Skip to main content

INCEPTION-ஆங்கிலத் திரைப்படம் விமர்சனம்

இன்சப்ஷன் என்ற வார்த்தைக்கு ஆரம்பம் என்பது பொருள். இங்கு அதை சற்று வேறுவிதமாக உபயோகப்படுத்தியுள்ளனர்.

Christopher Nolan ஒரு மிகத் திறமையான இயக்குனர் என்பது அவருடைய முதல் படமான "Memento" மூலம் நிரூபணமான ஒரு விஷயம். பின்னாளில் இந்தப் படத்தையே கொஞ்சம் உல்டா செய்து "கஜினி" என்ற பெயரில் வெளியிட்டு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் ஏகப்பட்ட பணம் பார்த்தார். நம் தமிழ் இயக்குனர்களிடம் ஒரு பழக்கம் தொன்று தொட்டு இருக்கிறது; எந்தப் படத்தை/நாவலைத்  தழுவி எடுத்தாலும் அதை சாகும் வரை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

பாரதி ராஜா "நாடோடித் தென்றல்" என்று ஒரு படம் எடுத்தார். படம் ஒன்றும் பெரிய வெற்றி இல்லை என்றாலும், இதன் கதை, சுஜாதா எழுதி குமுதத்தில் முதலில் "ரத்தம் ஒரே நிறம்" என்ற பெயரிலும், பின்னர், "கருப்பு, சிவப்பு வெளுப்பு" என்ற பெயரிலும் வந்த கதையின் அப்பட்டமான காப்பி. இந்த லட்சணத்தில், அந்தப் படத்தின் கதை இளைய ராஜா என்று டைட்டிலில் போடுவார்கள். 

இதே போல சத்யராஜ் நடித்து "ஏர்போர்ட்" என்று ஒரு படம். மலையாள இயக்குனர் ஜோஷி இயக்கத்தில் 1993 ம் வருடம் வந்தது. இது சுஜாதா எழுதி மிகப் பிரபலமடைந்த "ஜே.கே" என்ற நாவலின் அப்பட்டமான காப்பி. பாவம் சுஜாதா இதைப் பற்றி வாசகர்கள் கேட்டபோது பெருந்தன்மையாக, "குறைந்தபட்சம், இந்தப் படம் ஜே.கே நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என டைட்டிலில் ஒரு கார்டு போட்டிருக்கலாம்," எனச் சொல்லி அதோடு அதை விட்டுவிட்டார்.

இதைப் போல ஏராளமான உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். ஓகே, இப்போது, இன்சப்ஷன்:

தொழில் போட்டியில் எதிராளியின் தொலைபேசியை ஒட்டு கேட்டபது, அவனுடைய அலுவலகத்தில் தன்னுடைய ஆளை வைத்து வேவு பார்ப்பது இதெல்லாம் பழைய ஸ்டைல். எதிராளியின் கனவில் புகுந்து அவன் செய்கிறான், என்ன நினைக்கிறான் என்று தகவல்களை சேர்த்து அதை அவனுக்கெதிராக உபயோகித்து வெற்றி பெற நினைக்கும் ஒருவன் (Ken Watanabe), அவனுக்கு உதவி செய்தால் தன் மீது இருக்கும் (தேவையிலாத) பழி நீங்கி, மறுபடியும் தன் குழந்தைகளுடன் ஒன்று சேரலாம் என நினைக்கும் கதாநாயகன் (Leonardo Di Capiro), அவனுக்கு உதவி செய்ய நினைத்து சிக்கலில் சிக்கிக் கொள்ளும் அவனுடைய நண்பர்கள் என்று ஆரம்பிக்கும் கதை எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் பயணித்து அட்டகாசமான க்ளைமாக்சில் முடிவதுதான் இன்சப்ஷன் படத்தின் மிகப் பெரிய பலம்.

இயக்குனர் Christopher Nolan மிக அருமையாக திரைக்கதை அமைத்திருப்பது படத்தின் பெரும்பகுதி குழப்பமில்லாமல் நகர உதவுகிறது. சத்யம் தியேட்டரில் அதிசயமாக ஆங்கில சப்-டைட்டில் போட்டு படத்தை மேலு ரசிக்கும் செய்து விட்டார்கள். அதிரடி பின்னணி இசையில் Hans Zimmer சும்மா புகுந்து விளையாடுகிறார். Wally Pfister இன் ஒளிப்பதிவு மிகவும் அற்புதமாக இருக்கிறது. கனவுக் காட்சிகளில் வித்தியாசமான லைட்டிங் கொடுத்து, மற்ற காட்சிகளில் திரைகதையின் வேகத்துக்கு ஈடு கொடுத்து காமிரா பயணிக்கிறது.

பெரும்பாலான கனவுக் காட்சிகளில் CG உதவி இல்லாமல் அரங்கம் (setting) அமைத்து மிகவும் மெனக்கெட்டிருக்கிரார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் இந்த படம் ஒரு technical/technological marvel என்பதில் வியப்பில்லை.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்