Skip to main content

நண்டோஸ் பெரி-பெரி சிக்கன்

 


சில வருடங்களுக்கு முன் நண்பன் ஷங்கர் Wales சென்றுவிட்டு திரும்பியபோது, அங்கு Nando's Chicken என்கிற போர்ச்சுகீஸ் (Portugese) வகை grilled chicken சாப்பிட்டதாகச் சொல்லி அதனுடைய தனித்துவமான (unique) சுவையைச் சொல்லி சொல்லி மாய்ந்து போனான். புதிதாக சந்தைக்குள் வரும் பிசினஸ் ஐடியாவையெல்லாம் முயன்று பார்க்க நினைக்கும் என்னிடம் நண்டோஸ் பெரி-பெரி சிக்கனின் சென்னை franchise உரிமையை முயன்று பார்க்கச் சொன்னான். அதற்கு முன் அந்த பெரி-பெரி சிக்கனில் அப்படி என்னதான் இருக்கிறது என்று முயன்று பார்க்கலாம் என்று நினைத்தேன். இந்தியாவில் நண்டோசின் ஒரே ஒரு கிளை மும்பையில் மட்டுமே உள்ளது எனத் தெரிந்தது.


சரி, மும்பை செல்லும் போது முயற்சிக்கலாம் என விட்டுவிட்டேன். பிறகு சில மாதங்களில் கோலாலம்பூர் (மலேசியா) சென்றபோது, அங்குள்ள KLCC எனப்படும் ஷாப்பிங் மாலில் நண்டோசின் பெரி-பெரி சிக்கன் கடையைப் பார்த்தவுடன்  குஷியாகி அங்கு சென்றபோது மறக்கமுடியாத culinary experience கிடைத்தது. பெரி-பெரி சிக்கனின் வியாபார ரகசியமே அதனுடைய நாக்கைச் சப்புகொட்ட வைக்கும் பெரி-பெரி சாஸ் (sauce) தான். அது என்ன பெரி பெரி என்பவகர்களுக்கு இதோ ஒரு சின்ன, சுவையான அறிமுகம்:

பெரி-பெரி ஒரு மிகச் சிறிய மிளகாய். இதன் பூர்விகம் தென் ஆப்ரிக்கா என்று ஒரு செய்தி. இந்த சிறிய மிளகாய் பார்ப்பதற்கு பிலி-பிலி என்ற பறவையின் கண் போல இருந்ததால் அந்த பெயர் என்று சொல்லுவார்கள். பின்னாளில் இந்த மிளகாய் போர்ச்சுகீஸ் வந்த போது பிலி-பிலி என்பதை அவர்கள் பெரி-பெரி என்று உச்சரிக்க அதுவே அதன் பெயராகிவிட்டது. இந்த சிறிய மிளகாயில் ஏகப்பட்ட காரம் இருப்பதை உணர்ந்த போர்சுகீஸ் மக்கள் அதை தாராளமாக உணவில் சேர்க்க தொடங்கினர். போர்சுகீஸ் உணவு கிட்டத்தட்ட நம்முடைய இந்திய உணவைப் போலவே காரம் சற்று அதிகமாகவே இருக்கும்.

1900 களின் ஆரம்பத்தில் போர்சுகீஸ் மக்கள் கூட்டம் கூட்டமாக வேலை செய்யும் போது திறந்த வெளிகளில் மணல் அடுப்பின் மேல் கோழியை சுட்டு அதன் மேல் பெரி-பெரி மிளகாயின் கலவையை தடவி பரிமாறிய போதுதான்  பெரி-பெரி சிக்கன் உதயமானது. இந்த மிளகாய் கலவை பின்னாளில் ஒரு பெரும் வியாபார வெற்றி பெற்றது. இதன் கலவையில் என்னென்ன உள்ளது என்பது இன்று வரை கோகோ-கோலாவின் formula வைப் போல பெரும் ரகசியமாகவே விளங்குகிறது.

1987 இல் முதல் பெரி-பெரி சிக்கன் கடை ஜொஹன்னஸ்பர்க் நகரில்  சிக்கன் லான்ட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு இதுவே நாண்டோஸ் சிக்கன் (Nando's Chicken) என்று பெயர் மாற்றம் பெற்றது, காரணம் இதன் உரிமையாளர் பெயர் Fernando.


இன்று உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்திருக்கும் இந்த பெரி-பெரி சிக்கன் KFC மற்றும் McDonalds போல fast food  வகையைச் சேராது. இதன் கோழிகள் செயற்கையாக தயாராவதில்லை. முழுக்க, முழுக்க க்ரில்லிங் முறையில் கோழி சுடப்படுவதால் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கப்படுவதில்லை. எனவே உடலுக்கும் தீங்கு விளைவிப்பதில்லை என்று சொல்லுகிறார்கள்.

ஓகே, ஆரம்பத்தில் நண்பன் ஷங்கர் எனக்கு நண்டோஸ் சிக்கன் franchise இந்தியாவில் ஆரம்பிக்க ஐடியா கொடுத்ததை சொல்லி இருந்தேன் அல்லவா? அதன் மாஸ்டர் francise மும்பையில் இருப்பதால் அவர்களுக்கு என் விருப்பத்தை எழுதி சென்னையில் அதன் franchise ஆரம்பிக்கும் விருப்பத்தை தெரிவித்து அதற்கு எவ்வளவு கட்டணம் எனக் கேட்டிருந்தேன். சில்லரையாக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் ஆகும் என உடனே பதில் வந்தது. என்னிடம் சில்லரையாக சுமார் ஒரு கோடியே நாற்பத்தொன்பது லட்சம் கம்மியாக இருக்கிறது என்பதால், பெரி-பெரி ஸாசை  சாப்பிட்டு இதுபோல அவ்வபோது blog பதிவு மட்டும் செய்யலாம் என விட்டுவிட்டேன்.

மும்பை அல்லது சிங்கப்பூர் அல்லது கோலாலம்பூர் செல்லும் நண்பர்கள் இந்த பெரி-பெரி சிக்கனைச் சுவைத்து மகிழலாம். அல்லது, குறைந்தபட்சம் பெரி-பெரி ஸாஸ் பாட்டில்களில் விற்கப்படுகிறது. இதில் அசைவ சமாசாரம் ஏதுமில்லை, வெறும் மிளகாய் கலவைதான். முயன்று பாருங்கள்.

Comments

Unknown said…
ellam sari. padaththula pottirukkaraa maathiriyae chappidanumaa??

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...