Skip to main content

இந்தியாவில் தலை விரித்தாடும் கிரிக்கெட் பைத்தியமும், அதில் புரளும் கோடிகளும்!

இந்தியாவின் கிரிக்கெட் வாரியமான BCCI சமீபத்தில் IPL (Indian Premier League) என்ற அமைப்பை ஏற்படுத்தி, அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கால்பந்துக்கு நிறைய தனியார் leagues இருப்பதைப் போல இங்கு கிரிக்கெட்டுக்கு இருக்க வேண்டும் என்ற காரணத்தாலும், Zee TV குழுமத்தின் (conglomereate) போட்டி அமைப்பான ICL (Indian Cricket League) வளரக்கூடாது என்ற எண்ணத்திலும் மிகத்தீவிரமாக முயன்று, மாநிலம் வாரியாக ஏலத்தின் மூலம் ஆட்களைத் தேர்ந்தெடுத்தது.

இந்த ஏலத்தின் மொத்தத் தொகை (through lowest bidding) ரூபாய் 1577 கோடி! ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறைந்த பட்சம் ரூபாய் 200 கோடி என்ற கணக்கில் இந்த ஏல அறிவிப்பு வந்தது. நிறைய "ஏழைகள்" நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு இதற்கு முயன்று, இதன் மூலம் வசூலான தொகை ரூபாய் 2853 கோடி! அடங்கொன்னியா என்று நீங்கள் வாயைப் பிளப்பதற்கு முன் இன்னும் ஒரு கொசுறுத் தகவல்; டீவீ விளம்பர உரிமைகளை விற்றதன் மூலம் கிடைத்த தொகை ரூபாய் 1200 கோடி! ஆக, இன்னும் ஒரு போட்டி கூட நடத்தாமல் BCCI இதன் மூலம் ரூபாய் 4000 கோடிக்குமேல் (US $1 Billion) சம்பாதித்து விட்டது!

இதோ சில வெற்றி பெற்ற ஏழைகள்:
1. மும்பை அணி : ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி-ஏலத்தொகை: Rs.441 கோடி
2.கொல்கட்டா அணி : இந்தியாவின் பெரிய ஏழை நடிகர் ஷாருக்கான்-Rs.296 கோடி
3.சென்னை அணி: இந்தியா சிமெண்ட் உரிமையாளர் திரு N ஸ்ரீனிவாசன்-ஏலத்தொகை
Rs.360 கோடி
4.பெங்களூரு அணி: விஜய் மல்லய்யா (வேறு யார் தொடமுடியும்?)-Rs. 448 கோடி
5. ஹைதராபாத் அணி: Deccan Chronicle-Rs. 428 கோடி
6.மோஹாலி அணி-இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா (கடவுளே காப்பாத்து!)- Rs. 304 கோடி

இப்படி இன்னும் பல அணிகள். ஆக, ஒன்று நிதர்சனமாகத் தெரிகிறது, பணம் பணத்தோடுதான் சேரும்! சேருகிறது. எனக்கென்னமோ, சென்னை அணிக்கு நம் சூப்பர் ஸ்டார் bid செய்திருக்கலாம். அது சரி, அவருக்கு தெரியாத விஷயமா?

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

'சுஜாதா - எழுத்தின் கோட்பாடு' - சுஜாதாவின் படைப்புகள் பற்றிய புதிய பார்வையில்  ஒரு புத்தகம் 

சுஜாதாவின் சுவாரஸ்யமான படைப்புகளில் 50 படைப்புகளைத் தேர்வு அவற்றைப் பற்றி என்னுடைய பார்வை ' சுஜாதா - எழுத்தின் கோட்பாடு ' என்ற பெயரில் புத்தகமாக விரைவில் வருகிறது. இந்தப் புத்தகத்தில் சுஜாதாவின் தேர்ந்தெடுத்த கதைகள் / நாடகங்கள் / திரைப்பட வசனங்கள் பற்றிய பார்வை மட்டுமே இருக்கும். சற்று வித்தியாசமாக, புத்தகத்தின் முகவுரையாக 'சுஜாதாவுடன் நான்' என்ற பெயரில் சுஜாதாவுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்த சில பிரபலங்கள் தங்களுடைய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். புத்தக வெளியீடு தேதி போன்ற விவரங்கள் இங்கு விரைவில் பகிர்ந்துகொள்ளப்படும். அச்சுப் புத்தகத்திற்கு என்றும் தீவிர ரசிகர்கள் இருப்பதால் அச்சுப் புத்தக விற்பனைக்கு மட்டும் முழுக்கட்டணத்துடன் முன் பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும். முன் பதிவு செய்பவர்களுக்கு வீட்டுக்கு Speed Post மூலம் புத்தகம் அனுப்பிவைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.