இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் ரத்தத்துடன் வெளிவர உள்ளது "டெண்டுல்கர் ஓபஸ்' (Tendulkar Opus) என்ற அவரது சுயசரிதை புத்தகம். சர்வசேத கிரிக்கெட் அரங்கில் சாதனை வீரராக வலம் வருகிறார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் (13, 455) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17598) அதிக ரன் குவித்து சாதனை படைத்துள்ளார்.
கிரிக்கெட் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சினின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரஹான் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) துவங்குவதற்கு முன், பிப்ரவரி மாதம் (2011) வெளியிடப்பட உள்ளது.
தனிச்சிறப்பு: கையெழுத்துப் பக்கத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெற்றிருப்பது தான் இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு. காகிதக் கூழில், அவரது ரத்தம் தோய்த்து வெளிவர உள்ளது. மொத்தம் 852 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் 37Kg எடை கொண்டது. இதன் விலை 37 லட்சம் ரூபாய். மொத்தம் 10 பிரதிகள் வெளிவர உள்ளன. இதற்கான முன்
பதிவும் முடிந்து விட்டது.
பதிவும் முடிந்து விட்டது.
ரத்தத்தின் ரத்தங்கள்: சச்சினின் ரத்தத்தின் ரத்தங்களாக கருதப்படும் ஏழை ரசிகர்களால் இப்புத்தகத்தை வாங்க முடியாது. இருப்பினும் 1 லட்சம் மற்றம் 1.50 லட்சம் ரூபாய்களிலும் இப்புத்தகம் வெளியிடப் பட்டுள்ளது. ஆனால் இவற்றில் சச்சினின் ரத்தம் இடம் பெறாது. கையெழுத்து மட்டுமே இடம் பெறும். இது தவிர, 10 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய்களிலும் இப்புத்தகத்தை வெளியிட கிரஹான் மீடியா ஏற்பாடு செய்து வருகிறது. அவரது டி.என்.ஏ., பற்றி தகவல்களும் இதில் இடம் பெற உள்ளன. இதற்காக அவரது உமிழ்நீர் கேட்கப்பட்டு உள்ளது.
புதுமை: இது குறித்து கிரஹான் மீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் போவ்லர் கூறுகையில்,"" கிரிக்கெட் அரங்கின் கடவுளாக வர்ணிக்கப்படுகிறார் சச்சின். இதனால் "டெண்டுல்கர் ஓபஸ்' புத்தகத்தில் புதுமை செய்ய நினைத்தோம். அவரது ரத்தம் தோய்ந்த பக்கம் இடம் பெறுவதால், இப்புத்தகம் தனிச்சிறப்பை பெறுகிறது. உலககோப்பை தொடரை ஒட்டி இப்புத்தகத்தை வெளியிட திட்டமிட்டுள் ளோம்,'' என்றார்.
இதற்கு முன்.. : கிரிக்கெட் கடவுள் சச்சினின் சுயசரிதை புத்தகம் 37 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
ஆனால் இதற்கு முன் மைக்கேல் ஏஞ்சலோ என்ற புத்தகம் 49 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ள வரலாறு உள்ளது. கலைத்திறனை வெளிப்படுத்தும் இப்புத்தகம் கைகளினால் தயாரிக்கப்பட்டது. 30 கிலோ எடை கொண்டது. மொத்தம் 33 பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட்ட இப்புத்தகம் மார்பிள் மற்றும் வெல்வெட் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது. நியூயார்க் பொது நூலகத்தில் இது இடம் பெற்றுள்ளது. இதனை குரூப்போ எப்.எம்.ஆர்., நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் இந்த மாதிரி ரத்த சமாசாரங்களை ஏன் செய்ய வேண்டும் என controversy உடனேயே கிளம்பி விட்டது. அட விடுங்கப்பா, அந்த 10 பிரதிகள் விற்று வரும் பணத்தை தரும காரியங்களுக்கு தரப் போவதாக சச்சினே சொல்லிவிட்டாரே.
நன்றி: தினமலர்.காம்
நன்றி: தினமலர்.காம்
Comments