ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் டகஹிரோ புஜினுமா எனும் 37 வயது வெட்டி officer கைதாகி இருக்கிறார். அவர் செய்த குற்றம்? வேலைவெட்டி இல்லாமல் telephone directory யை வைத்துக்கொண்டு ஒவ்வொரு பெண்ணாகக் கூப்பிட்டு "டார்லிங்" என்று ஆரம்பித்து ஏதேதோ உளறிக்கொண்டு இருந்திருக்கிறார். இதுவரை சுமார் 2600 பெண்களைக் கூப்பிட்டு இதே பாணியில் கலாய்த்திருக்கிறார். போலீஸ் இவரைப் பிடித்தவுடன், "இந்த மாதிரி பெண்களுடன் பேசும் போது அவர்கள் என்னைக் கண்டபடி திட்டுவார்கள், அவர்கள் திட்ட ஆரம்பித்தவுடன் எனக்கு மிகவும் சுகமாக இருக்கும்" என்று சொல்லியிருக்கிறார். மறை கழண்டு எப்படி எல்லாம் அலைகிறார்கள் பாருங்கள்!
காலை Japan இல் காஃபி, மாலை New York இல் காபரே, இரவில் Thailand இல் ஜாலி!, இனிமேல் நமக்கென்ன வேலி? என்றும், என்றும் இன்ப மயம்!