26/01 இரவு என்டிடீவியில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். அவற்றின் சில சுவாரசியமான பதிவுகள்:
ரஜினிகாந்த் பிரமாதமான நடிகர் இல்லை என்று நான் சொன்னால் எனக்கு கை, கால் உடைந்துவிடும். எனவே, அவருடைய நடிப்பைப் பற்றிச் சொல்லாமல் அவருடைய பேச்சுத் திறமையைப்பற்றி பேசலாம்.
அதற்கு முன் ஷாருக்கான் சிறப்பு (ஸ்பெஷல்) NDTV Entertainer of 2007 awardஐப் பெற வந்த போது, பேட்டி கண்ட பெண் அவரிடம் நீங்கள் ஏன் அரசியலில் குதிக்கக் கூடாது என்று கேட்டதற்கு அதில் மாட்டிக்கொள்ளாமல், "அரசியலில் இருப்பவர்கள் எல்லோரும் நல்ல திறமைசாலிகள், புத்திசாலிகள் என்பதால் எனக்கு அரசியலில் இடமில்லை, என்ன, இந்த அரசியல்வாதிகளை விட நான் சற்று அழகாக இருப்பதால் சினிமாவுக்கு வந்துவிட்டேன்," என்று நன்றாக சமாளித்தார். அவரிடம் யாராவது கேள்வி கேட்கலாம் என்ற போது, ராகுல் காந்தி, "அரசியல்வாதிகளுக்கு ஏதாவது அறிவுரை சொல்லுங்கள்," என்றதற்கு, ஷாருக் ரொம்ப சுருக்கமாக, "be honest, as realistically as possible, " என்று சொல்லி கைதட்டல்களுடன் அமர்ந்தார்.
பிறகு நம் சூப்பர் ஸ்டாரை அழைத்து பிரதமர் மன்மோகன் சிங் கையால் "NDTV Best Entertainer 2007 award கொடுக்க, அத்தனை suit, kurtha, shervaani களுக்கு நடுவே, மிக simple ஆக ஒரு ஜிப்பாவுடன் மேடையேறிய ரஜினி, பிரதமர் கையால் விருது வாங்குவதை மிகப் பெருமையாக நினைப்பதாகச் சொல்லிவிட்டு, பிரதமரை ஒரு அரசியல் ஞானி (political saint)என்று புகழ்ந்தார். ரஜினியை பேட்டி கண்டவர், நீங்கள் சென்னை நகரைவிட்டு வெளியே கிளம்பினாலே ஊர் ஸ்தம்பித்து விடுகிறதாமே என்று கேட்டதற்கு அதெல்லாம் மீடியாகாரர்கள் கிளப்பும் புரளி என்றார். பிறகு, நீங்கள்தான் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராமே என்று கேட்டதற்கு உடனே அதெல்லாம் பொய் என்றார், நிருபர் விடாமல் ஏன் நிதி அமைச்சர் சிதம்பரம் இங்கு இருப்பதால் இந்த பதிலா என்றதற்கு சிரித்து மழுப்பிவிட்டார்.
ரஜினியிடம் யாரவது கேள்வி கேட்கலாம் என்றவுடன் ஹிந்தி இயக்குனர் கரன் ஜோஹர எழுந்து, "Is there anything that Rajini Can't do?" என்று கேட்டதற்கு ரஜினி சிரிப்புடன் நின்று விட, ஜோஹர் விடாமல், "உங்களுக்குமிகவும் பிடித்த ஹிந்தி நடிகர் யார்?" என்ற கேள்விக்கு தயங்காமல் "அமிதாப் பச்சன்" என்றார். நிருபர் உடனே ஆமாம் நீங்கள் பாட்ஷா என்றால் அவர் ஷாஇன்ஷா என்றார், பிறகு அவரே தொடர்ந்து இங்கு மேலும் ஒரு பாட்ஷா இருக்கிரார் என்றதற்கு ரஜினி உடனே ஷாருக்கைக் காட்டி அதோ அவர்தான் என்றார்.
உடனே எழுந்த ஷாருக் தான் ஷாஇன்ஷா ஆவதற்கு என்ன செய்யவேண்டுமெனக் கேட்க, ரஜினி நீங்கள் கூடிய விரைவில் ஆகிவிடுவீர்கள் என்று சிரித்துக் கொண்டே சொல்ல ஏக கலாட்டா.
தமிழ்நாட்டிலிருந்து விஸ்வநாதன் ஆனந்த் (பெஸ்ட் ஸ்போர்ட்ஸ் பெர்சன்) தவிர , ஏ ஆர் ரஹ்மான், ரஜினிகாந்த் என்று விருதுகள் கொடுத்து இந்தியாவில் சினிமா என்றாலே bollywood தான் என்ற மாயையை உடைத்த NDTVக்கு நன்றி! .
Comments