உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அனில் அம்பானி சமீபத்தில் Reliance Power நிறுவனத்தின் IPO (Initial Public Offer) வை அறிவித்தார். ஒரு பத்து ரூபாய் share இன் விலையை ரூபாய் 405-450 வரை நிர்ணயம் செய்தார். ஜனவரி 15 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை பொதுமக்கள் இதற்க்கு விண்ணப்பிக்கலாம் என்றும், மொத்தம் open market இல் வசூலிக்கப்படும் பணம் ரூபாய் 11500 கோடி என்றும், இந்தியாவின் மிகப் பெரிய IPO இது என்ற அறிவிப்புடன் விளம்பரமான விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
IPO முதல் நாளன்று மேற்குறிப்பிட்ட தொகை 14 முறை oversubscribe செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை வசூலான தொகை ரூபாய் 1,32,100 கோடி (ஆமாம், ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் கோடி) ! 18 ம் தேதிக்குள் இன்னும் எவ்வளவு வசூலாகும் எனத் தெரியவில்லை. இந்தியா ஏழை நாடு என்று யார் சொன்னது? இந்தியா ஏழைகளைக் கொண்ட நாடு, அவ்வளவுதான்!
இதைப் படிக்கும் போது எனக்கு Beatles இன் பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது: "the rich get richer and the poor get...children" எவ்வளவு பொருத்தமான பாட்டு? இதைபோன்ற பிரமாதமான பாட்டுக்களை எழுதிய John Lennon அநியாயமாக அவர் வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டது (டிசம்பர் 8, 1980) வேறு கதை!

Comments