Skip to main content

சச்சின் புத்தகத்தில் ரத்தம் இல்லை:

 
"டெண்டுல்கர் ஓபஸ்"  புத்தகத்தில், எனது ரத்தம் இடம் பெற்றிருப்பதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை,'' என, சச்சின் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகின் "சாதனை மன்னன்' இந்தியாவின் சச்சின். டெஸ்ட் (13, 539) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17, 598) அதிக ரன் குவித்துள்ளார். இவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரேகான் மீடியா நிறுவனம் வெளியிட உள்ளது."டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் வரும் 2011ல் உலககோப்பை போட்டி (50 ஓவர்) துவங்குவதற்கு முன், பிப்ரவரி மாதம் வெளிவர உள்ளது.
37 லட்சம்:
"டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் மொத்தம் 852 பக்கங்கள் கொண்டது. 37 கி.கி., எடை கொண்டது. இதன் விலை 37 லட்சம் ரூபாய். மொத்தம் 10 பிரதிகள் வெளிவர உள்ளன. இதற்கான முன்பதிவும் முடிந்து விட்டது. இது தவிர, 1. 50 லட்சம், 1 லட்சம் ரூபாயிலும், 10 ஆயிரம், 12 ஆயிரம் ரூபாயிலும் இப்புத்தகம் விற்பனை செய்யப்பட உள்ளது.
சச்சின் மறுப்பு:
இப்புத்தகத்தின் கையெழுத்துப் பக்கத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெற்றிருக்கும் என கிரேகான் மீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் போவ்லர் தெரிவித்திருந்தார். ஆனால், இதை அதிரடியாக மறுத்துள்ளார் சச்சின்.
இது குறித்து அவர் கூறியது: டெண்டுல்கர் ஓபஸ் புத்தகம், எனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த புகைப்படங்களின் தொகுப்பு. இது சுயசரிதையும் அல்ல; வாழ்க்கை வரலாறும் அல்ல. இப்புத்தகத்தில் எனது ரத்தம் இடம் பெற்றிருக்கும் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது. இந்தச் செய்தி வெளியான போது, நான் காலேவில் நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தேன். போட்டியில் கவனம் செலுத்தியதால், இது பற்றி தெரியவில்லை. கடந்த வியாழக்கிழமை தான் இது பற்றி அறிந்தேன். இப்புத்தகம் அனைவரும் வாங்கும் விதத்தில் பல்வேறு விலைகளில் வெளிவரும். தவிர, இந்தியாவில் உள்ள நூலகங்களுக்கு இப்புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.
இவ்வாறு சச்சின் கூறினார்.
கிரேகான் மீடியா "பல்டி':
கிரேகான் மீடியாவும் இதே கருத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் போவ்லர் கூறுகையில்,"" நான் கூறிய கருத்துக்கள், பத்திரிகை மற்றும் "டிவி'களில் தவறுதலாக வெளிவந்து விட்டது. "டெண்டுல்கர் ஓபஸ்' புத்தகத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெறவில்லை,'' என்றார். 

சரி தலைவா, நீங்க மறுப்பு சொன்னதையும் உடனே நம்ம blog இல் போட்டாச்சு.  வடிவேலு சொல்ற மாதிரி நீங்க ரொம்ப நல்லவரு, அதனால உங்களுக்கு எதுக்கு இந்த ரத்தம், ரகளை எல்லாம்? 

நன்றி: தினமலர்.காம்

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்