்" சச்சினின் நேற்றைய சாதனை 48வது செஞ்சுரி. இவர் இதுவரை அடித்த செஞ்சுரிகள் 94 (ODI யில் அடித்தது 46, டெஸ்ட் போட்டிகளில் அடித்தது 48!) கூடிய விரைவில் செஞ்சுரியில் செஞ்சுரி அடித்துவிடுவார் என நினைகிறேன். இதை சச்சின் செய்து முடிக்க ஆண்டவனை வேண்டுகிறேன். 2008ம் ஆண்டின் முடிவில் சச்சின் 41 செஞ்சுரிகள் (டெஸ்ட் போட்டிகளில்) அடித்திருக்கும் போது  ஆஸ்திரேலியாவின் குரங்கு ரிக்கி பாண்டிங் 37 செஞ்சுரிகள் அடித்திருந்தார். கிட்டத்தட்ட எல்லா ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளிலும் விரைவில் பாண்டிங் சச்சினின் சாதனையை முறியடித்துவிடுவார் என செய்திகள் வந்தன. போதாக்குறைக்கு, அப்போது பாண்டிங்கின் டெஸ்ட் சராசரி 57.2 என்பது சச்சினின் சராசரியான 54.3 விட அதிகமாக இருந்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் சச்சின் 48 செஞ்சுரிகள் அடித்துவிட, குரங்கு பாண்டிங் இன்னும் 39 இல்தான் இருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் சச்சின் 1219 ரன்கள் அடித்து (12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே) சராசரியை 55.9 க்கு கொண்டு சென்றுவிட்டார்.பாண்டிங் சராசரி இப்போது 54.7...

(Deja Vu) டேஜா வூ

டேஜா வூ என்ற ஆங்கில சொல்லுக்கு அர்த்தம் ஒரு நிகழ்வு நம்மைச் சுற்றியோ, அல்லது நமக்கே நடக்கும்போதோ நம்மில் பலருக்கு இந்த நிகழ்வு/அனுபவம் ஏற்கனவே நிகழந்த/அனுபவித்த ஒன்று போல இருக்கிறதே என்றுதோன்றும் ஒரு விஷயம். என் நண்பர் நாகுவுக்கு இந்த டேஜா வூ சற்று வேறுமாதிரி நிகழ்கிறது. அவருக்கு சமீப காலமாக சில ஆங்கிலப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம் இந்த படத்தின் கதை அப்படியே எழுத்தாளர் சுஜாதாவின் கதையை சுட்ட மாதிரி இருக்கிறதே என்ற உணர்வுதான் அது. சில நாட்களுக்கு முன், Shutter Island என்ற ஆங்கில படத்தைப் பாத்துவிட்டு இதன் கதை அப்படியே சுஜாதா எழுதி 1971 இல் வெளிவந்த "ஒரு அராபிய இரவு" என்ற சிறுகதை போலவே உள்ளது என்றார். பிறகு, ஸ்டார் மூவீஸ் சானலில் The Day The Earth Stood Still என்ற படத்தைப் பார்த்து விட்டு, இதன் கதை சுஜாதா எழுதி (வருடம் ஞாபகம் இல்லை) வெளிவந்த "திசை கண்டேன், வான் கண்டேன்" என்ற கதையைப் போலவே உள்ளது என்றார். இதைப் போன்ற டேஜா வூ வரக் காரணம், நண்பர் நாகுவுக்கு (என்னைப் போலவே) அறிவுஜீவி எழுத்தாளர் சுஜாதா மேலிருக்கும் ஒரு அபரிமிதமான அபிமானம், மரியாதை. Shutter Island ...

தமிழில் பதிய....

என் நண்பர் சுவாமி என்கிற சிவா என்னுடைய blog எழுதுவது பற்றிய பதிவைப் படித்து விட்டு, நிறைய பேர் தமிழ் மொழியில் பதிவு செய்ய கஷ்டப்படுகிறார்கள் அது எப்படி என்று சொல்லிவிடுங்கள் எனக் கேட்டிருந்தார். blog பதிவுக்கு முதல் தேவை ஒரு ஜி-மெயில் ஐடி, பிறகு ஒவ்வொரு முறை நீங்கள் பதிய நினைக்கும் போதும் நியூ போஸ்ட் என்பதைக் கிளிக்கினால் ஒரு விண்டோ திறக்கும். அதில் நீங்கள் தமிழில்  பதிவு செய்ய வேண்டுமெனில் அந்த விண்டோவின் தலையில் இருக்கும் பல்வேறு பட்டன்களில் "அ" என்ற எழுத்து இருக்கும். தமிழில் டைப் செய்யவேண்டிய வார்த்தை 'vanakkam" என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்த வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்பி விட்டு, அதை மௌஸ் மூலம் செலக்ட் செய்துவிட்டு பின் அந்த "அ" பட்டனை அழுத்தினால் அது தமிழ் வணக்கமாக மாறி விடும். இது முதன்முதலில் நீங்கள் தமிழில் டைப்பும் போது மட்டும். இதன் பிறகு எந்த வார்த்தையை வேண்டுமானாலும் ஆங்கிலத்தில் டைப்பி விட்டு பிறகு CTRL G அழுத்தினால் அது தமிழ் வார்த்தையாக மாறிவிடும்.  இதில் சில நடைமுறை கஷ்டங்கள் உள்ளன. உதாரணமாக நீங்கள் சிங்கப்பூர் என தமிழில் டைப் செய்ய...

சச்சின் புத்தகத்தில் ரத்தம் இல்லை:

  "டெண்டுல்கர் ஓபஸ்"  புத்தகத்தில், எனது ரத்தம் இடம் பெற்றிருப்பதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை,'' என, சச்சின் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகின் "சாதனை மன்னன்' இந்தியாவின் சச்சின். டெஸ்ட் (13, 539) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17, 598) அதிக ரன் குவித்துள்ளார். இவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரேகான் மீடியா நிறுவனம் வெளியிட உள்ளது."டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் வரும் 2011ல் உலககோப்பை போட்டி (50 ஓவர்) துவங்குவதற்கு முன், பிப்ரவரி மாதம் வெளிவர உள்ளது. 37 லட்சம்: "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் மொத்தம் 852 பக்கங்கள் கொண்டது. 37 கி.கி., எடை கொண்டது. இதன் விலை 37 லட்சம் ரூபாய். மொத்தம் 10 பிரதிகள் வெளிவர உள்ளன. இதற்கான முன்பதிவும் முடிந்து விட்டது. இது தவிர, 1. 50 லட்சம், 1 லட்சம் ரூபாயிலும், 10 ஆயிரம், 12 ஆயிரம் ரூபாயிலும் இப்புத்தகம் விற்பனை செய்யப்பட உள்ளது. சச்சின் மறுப்பு: இப்புத்தகத்தின் கையெழுத்துப் பக்கத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெற்றிருக்கும் என கிரேகான் மீடியா நிறுவனத்...

சச்சினின் "ரத்த" சுயசரிதம்

இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் ரத்தத்துடன் வெளிவர உள்ளது "டெண்டுல்கர் ஓபஸ்' (Tendulkar Opus) என்ற அவரது சுயசரிதை புத்தகம். சர்வசேத கிரிக்கெட் அரங்கில் சாதனை வீரராக வலம் வருகிறார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் (13, 455) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17598) அதிக ரன் குவித்து சாதனை படைத்துள்ளார்.  கிரிக்கெட் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சினின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரஹான் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) துவங்குவதற்கு முன், பிப்ரவரி மாதம் (2011) வெளியிடப்பட உள்ளது.  தனிச்சிறப்பு: கையெழுத்துப் பக்கத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெற்றிருப்பது தான் இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு. காகிதக் கூழில், அவரது ரத்தம் தோய்த்து வெளிவர உள்ளது. மொத்தம் 852 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் 37Kg  எடை கொண்டது. இதன் விலை 37 லட்சம் ரூபாய். மொத்தம் 10 பிரதிகள் வெளிவர உள்ளன. இதற்கான முன் பதிவும் முடிந்து விட்டது. ரத்தத்தின் ரத்தங்கள்: சச்சினின் ரத்தத்தின் ரத்தங்களாக க...

Blog பதிவு அவ்வளவு கடினமான வேலை அல்ல

சந்தடி சாக்கில் அப்படியே என் படத்தையும் போட்டு விடலாம். என் நண்பர் ரவி, கொல்கத்தாவிலிருந்து நேற்று என்னுடன் பேசும் போது, என் பதிவுகளைப் பற்றி சிலாகித்துவிட்டு, "அது எப்படி காலை 8 மணிக்கு உன்னால் அவ்வளவு நீளமான தமிழ் விமரிசனங்களை எல்லாம் எழுத முடிகிறது?" என்று ஆர்வமாகக் கேட்டார். நண்பரே, blog பதிவு எனக்கு ஒரு creative வடிகால். நாள் முழுக்க அலுவலக வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பும் போது, தப்பித் தவறி கூட வீட்டிலிருந்து கொண்டு எந்த அலுவலக வேலைகளையும் நான் செய்வதில்லை. அதே போல, என்னுடைய நிறைய பதிவுகளை முழுக்க, முழுக்க நானே தயாரிப்பதில்லை (தட்டச்சுவதில்லை). எப்போதெல்லாம் சுவாரசியமான பதிவுகளைப் பார்க்கிறேனோ, அப்போதே அதை draft ஆக சேமித்து விடுகிறேன். பிறகு நேரம் கிடைக்கும் போது, அதை தூசு தட்டி, கொஞ்சம் நகாசு வேலைகளையும் (என் பங்குக்கு) சேர்த்து அதை அப்படியே பதிந்து விடுகிறேன். அந்தப் பதிவு நேரம் காலை 8 மணியாக இருக்கலாம், அதற்காக நான் 8 மணிக்குத்தான் அதை நான் தயார் செய்கிறேன் என்று அர்த்தமல்ல. பெரும்பாலான சுவாரசியமான தகவல்கள் ஏராளமான வலைத் தளங்களில் கொட்டிக் கிடக்கின...

அல்லலுறும் ஆண்களுக்கு Golf மன்னன் Tiger Woods அறிவுரை:

Tiger Woods-பொன் மொழிகள்  அனுப்பி வைத்து உதவிக்கரம் நீட்டிய இனிய நண்பர் நாகுவுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

INCEPTION-ஆங்கிலத் திரைப்படம் விமர்சனம்

இன்சப்ஷன் என்ற வார்த்தைக்கு ஆரம்பம் என்பது பொருள். இங்கு அதை சற்று வேறுவிதமாக உபயோகப்படுத்தியுள்ளனர். Christopher Nolan ஒரு மிகத் திறமையான இயக்குனர் என்பது அவருடைய முதல் படமான "Memento" மூலம் நிரூபணமான ஒரு விஷயம். பின்னாளில் இந்தப் படத்தையே கொஞ்சம் உல்டா செய்து "கஜினி" என்ற பெயரில் வெளியிட்டு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் ஏகப்பட்ட பணம் பார்த்தார். நம் தமிழ் இயக்குனர்களிடம் ஒரு பழக்கம் தொன்று தொட்டு இருக்கிறது; எந்தப் படத்தை/நாவலைத்  தழுவி எடுத்தாலும் அதை சாகும் வரை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். பாரதி ராஜா "நாடோடித் தென்றல்" என்று ஒரு படம் எடுத்தார். படம் ஒன்றும் பெரிய வெற்றி இல்லை என்றாலும், இதன் கதை, சுஜாதா எழுதி குமுதத்தில் முதலில் "ரத்தம் ஒரே நிறம்" என்ற பெயரிலும், பின்னர், "கருப்பு, சிவப்பு வெளுப்பு" என்ற பெயரிலும் வந்த கதையின் அப்பட்டமான காப்பி. இந்த லட்சணத்தில், அந்தப் படத்தின் கதை இளைய ராஜா என்று டைட்டிலில் போடுவார்கள்.  இதே போல சத்யராஜ் நடித்து "ஏர்போர்ட்" என்று ஒரு படம். மலையாள இயக்குனர் ஜோஷி இயக்கத்தில் 1993 ம் வருடம் ...

களவாணி-விமர்சனம்

 நீங்கள் வெகு காலமாக தியேட்டர் பக்கமே சென்றதில்லை என்றாலோ, தமிழ் சினிமா பார்த்து ரொம்ப நாளாகி விட்டது என்றாலோ, இப்பொது வரும் (பெரும்பாலான) தமிழ் படங்கள் குப்பைதான் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தாலோ, நீங்கள் கண்டிப்பாக "களவாணி" படத்தை பார்க்க வேண்டும். என்ன ஒரு படம்! என்ன ஒரு அறிமுக இயக்குனர்! கிராமத்து படம் என்றாலே மதுரைதான் பின்னணி, அரிவாள், கம்பு, அடிதடி, ரத்தம், களேபரம் என்ற cliche யை மாற்றி ரொம்பவும் வித்தியாசமான ஒரு பொழுதுபோக்கு படத்தை தந்ததற்கு இயக்குனர் சற்குணம் அவர்களுக்கு நன்றி. பச்சைபசேல் என்று இதைப் போல ஒரு கிராமத்தைப் பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டன. கதாநாயகன் விமல், கதாநாயகி ஓவியா, சரண்யா, இளவரசு என்று அதிகம் நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்களை வைத்து இவ்வளவு ரசிக்கும்படி செய்த இயக்குனருக்கு ஒரு "ஓ," இல்லை, இல்லை, ஒரு "ஓஹோ" போடவேண்டும். உரம், விவசாயம், இடையே காதல் என்று அழகான கதையும் அற்புதமான பிரசன்டேஷனுமாக வந்திருக்கிறார் புது இயக்குனர் சற்குணம்! துபாய்க்கார அப்பாவுக்கு துடுக்கான பிள்ளை விமல். வெட்டி வேலை, வீம்பு சண்டை, சாயங்கால சர...

International Chess Day (உலக சதுரங்க தினம்)

உலக சதுரங்க தினமான இன்று (20 ஜூலை ) செஸ் எனப்படும் சதுரங்கம் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்: குப்தர்கள் ஆட்சி காலமான ஆறாம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் முதன் முதலில் செஸ் தோன்றியதற்கான ஆதாரங்கள் உள்ளன. சத்ரங் என்ற பெயரில் தோன்றிய இந்த விளையாட்டு மெதுவாக evolve ஆகி  9 ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் நுழைந்தது. ரஷ்யர்கள் இந்த விளையாட்டை பெரிதும் விரும்பி, மிகத் தீவிரமான முறையில் விளையாடத் துவங்கினர். 15 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் (Europe) காலூன்றியது. அங்கு பல்வேறு மாறுதல்களுக்கு பிறகு, செஸ் உலகமெங்கும் பரவியது. செஸ் சீனாவில் தோன்றியது ஒரு தரப்பினர் சொன்னாலும், அது இந்தியாவில் தான் தோன்றியது என்பதற்கு சரித்திர ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன.   15 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த விளையாட்டில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. முதன் முதலில் செஸ் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கான் புத்தகம் எழுதிய பெருமை லூயிஸ் ராமிரேஸ் (Luis Ramirez) என்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரையே சாரும். அவருடைய Repetition of Love and the Art of Playing Chess எ...

ராவண் Vs ராவணன்

மணி ரத்னம் இதுவரை இயக்கிய படங்களில் என்னுடைய முதல் மதிப்பெண் மௌன ராகம் படத்திற்குத்தான். கணவன்-மனைவி இடையே நடக்கும் ஒரு மெல்லிய போராட்டத்தை மிக அழகாக, ரசிக்கும்படி சொல்லியிருப்பார். நிறையபேர் அவருடைய Magnum Opus நாயகன் படம்தான் என்பார்கள். உண்மை. ஆனால் அது God Father படத்தின் இன்ஸ்பிரேஷன் என்பதால் அதை அவருடைய "பெஸ்ட் ஒரிஜினல் மூவி" என்ற வரிசையில் சேர்க்ககூடாது. என் நண்பன் நாகு, ராவணன் படத்தைப் பார்த்துவிட்டு "ஒரு ராம நாராயணன் படத்திற்கு எப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்  போவாயோ அதே போல இந்த படத்திற்கும் போ, உன்னால் ரசிக்க முடியும்," என்று சொன்னபோது, என் மனதில் இரண்டு எண்ணங்கள் ஓடின. ஒன்று, நான் ராம நாராயணன் படங்களை இது வரை பார்த்ததில்லை. இனிமேலும் பார்க்கும் ஐடியா ஏதும் இல்லை. இரண்டு, அவ்வளவு மட்டமாகவா இந்த படம் இருக்கும்? இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே ஏராளமான விமரிசனங்கள் வந்துவிட்டதால் நான் ஒரு சிறிய வித்தியாசத்தை செய்யலாம் என நினைத்தேன்; இந்த படத்தின் ஹிந்தி மற்றும் தமிழ் வடிவங்களைப் பார்த்துவிட்டு அவை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் என்ன என்று தோன்றி...

நண்டோஸ் பெரி-பெரி சிக்கன்

  சில வருடங்களுக்கு முன் நண்பன் ஷங்கர் Wales சென்றுவிட்டு திரும்பியபோது, அங்கு Nando's Chicken என்கிற போர்ச்சுகீஸ் (Portugese) வகை grilled chicken சாப்பிட்டதாகச் சொல்லி அதனுடைய தனித்துவமான (unique) சுவையைச் சொல்லி சொல்லி மாய்ந்து போனான். புதிதாக சந்தைக்குள் வரும் பிசினஸ் ஐடியாவையெல்லாம் முயன்று பார்க்க நினைக்கும் என்னிடம் நண்டோஸ் பெரி-பெரி சிக்கனின் சென்னை franchise உரிமையை முயன்று பார்க்கச் சொன்னான். அதற்கு முன் அந்த பெரி-பெரி சிக்கனில் அப்படி என்னதான் இருக்கிறது என்று முயன்று பார்க்கலாம் என்று நினைத்தேன். இந்தியாவில் நண்டோசின் ஒரே ஒரு கிளை மும்பையில் மட்டுமே உள்ளது எனத் தெரிந்தது. சரி, மும்பை செல்லும் போது முயற்சிக்கலாம் என விட்டுவிட்டேன். பிறகு சில மாதங்களில் கோலாலம்பூர் (மலேசியா) சென்றபோது, அங்குள்ள KLCC எனப்படும் ஷாப்பிங் மாலில் நண்டோசின் பெரி-பெரி சிக்கன் கடையைப் பார்த்தவுடன்  குஷியாகி அங்கு சென்றபோது மறக்கமுடியாத culinary experience கிடைத்தது. பெரி-பெரி சிக்கனின் வியாபார ரகசியமே அதனுடைய நாக்கைச் சப்புகொட்ட வைக்கும் பெரி-பெரி சாஸ் (sauce) தான். அது என்...

தாய்லாந்தின் மொழி வெறி

   (நான் பட்டயாவில் தங்கியிருந்த Furama Jomtien Beach Resort முன் இருந்த நம் பிரம்மாவின் அழகான சிலை. இதை அவர்கள் புத்தர் என்கிறார்கள்) என்னுடைய சமீபத்து பதிவு ஒன்றில் தமிழ் நம்மீது திணிக்கபடுகிறது என்று குறை கூறியிருந்தேன். அதை இப்போது, என்னுடைய தாய்லாந்து பயணத்திற்கு பிறகு, தவறு என்று உணருகிறேன். தாய்லாந்து நாட்டின் தலைநகரான  பாங்காக் நகரம் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் பார்த்தபோது இருந்ததைவிட பல மடங்கு முன்னேறியுள்ளது. அருமையான சாலைகள், வசதியான மேம்பாலங்கள், நல்ல தண்ணீர் என்று பல்வேறு வகையிலும் முன்னேற்றம். ஆனால் எனக்கு மிகவும் எரிச்சலூட்டிய விஷயம் ஒன்று இருக்கிறதென்றால் அது தாய்லாந்து நாட்டின் மொழி வெறி. எல்லா இடங்களிலும் தாய் மொழி (அதாவது தாய்லாந்து மொழி) தவிர வேறு எதுவும் இல்லை. சாலை மற்றும் கடைகளின் பெயர்கள் உட்பட எல்லாமே அவர்களின் மொழி மட்டுமே. ஒரு இடத்தில கூட ஆங்கில மொழியை நாங்கள் பார்க்கவில்லை. தாய் மொழி முக்கியத்துவம் புரிகிறது, அதற்காக வெளிநாட்டு பயணிகள் புரிந்து கொள்ள ஏதுவாக ஒரு இடத்தில கூட ஆங்கில மொழி இல்லாமலா செய்ய வேண்டும்? இரண்டாவது டாக்சி ஓட்டுனர்...

யுனிவர்ஸல் ஸ்டுடியோஸ், சிங்கப்பூர்

சிங்கப்பூர் கிட்டத்தட்ட எனக்கு இரண்டாம் வீடு (கவனிக்கவும், இரண்டாம் வீடுதான், சின்ன வீடல்ல) ஆகிவிட்ட நிலையில், ஒவ்வொரு முறையும் என்னுடன் யாராவது ஒரு நண்பரை அழைத்துச் செல்ல விழைகிறேன். இந்த முறை என்னுடன் வந்தது என் நண்பன் சாயி சத்யன். எப்படியிருந்தாலும் அங்கு என் நண்பன் ரவி இருப்பதால் அலுவலக வேலைகளை முடித்தவுடன் பொழுது போக எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த  முறை அங்கு சென்றபோது யுனிவர்ஸல் ஸ்டுடியோஸ் சென்று பார்த்தால் என்ன என்று தோன்றியது. எனக்கு Tom & Jerry க்குப் பிறகு வந்த கார்டூன்களுடன் அதிக பரிச்சயம் இல்லாத காரணத்தினால் அங்கு சென்றால் பொழுது போகுமா என்ற சந்தேகம் இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் சென்றது உண்மையிலேயே நல்லதுதான். நிறைய ஆங்கிலப் படங்களை தயாரித்து வெளியிட்டுள்ள யுனிவர்ஸல் ஸ்டுடியோஸ் தீம் பார்க் ஒன்றை 1990 ம் ஆண்டு, அமெரிக்காவில் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள ஆர்லோண்டோவில் திறந்தது. இந்த தீம் பார்க்கில் யுனிவர்ஸல் ஸ்டுடியோஸ் (இனி யு.எஸ்) தயாரித்து வெளியிட்ட படங்களின் பின்னணியில் எல்லா கேளிக்கை விளையாட்டுகளையும் அமைத்து பெரும் வெற்றி கண்டது. ஒரு வேளை திரைப் பட தய...